September 29, 2017

வாழ்க நீ எம்மான்!

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, காந்திஜி சம்பந்தமான   ஒரு பதிவைப் போடுகிறேன்.
                                                                           டியர் ஃப்ரண்ட்!
1939-ம் ஆண்டு. சொக்கோஸ்லாவியா நாட்டை ஜெர்மனிவளைத்து விட்டது.  அது உலகப்  போருக்கு  பிள்ளையார் சுழி போட்டது. எல்லா ஹிட்லரின் கைங்கரியம்.
போர் மூளாதிருக்க ஒரே வழி ஹிட்லரின் கையில் தான் இருக்கிறது என்று மகாத்மா காந்தி  கருதினார். ஹிட்லருக்குக் காந்தி ஒரு கடிதம் எழுதினார்.

மனித சமுதாயத்தின்  நலனுக்காகப்   போரைத் தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் எழுதிய கடிதம் ஹிட்லருக்குப் போகவில்லைஅதைப் போகவிடாமல் பிரிட்டிஷ் அரசு தடுத்து விட்டது.
 அடுத்த  ஒரு மாதத்தில் போலந்தின் மீது ஜெர்மனி படை  எடுத்தது. அது இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தது.
காந்திஜி எழுதிய கடிதத்தின்போட்டோகா பியைப் பாருங்கள்!
       (என்னால் முடிந்த அளவுக்கு கடிதத்தைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்!)
---------------


September 19, 2017

POPCORN

 புதுத்தமிழ்                 
     பத்திரிகைகள் பல புதுத் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, அந்த வார்த்தைகளை தமி மொழியில் சேர்ந்துவிட்டன.
     இதில்  தினத்தந்திக்கு  முதல் மார்க் கொடுக்கலாம் என்பேன்வெங்காய சருகு, சேலை என்ற வார்த்தை சட்டென்று நடிகையை அல்லது   கிளு கிளு தோற்றத்தை வீடியோவாகக் கொண்டு வந்து விடுகின்றன. அதுபோல்சதக்என்றதும் நம் மேலேயே ரத்தம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
     குமுதம் இதழின் கண்டுபிடிப்பு  ‘கிசுகிசு’. (இன்னும் கொஞ்ச நாளில்கிசுகிசுஎன்ற பெயரில் ஒரு பத்திரிகையே வரக்கூடும்.)

     அமெரிக்காவில் நாடகம் மற்றும் சினிமா சம்பந்தமான செய்திளை வெளியிடும் இதழ் VARIETY. 1905-ல் துவக்கப்பட்டது.
     நியுயார்க்கில் பிராட்வே என்ற வீதியில் நிறைய நாடக அரங்குகள்  உள்ளனஒரு சில நாடகங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து  நடைபெறுகின்றன. அந்த இதழில் நாடக விமர்சனங்களில் வார்த்தை விளை யாட்டுகள் அபாரமாக இருக்கும். சில சமயம் புரியாவிட்டாலும், நாளடைவில் புரியும்படி செய்துவிடுவார்களாம். சுமார் பத்து 
வருஷங்களுக்குப் பிறகு வெரைட்டியை  சினிமா பத்திரிகையாக மாற்றிவிட்டார்கள். விளம்பர வருவாய் அதிகரித்தது. 1933-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கிளையைத் துவக்கியது.
     இன்று நாம் உபயோகிக்கும் பல வார்த்தைகள் வெரைட்டி உருவாக்கியவை.  அவைகளில் சில: ஃபளாப், Whodunit (மர்மப்படம்) Smash. ஏன்,மூவிஸ் என்பதும் SITCOM, DRAMEDY, (காமெடி டிராமா) பஞ்ச்லைன்ஸ்ட்ரிப்-டீஸ், ஜிங்கிள், வாய்ஸ்-ஓவர் முதலியன  அவர்களுடைய   கண்டு பிடிப்பு  ஆகும்

September 09, 2017

ஒரு சுவரும் நான்கு காதுகளும்

இஸ்ரேல் நாட்டு எழுத்தாளர்  எஃப்ரெய்ம் கிஷோனின்   (EPHRAIM KISHON) நகைச்சுவை கட்டுரைகளைப் பற்றியும், அவர் எழுதிய Mr. BLOT புத்தகத்தைத் 
தேடி அலைந்த விவரங்களையும் (பிரபல 
நியூயார்க் ஸ்ட்ராண்ட் BOOKS எனும் பிரம்மாண்டமான புத்தகசாலையில் இருப்பது தெரிந்து, அங்கு மறுதினம்  காலை சென்று  தேடிய போது,முன்னாள் இரவு ஷாப் மூடும் நேரத்தில் ஒருவர்  வாங்கிச்சென்று  விட்டார்  என்று  அறிந்து,  ஏமாற்றத்துடன்   திரும்பிய  விவரங்களை எல்லாம் எழுதியிருக்கிறேன். 
  அதற்கு ஈடு செய்யவோ என்னவோ சமீபத்திய BOOK SALE  ஒன்றில், அவர் எழுதிய MY FAMILY RIGHT OR WRONG  என்ற   புத்தகம்   கிடைத்தது. (விலை அரை டாலர்). 1983 –ல்  பிரசுரமானது. புது   மெருகு   குறையாமல்   இருந்தது.

    நம்பமாட்டீர்கள், அது PIERRE DANINOS என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய கட்டுரைகள் மாதிரியே,  தன்   மனைவியை  வைத்துப்   பின்னப்பட்ட  நகைச்சுவைக்  கதைகளாக  (அல்லது கட்டுரைகளாக) இருந்தன. தற்பெருமை அடித்துக் கொள்வதாகக் கருதாதீர்கள், அவை என்னுடைய கமலா, தொச்சு   கதைகளைப் போல (சுவையாக ?) இருந்தன.

 ஹீப்ரு மொழியில் 30 புத்தகங்களுக்கு மேல்   எழுதியவர் கிஷோன். இவரது புத்தகங்கள் 25 உலக மொழிகளில் வெளி வந்துள்ளன. 1983ம் ஆண்டு புள்ளி விவரம் தெரிவிக்கும் தகவல்: கிஷோனின் புத்தகங்கள் விற்பனை இரண்டே முக்கால் கோடியாம்.
 அவருடைய புத்தகத்தில் 71 கட்டுரைகள் உள்ளன. ஒரு  கட்டுரையை தமிழ்ப்படுத்தித்  தருகிறேன் - சொந்த சரக்கையும்  சேர்த்து!
###########

             ஒரு சுவரும் நான்கு காதுகளும்!! 
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  நாங்கள் எப்போதும் நட்பாகத்தான் இருப்போம்.   முக்கியமாக இப்போது எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் FELIG குடும்பத்துடன்அவர்களை கண்டாலே எங்களுக்கு  எரிச்சலும் அசூயையும்  ஏற்படும்   என்கிற  உண்மையையும்  இங்கு கூறிவிடுகிறேன். அவர்களிடம் உள்ள ஒரு முக்கிய குறை ரேடியோ. அதைத் தப்பாகச் சொல்லக் கூடாது; அதைக் கையாளும் FELIG தான் முக்கியக் காரணம்.
     சரியாக சாயங்காலம் ஆறு மணிக்கு, ஆபீஸிருந்து வந்ததும், நேராக ஹால் மேஜை மேல்  வைத்திருக்கும் ரேடியோவின் காதைத் திருகுவார். வலி தாங்காமல் அது அலறும். பாவம் வாயில்லா ஜீவன். அது எவ்வளவு நாராசமாகக் கத்தினாலும், அவருக்கு கவலையில்லை. பாட்டோ, நாடகமோ, செய்தியோ எதுவாக இருந்தாலும், பயோ கெமிஸ்ட்ரி போன்ற புரியாத விஷயங்களாயினும் சரி, அவர் ரேடியோவை  நிறுத்தமாட்டார். உரக்கவும் தெளிவாகவும் அலறல் வந்தால் அதுவே அவருக்கு இன்பத் தேனாய் காதில் பாயும்.
அவர் வீட்டு ரேடியோ எங்களுக்கும் தெளிவாகக் கேட்கும். எங்கள் வீட்டில் யாரும் ரகசியம் பேச முடியாது. ந்த ரேடியோவின் கத்தலில் உரக்கப் பேசினாலே மற்றவர் காதில் விழாது என்று இருக்கும்போது ரகசியமாவது, மண்ணாவது!
     என் மனைவி அவர்கள் வீட்டிற்குச் சில சமயம் போய் வருவது உண்டு, முக்கியமாக வீட்டில் சர்க்கரை தீர்ந்துவிட்டால், ஒருகப்பை   எடுத்துக் கொண்டு, கடன் வாங்கி வரப் போவாள்.
     இப்படி போய் வந்ததும் அவளுக்கு   ஒரு முக்கிய விஷயம் அந்த ரேடியோவைப் பற்றி தெரிந்தது. மண்டையை வலிக்கும் அளவுக்கு எங்கள் வீட்டில் கேட்கும் அந்த ரேடியோவின் அலறல், அவர்கள் வீட்டில் அவ்வளவு உரக்கக் கேட்கவில்லையாம்.
     இது ஒரு புதிர். எங்கள் வீட்டுச் சுவர் ஒற்றைக்கல் சுவர். பெயருக்கு ஒரு மெல்லிய சுவர் (கான்ட்ராக்டர் இப்படிப் பல விதத்திலும் செலவைக் குறைத்திருக்கிறார்.) நம்பமாட்டீர்கள், அந்த அறையில் போய் டிரஸ் கூட மாற்றிக் கொள்ள மாட்டோம். அது கிட்டத்தட்ட  ‘ஸீ-த்ரு’ சுவர் என்றுதான் நாங்கள்   கருதுகின்றோம்! விளக்குப் போட்டுக் கொண்டு, உடை மாற்றினால் சுவரில் நிழல் விழுந்து, shadow-play திரைப்படம் மாதிரி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியும் என்று அஞ்சி, அந்த அறைப் பக்கமே போக மாட்டோம்.
     இதனாலும், ரேடியோ அலறலாலும் எங்களுக்கு எட்டிக்காயாக அவர்கள் இருந்தார்கள்.
      சுவர் பிரச்னைக்குத் தீர்வு இல்லை. நாம் ஒன்றும் செய்ய முடியாது அது போகட்டும்.  அந்த பாழாய்ப் போன ரேடியோவின் இம்சையிலிருந்து எப்படித் தப்பிப்போம் என்று தெரியாமல், தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தோம்.
              அப்போது அந்த அற்புதம் நடந்தது.....     


September 01, 2017

துணுக்கு மணிகள்

சமீபத்தில் LEO ROSTEN எழுதிய 400 பக்க புத்தகம் எனக்குக் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் People I have loved, known and admired. 37 அபாரமான கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்திப் போட வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. பின்னால் பார்க்கலாம்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சில குட்டித் தகவல்களைத் தந்திருக்கிறார். அவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.
RENOIR என்று ஒரு பிரபல ஓவியர் இருந்தார். அவர் தன் வீட்டுப் பணிப் பெண்ணாக GABRIEEL என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். அந்தப் பணிப்பெண் சற்று களையான முகம் கொண்டவராக இருந்ததினாலோ என்னவோ, அவளை மாடலாக இருக்கச் சொல்லி படம் வரைந்தார். படம் நன்றாக வந்தாலும் ஏதோ அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை

அந்தப் பெண்ணின் சருமத்தின் நிறத்தில் ஏதோ கவர்ச்சியை அவர் கண்டார். தான் வரைந்த ஓவியத்தில் அது வெளிப்படவில்லை. அதனால் அவளை மீண்டும் வரைந்தார். அதுவும் சரியாக வரவில்லை.  RENOIR-  ஏதோ ஒரு வெறி பிடித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் அவளை வரைந்தார்; திருப்தி ஏற்படவில்லை. இப்படி அவர், அந்தப் பெண்ணை மட்டும் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கை, நம்புங்கள், 300-க்கும் மேல்!
RENOIR-ஆவது பரவாயில்லை. அந்தப் பெண்ணின் முழுமையான அழகு தனது ஓவியத்தில் வராததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் வரைந்தார்.