ஜிம் சொன்னான்: "நான் குடித்திருக்கலாம். ஆனால் இந்த மாதிரி உண்மையை அவர்கள் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் உலகம் தோன்றி இத்தனை பெரிய அதிசயம் இதுவரை எங்கும் நிகழ்ந்ததே இல்லை.... நான் ஒரு பெரிய திட்டம் வைத்திருக்கிறேன். நீங்கள் ‘ம்’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்; கோடி கோடியாக உங்கள் காலில் கொட்டுகிறேன் பணத்தை!"
“பணமா..?” முல்லி பேச்சில் நாசூக்காகக் கலந்துகொண்டாள்.
"ஆமாம்; எக்ஸிபிஷன், வொர்ல்ட் டூர் எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்!'
*அதெல்லாம் எதற்கு? நான் பேசாமல் என் சொந்த ஊரான யார்க்ஷையருக்குத் திரும்பிப் போகலாம் என்று நினைக்கிறேன்!" என்றார் ஸாம்.
“ஏதாவது தத்துப்பித்துன்னு பேச வேண்டாம்; நான் சொல்லுகிறபடி கேளுங்கள்!' என்றாள் முல்லி.
'பறக்க வேண்டியவன் நான்; ஆகவே நான் சொல்லுகிறபடிதான்..." என்று ஸாம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
முல்லி குறுக்கிட்டு, ''அடாடா, இந்த மனுஷனுக்கு மூளை ஏன் இப்படித் திடீர்னு வக்கரித்துக் கொள்ள வேண்டுமோ, தெரிய8லயே!.. சரி சரி, இத்தனை நாளாக இல்லாமல் இது என்ன புது வழக்கம்?.... நான் பார்த்துக்கறேன்!' என்று ஒரு போடு போட்டதுதான் தாமதம், ஸாம் வாயை மூடிக்கொண்டார்.
"நியூயார்க் மாடிஸன் அவென்யூவின் பரந்த மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டம் தயாரானதும், உங்களுக்கு நான் பிளேன் டிக் கெட் வாங்கி அனுப்புகிறேன்!" என்றான் ஜிம்.
"ஸாமுக்கு டிக்கெட் ஏன்? நாம் பிளேனில் போவோம்; அவர் அந்தப் பிளேனுக்குப் பின்னல் பறந்து வரட்டும். டிக்கெட் செலவு மிச்சமாகும்!" என்றாள் முல்லி.
"அதெல்லாம் கூடாது; ஸாம் அதிக நேரம் பறந்தால் ஆபத்து ஏற்படலாம்' என்று ஜிம் கடைசியாகக் கூறியதை முல்லி ஒப்புக்கொண்டாள்.
நியூயார்க்கிலிருந்த ஒரு பிரம்மாண்டமான ஓட்டலில் ஸாம் குழு தங்கியிருந்தது. ஹோட்டல் அறை வழிய வழிய வந்து சேர்ந்த நிருபர்கள், போட்டோகிராபர்கள், டெலிவிஷன்காரர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்.
“மனிதனாவது, பறப்பதாவது!...”