April 06, 2017

மிஸ்டர் பஞ்சு: எலக் ஷனுக்கு நில்லுங்க!

சார் நாங்கள் எல்லாருமாக "டிஸைட்பண்ணி விட்டோம்... இருபது வருஷமாக நம்ப ஊரில் முக்கியப் புள்ளியாக இருந்து வர்றீங்க... நீங்கள் தான் நம் வார்டுக்கு முனிசிபல் கவுன்சில் எலெக் ஷனுக்கு நிற்கணும்'' என்று மணி சொன்னான்மிஸ்டர் பஞ்சுவிடம்.

ஆமாம் சார்இது எங்களுடைய ஏகமனதான விருப்பம்'' என்று கோபுஸ்ரீரங்கன்சிட்டி முதலியவர்கள்  பின்பாட்டு ஊதினார்கள்.
ஏனய்யா காலை வாரி விட வேறே ஆள் கிடைக்கலையாபோங்கய்யாஅவங்க அவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு'' என்றார் பஞ்சு
பஞ்சுவின் இல்லத்தில் வராந்தாவில் குழுமியிருந்த ஜமா, ’ஜக்கு’'கிற  வழியாக இல்லை!
"சீரியஸாகப் பேசுகிறோம்லைட்டாகத் தூக்கிப் போட்டு விடுகிறீங்களேஇன்டிபென்டன்டாக எலெக்ஷனுக்கு நில்லுங்கநாங்க எல்லாரும் உயிரை விட்டு வேலை செய்கிறோம்
"உயிரைத் தவிர உங்களிடம் என்ன இருக்கிறது'என்று ’ஜோக்'  அடிக்காதீர்க'' என்றான் கோபு.
தேர்தலில் நிற்கிறது என்பது என்ன சாதாரண காரியமாஎன்னஎவ்வளவோ கன்சிடரேஷன்ஸ் இருக்கிறதுமுதலாவது மணி-'' என்று பஞ்சு கூற...
இதோ இருக்கிறேன் ஸார், மணி!'' என்று மணி சொன்னான்.
நீ செல்லாக் காசுநான் சொன்னது மணி... பணம்எக்கச்சக்கமாகச் செலவு ஆகுமே!'' என்றார் பஞ்சு.
ஆக்சுவலி.. இதில் செலவு என்று பார்த்தால் இரண்டாயிரத்துக்கு மேலே போகாது'' என்றான் ஸ்ரீரங்கன்.
இரண்டாயிரம் பைசாவுக்கு வழி கிடையாதே!'' என்றார் பஞ்சு.
உங்களுக்கு எதுக்கு சார் கவலைஒரு உதவி நிதி சேர்த்துவிட மாட்டோமா?'' என்று கேட்டான் கோபு.
பஞ்ச நிதி ஆயிற்றுஇப்போது பஞ்சு நிதி'' என்று கேலியாகக்  கூறினான் ராமு.
பஞ்சு சார்நேற்று சங்கத்திலே கூட ரொம்ப நேரம் "அனலைஸ்செய்தோம்ஜனங்களுக்கு இப்போது "சிட்டிங் மெம்பர்சுந்தரம் பேரில் ஏகப்பட்ட வெறுப்பு'' என்றான் சீனன்.
சிட்டிங் மெம்பர் இல்லை சார்அவர் சீட்டிங் மெம்பர்'' என்றான் சிட்டி.
செகண்ட்லி நம்ப வார்டுக்கு எந்தக் கட்சியும் கேண்டிடேட்ஸ் போடவில்லைநிற்கப் போகிற எல்லாரும் சுயேச்சைதான்ஒரு சில கட்சிகள் சிலருக்கு ஆதரவு தருகின்றனஅதனால் நீங்களும்  சுயேச்சையாக நில்லுங்கநெல்லு மிஷின் நீலமேகம் 101 ரூபாய் டொனேஷன் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்'' என்று சொன்னான் வெங்கு.
ஒருவர் மாறி ஒருவர் பஞ்சுவைப் பேச விடாமல் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
சார்இந்த வேளைக்கு உங்களிடம் கார் இருக்கிறது-''
எங்களிடம் தோளில் வலு இருக்கிறது-''
மூர்மார்க்கெட்டுக்குப் போய் ஐந்தோ பத்தோ கொடுத்துப்    பழைய டயரை வாங்கிக் காருக்கு0 போடுங்கஎலக் ஷன் வரைக்கும்   உழைக்கும்.''
அப்புறம்அதிலேயே நீங்கள் நாலு ஜோடி செருப்புத் தைத்துக் கொண்டுவிடலாம்.''
பஞ்சுவுக்கே உங்கள் ஓட்டு!'' என்று தேமதுரத் தமிழில் தெரு
வெல்லாம்
 முழக்க நாங்கள் இருக்கிறோம்.''
ஆக்சுவலி... சார்நீங்கள் அனுமார் மாதிரிஉங்கள் பலம் உங்களுக்கே தெரியாது!''
உலகம் அழுகிறதுடிராமாவின்போது நீங்கள் பீகார் பஞ்சத்தைப் பற்றி எவ்வளவு டச்சிங்காகப் பேசினீர்கள்இன்னிக்கும் ஊரில் அதையே பேசிக் கொண்டு இருக்காங்க...''
கூட்டுறவு புண்ணாக்குக் கடை உங்கள் முயற்சியால் திறக்கப்பட்டதால்ஊரெல்லாம் - இன்க்ளூடிங் எருமை மாடுகள் - உங்களைப்  பற்றிப் பெருமையாகப் பேசறங்க.''
சொன்னால் நம்ப மாட்டீங்கஇரும்புலியூர் போயிருந்தேன் போன வாரம்ஆக்சுவலிபஞ்சு சார் பேரில் ஒரு கோவாபரேடிவ் ஆலையே திறந்திருக்காங்க.''
இஸ் இட்நம்ப பி.பிசிங்காரத்திடம் விஷயத்தைச் சொன்னால் பி.பி.சிமாதிரி பிரமாதமாகப் பப்ளிசிடி செய்துடமாட்டானா?''
 பி.பி.சிமைக்கை நம் எலெக்ஷன்  மீட்டிங்குக்கு   வைக்க வேண்டாம்ஒரே சங்கு பிடிக்கும்.''
வெற்றிச் சங்கு... சங்கநாதம் என்று வைத்துக் கொள்ளலாமே.” ஆமாம்ஏய் ஆக்சுவலிஇருபம்புலியூரில் என்ன ஆலை அது?''
என்ன ஆலை என்பது எனக்குத் தெரியாதுசைக்கிளில் போகும்போது போர்டைப் பார்த்தேன்கூட்டுறவுப் பஞ்சு ஆலை-''
டேய்அது பஞ்சு - காட்டன் ஆலைஅதற்கும் நம்ப சாருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை''
ஆனால் நாம் சம்பந்தம்உண்டாக்கிக் கொள்ளலாம்இவர் பேரில்தான் ஆலையை வைத்திருக்காங்க என்று நாம் பிரசாரம் செய்யறதுஇல்லையென்று எதிர் கேன்டிடேட் சொல்லி
க்கொண்டு
 வரட்டுமே''
நிறுத்துங்கநிறுத்துங்கநிறுத்துங்கநான் ஒருத்தன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்நீங்க தலைக்குத் தலை பேசிக் கொண்டு போறீங்கநான் எலக்ஷனுக்கு நிற்கப் போகிறதில்லை'' என்று பொரிந்தார் பஞ்சு.
நோ நோஅப்படிச் சட்டென்று சொல்லக் கூடாதுஆர அமரநின்று நிதானிச்சு யோசனை செய்யுங்கஇன்னும் நாமினேஷன் கொடுக்க நிறைய டைம் இருக்கு'' என்றான் மணி.
பஞ்சுவுக்குக் கொஞ்சம் சபலம்எத்தனையோ வருஷங்களாக ஊரில் பல நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருக்கிறார் அவர்நல்லதோ கெட்டதோ அவரைப் பற்றிப் பலர் அறிந்திருக்கிறார்கள்மேலும் நண்பர்கள் குழாம் காதையும் கடிக்கும்பேனையும் எடுக்கும் என்பது   அவருக்குத் தெரியும்!
பஞ்சு யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்த ஜமா அமைதியாக இருந்தது.
சார்நீங்கள் நாளை ராத்திரி ஃபைனல் முடிவு சொல்லுங்கஉங்க முடிவுக்கு மேல் அப்பீல் கிடையாது.'' என்றான் இளம் அட்வகேட் சந்தானம்.
கோர்ட்டு இத்துடன் கலையும்'' என்றான் சிட்டி.

விடிந்ததும் விடியததுமாகப் பால்கார வேதாசலம் வாசல் திண்ணையில் இருந்த பஞ்சுவைப் பார்த்து கும்பிடு போட்டான்.
என்ன வேதாசலம் எப்படி இருக்கிறேஎன்ன சமாசாரம்?'' என்று கேட்டார் பஞ்சு.
நல்ல சமாசாரம் தானுங்கஎல்லாரும் தெம்பாகத்தான் பேசிக்கறாங்கஉங்களுக்கு என்னங்க கெலிக்கறதுக்கு?''
என்னாப்பாபுதிர் போடறே?''
சாமி இமிடேஷன் பேப்பர் கூடக் குடுத்துட்டதாகப் பேசிக்கிறாங்கஒண்ணும் தெரியாத மாதிரி பேசறீங்க... சாமி... நீங்கள் ரவை கூட யோசனை பண்ண வேண்டாம். "இன்ப்ளாக்'கா நாங்க நானூறு ஓட்டு அப்படியே ஐயாவுக்குத் தான்-''
அடே எலெக்ஷனுக்கு நான் நிற்கப் போகிறதாக யார் சொன்னதுஅதெல்லாம் இல்லை.''
சாமி சிதம்பரத்தின் மேலே ஏகப்புகாருநீங்க நில்லுங்க சாமி... கண்ட கண்ட கயிதை யெல்லாம் நிக்கும்போது நீங்க ஏன் யோசிக்கணும்?''
சரி... சரி... பார்க்கலாம்; நான் நின்றால் உங்கள் ஓட்டு எனக்குத்தானே?''
வெட்டிப் போடு என்னைஎங்களவங்க பேச்சுப் பெரண்டாங்கன்னாஆனால் ஒரு விஷயம்ஒரு "குளுகுடுக்கறேன்எங்க காலனியிலே குளாய் இல்லமே ஜனங்க தவிக்குதுஒரு குளாயை உள்ளாற வலிச்சு விட்டீங்கன்னா... மொத்த ஓட்டும் உங்களுக்குக் தான்... சாமிநான் வரேன்'' என்று கூறி    விட்டுப்  போனான்.
வீட்டில் டெலிபோன் மணி கிணுகிணுத்தது.
ஹல்லோபஞ்சு சாராகங்க்ராஜ÷லேஷன்ஸ்நான் அச்சாபீஸ் துரைசாமி பேசறேன்இந்த சிதம்பரம் பயலை சிதற அடிச்சடணும்-''
சார் துரைசாமி-''
நோட்டீஸ் கீடீஸ் எல்லம் நான் ஃப்ரீயாக அடிச்சுக் கொடுத்துடறேன்நம்ப மானாம்பதி வாத்தியார் சந்துலே 500 ஓட்டு தேறும். "சாலிடாகநமக்குத் தான் விழும்.''
இல்லை சார்நான் நிற்கிறதே-.....''
இந்த சால்ஜாப்பெல்லம் வேண்டாம் ஒன் பை சிக்ஸ்டீனில் ஒரு பத்தாயிரம் நோட்டீஸ் அடிக்கும்படி பிரஸ்ஸுக்கு சொல்லி யாச்சுநாளைக்கு நோட்டீஸோட உங்களைப்  பார்க்க வரேன்'' என்று சொல்லிப் போனை வைத்தார்.

அதன் பிறகு சுமார் அரை டஜன் பேர் - முக்கியப் புள்ளிகள் - பஞ்சுவுக்குப் பலவிதமாகத் தைரியமும் ஊக்கும் கொடுத்தார்கள்.
அடுத்த ஒரு வாரம் பஞ்சுவைப் பஞ்சு பஞ்சாகப் "பிய்த்துஎடுத்து விட்டார்கள். "ஏன் இந்தத் தொந்தரவு?' என்று கூறுபவர்கள், "ஒரு கை பாருங்கள்உங்களுக்கு என்ன சார்?' என்று சொல்பவர்கள்அன்றாடம் ஐந்து ரூபாய் கொடுத்தால் வாலன்டியராக(!) உழைக்கத் தயாராக இருப்பவர்கள்மைக் கம்பெனிக்காரர்வால் போஸ்டர் ஓட்டும் கான்டிராக்டர்கள் என்று பலர் அவருடைய உயிரை வாங்கினர்போதாக் கறைக்கு ரோடு விளக்கு ஜமா வேறு!
பஞ்சுவுக்குச் சபலம்ஒரு வேளை கவுன்சிலர் ஆகிவிட்டால் அவர் இன்ஷøரன்ஸ் பிஸினஸுக்குச் சௌகரியமாக இருக்கும்இரண்டாவதுவீடு கட்டியதில் ஏற்பட்ட கடனை அடைக்கலாம் என்ற நைப்பாசைகடைசியில் எலக்ஷனில் நிற்க ஒப்புக் கொண்டார்.

வழக்கமான இடத்தில் வழக்கமான அரட்டை.
பஞ்சு சார்சண்டே மீட்டிங்கில் நீங்கள் எல்லா விஷயங்களையும் பிச்சு உதறணும்முல் மீட்டிங்கேலேயே "இம்ப்ரஸ்செய்துட்டீங்கன்னா'' என்று கோபு ஆரம்பித்தான்.
"'நம்ப வார்டுப் பிரச்னைகள் என்னென்ன என்று லிஸ்ட் போட்டு அவைகளை வெளுத்துக் கட்டணும்'' என்றான்.
வெளுத்துக் கட்டணும் என்றதும், ”ஸோல் ஏஜண்டு விநாயகத்திடம் இந்த வேலையை விட வேண்டியது தான்'' என்றான் வெங்கு.
இதோ பாருங்கோவெங்கு நம்ப பப்ளிசிடி ஏஜென்டா
இருப்பான்
சண்டே மீட்டிங்குக்கு எனக்காக ஒரு ஸ்பீச் எழுதித் தர வேண்டும்'' என்றார் பஞ்சு.
.கேசார்ஆனால் இரண்டு மூன்று விஷயங்களை நான் சேர்ப்பேன்யாரும் ஆட்சேபணை செய்யக் கூடாது'' என்றான் வெங்கு.
ரெலவன்டாக இருக்க வேண்டும்அவ்வலவு தான்காஷ்மீர்ப் பிரச்னை, இன வெறிக்கொள்கைஎம்.ஜி.ஆர்சுடப்பட்டது - அது இது என்று எல்லாவற்றையும் கொண்டு வரக்கூடாதுநம் கீழத் தெருவிலே சாக்கடை இல்லை'' என்று பஞ்சு சொல்லும்போதுசிட்டி இடைமறித்துச் சொன்னான். "சாக்கடை ஸ்பீச்சில் வெங்கு எக்ஸ்பர்ட்''
இப்படியெல்லாம் சொல்றபோது நான் ஏன் எழுத வேண்டும்?'' - வெங்கு பிகு செய்து கொண்டான்.
சைலன்ஸ்சிட்டி ஈஸ்  சில்லி ஃபெலோவெங்குநீ எழுதிக் கொண்டு வாசெகண்ட்லிமீட்டிங்குக்கு டைலர் அப்பாஜான்தலைவர்அவருக்காகவும் நீதான் தலைமையுரை எழுத வேண்டும்'' என்று வெங்குவைச் சமாதானப்படுத்தினார் பஞ்சு.
என்ன சார் இது விளையாட்டாக இருக்கிறதுஎன் ஸ்பீச்சை வேறு நான் எழுத வேண்டும்'' எண்று வெங்கு சிணுங்கினான்.
அடி சக்கைஅப்போதுநீ பேசுவதற்கு நீயே ஏற்பாடு செய்து கொண்டாயா?'' என்று ராமுகோபு இருவரும் நையாண்டியாகக் கேட்டனர்.
சார்நான் வீட்டுக்குப் போகிறேன்எலக்ஷன் முடியற வரைக்கும் என்னிடம் யாரும் வரவேண்டாம்'' என்று வெங்கு கோபித்துக் கொண்டு புறப்பட்டான்.
வெங்கு... நான் சொல்வதைக் கேளு'' என்று பஞ்சு சொல்ல...
போகிறான் சார்விடுங்கஅவனுக்கு ஓட்டு கூடக் கிடையாது''என்றான் ராமு. (ராமுவுக்கு மீட்டிங்கில் பேச ஆசை)
வெங்குலுக் ஹியர்மூன்று ஸ்பீச்சையும் எழுதி விடுஅப்பாஜான் தலைமை யுரையை நாளைக்கே அவரிடம் கொடுத்து விடு'' என்றார் பஞ்சு.
அப்பாஜானை எதுக்கு சார் தலைவராகப் போட்டீங்க?''
குளத்தங்கரையில் இருக்கிற 300 வோட்டும் அப்பாஜான் சொல்கிற பக்கம்தான் புரளும்'' என்றார் பஞ்சு.
ஒரு விஷயம்தேர்தல் சின்னம் என்ன செலக்ட் செய்யலாம்?'' என்று சீனன் கேட்டான்.
சைக்கிள்தான் பெஸ்ட்சுலபமாக சைக்கிள் ஊர்வலம் ஏற்பாடு செய்யலாம். "ஏழையின் வாகனம் சைக்கிள்', 'ஏழையின் நண்பர் பஞ்சுஎன்று நோட்டீஸ் போடலாம்'' என்றான் மணி.
சப்போஸ் பஞ்சு சார் தோற்றி விட்டால்பஞ்சு பஞ்சர் என்று பேச மாட்டார்களா?'' என்று சிட்டி கேட்டான்.
அபிஷ்டுவாயைப் பினாயில் போட்டு அலம்பு'' என்றார் பஞ்சு.
என்னிக்கு நாமினேஷன் போடப் போறீங்க?'' என்று கோபு கேட்டான்.
நெக்ஸ்ட் வீக்புதன் கிழமை நாள் நன்றாக இருக்கிறது என்று அண்ணாசாமி ஜோசியர் சொன்னார்'' என்றார் பஞ்சு.
நாமினேஷனுக்கு இப்போது என்ந அவசரம்அறிமுகக் கூட்டத்தைப் பிரமாதமாக நடத்திவிட வேண்டும்'' என்றான் வெங்கு.
"ஞெய்ங்....' அடுத்த வீட்டுக் கதவு இது!
கூட்டம் கலைந்தது.

பஞ்சு பிளந்து கட்டிக் கொண்டிருந்தார்வெங்கு வழக்கம்போல் வியட்நாமிலிருந்த வெண்டைக்காய் விலையேற்றம் வரை, úôபர்ஸ்-மஞ்சு காதல் முதல்பால்கார வேதாசலம் காலனிக்குக் குழாய் இல்லாதது வரையில் பல விஷயங்களைப் ஒரு "குடைகீழ்கொண்டுவந்திருந்தான்ஆறு சோடா பாட்டிலைத் தீர்த்துக்கொண்டே பஞ்சு பேசி முடித்தர்.
இதற்குள் ரோஜா மாலையப் பசி அடங்கச் சாப்பிட்டு முடித்திருந்தார் தலைவர் அப்பாஜான்கொண்டு வந்திருந்த தலைமை உரையை ஆரம்பிக்குமுன் சோடா ஒன்றைக் குடித்துப் பெரிதாக ஏப்பம் விட்டார்வெங்கு எழுதித் தந்த உரையைப் படிக்காமல் சொந்தமாகப் பேச ஆரம்பித்தார்.
நமக்கு ரொம்ப நாளா கொளத்தங்கரை வீதிகடைத் தெருவிலே அப்பாஜான் டைலர் என்றால் சின்னக் கொளந்தை கூடச் சொல்லும்துணி கிணி நாணயமாக வெட்டித் தச்சுக் கொடுப்போம்விலைவாசி யெல்லாம் ஏறியிருக்கிற நிலையிலேயும் நம்ப  சார்ஜ் கம்மிதான்எதுக்கு சொல்ல வந்தேன் என்றால்நம்ப தேசத்துக்கு உழைக்கோணும்உற்பத்தியைப் பெருக்கோணும்முக்கியமா வெங்காயத்தைச் சரசமா விற்க வழி செய்யோணும்.
நம்ப ஐயா பஞ்சு சார் நிக்கிறார்நம்ப ஜனங்க கண்டிஸனா இவருக்கு ஓட்டுப் போடணும்அப்பதான் அவர் எம்.பி.யாக முடியும். (கை தட்டல். "தம்பி, ஒரு சோடா உடை' - அப்பாஜான்)
பஞ்சு சார் நமக்கு வேண்ப்பட்டவர்முன்னே ஒரு போலீஸ் கேஸிலே நமக்கு சாட்சிகூட சொல்லியிருக்காருஅப்போ அல்லாருக்கும் வணக்கம்!'' என்று முடித்தார்.

புதன்  கிழமை காலை பூஜை யெல்லாம் தடபுடலாகச் செய்து, சகுனம் பார்த்து நண்பர்கள் குழுவுடன் பஞ்சு கிளம்பினார்நாமிநேஷன் தாக்கல் செய்ய.
கலெக்டர் அலுவலகம் சென்றதும் பாரங்களை வாங்கிப் பூர்த்தி செய்தார். “நீங்க எந்த வார்டு?'' என்று கேட்டார் கலெக்டர்.
“13-வது வார்டுஎட்டு வால்மீகி தெரு'' என்றார் பஞ்சு.
ஒன் மினிட்'' என்று கூறிகலெக்டர் வாக்காளர் பட்டியலைப் புரட்டினார்
வால்மீகி தெரு ஒன்று... இரண்டு.... எழு... எட்டு... கஸ்தூரி, ஜகன்னாதன்பரிமளம் அம்மாள்விசாலாட்சிமுனுசாமிபங்காரு அவ்வளவுதான்அடுத்தது ஒன்பதாம் நம்பர் வந்துவிட்டதுஐயாம் சாரிமிஸ்டர் பஞ்சுஉங்கள் பேர் வோட்டர் லிஸ்டில் இல்லையே!'' என்றார் கலெக்டர்.

மேஜைநாற்காலிஜன்னல்கதவுகலெக்டர்நண்பர்கள் எல்லோரும் தலைகீழாகச் சுற்றுகிறார்கள்பஞ்சுவின் கண்களுக்கு முன்னால்.
     *                               *                                                               *
பால்கார வேதாசலம் காலனிக்கு "குழாய்இன்னும்’வலிச்சுவிடப்படவில்லைஅச்சாபீஸ் துரைசாமி ஒன் பை சிக்ஸ்டீன் நோட்டீஸ்களை வஜ்ரம் காய்ச்ச பைண்டரிடம் கொடுத்துவிட்டார்!

8 comments:

  1. பஞ்சாலை போர்டுன்னு படிச்சேன். சிரித்து மாளலை. எப்போதும்போல் "சிரிப்பு கேரண்டி".

    இந்த இடுகையில் , அபூர்வமா எழுத்துப் பிழையையும், boundaryஐத் தாண்டும் எழுத்துக்களையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ம்ிக்க நன்றி.. இது பேஜ்மேக்கர்-5 இ 1994-ல் தட்டச்சு செய்தது.பல பிரச்னைகள். எலக்‌ஷன் சமயம் என்பதால் இதைப் போட்டேன்.NON-BREAKING CODES வராத ‘கற்காலம்’ அது,

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    1994!!!அடேங்கப்பா!! கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு படிக்கும்போதும், புதுமையாக, சுவாரசியமாக, சுவையாக, இருக்கிறதே, அதுதான் உங்கள் எழுத்துக்கு உரிய பெருமை.

    பகிர்ந்ததற்கு நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  4. டியர் சிஸ்டர், பத்து, பன்னிரண்டு தும்மல் போட்டுவிட்டு , இதை எழுதுகிறேன்..(உங்கள் ஊரில் ஐஸ் மலிவா?):)
    போகட்டும், இந்த கதை 1994-ல் எழுதப்படவில்லை. 1966-ல் எழுதியது.
    -கடுகு

    ReplyDelete
  5. 1966ல் எழுதி 50 வருடங்களுக்கு அப்புறமும் ரசிக்கமுடிகிறது. மக்கள் மனநிலையும் ரொம்பவும் மாறிவிடவில்லை. (தேர்தலைப் பொறுத்தவரையில்)

    ReplyDelete
  6. அந்தக் காலத்திலேயே தேர்தலில் நிற்பதென்றால் இவ்வளவு கஷ்டம் இருந்ததா? அடேங்கப்பா! (அது சரி, நீங்கள் எந்தத் தேர்தலிலாவது நின்றதுண்டா?)

    - இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
  7. இப்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துகிறாப்போல் எழுதி இருக்கீங்க! கடைசியில் பஞ்சுவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை என்பதை முன்கூட்டியே ஊகிக்கவும் முடிந்தது. கடைசி "பஞ்ச்"அதுவாகத் தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். :)

    ReplyDelete
  8. மிக்க நன்றி..
    கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!