Mr.GIMPEL
இவர் ஒரு மென்பொருள் நிபுணர். இவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு தருகிறேன்.
* * *
என்னைப் பார்த்து யாரும் "நீ ஓரு பைத்தியம்' என்று சொல்ல முடியாது. நான் பைத்தியம்தான். ஆனால் 'ஒரு பைத்தியம்' அல்ல! பலவித விஷயங்களில் எனக்கு, -- நாகரிகமாகச் சொன்னால் --ஆர்வம் உண்டு. சாதாரண நடைமுறையில் 'பைத்தியம்' என்றும் கூறலாம். அப்படிப்பட்ட பல விஷயங்களில் ஒன்று : முப்பரிமாணப் படங்கள் எனும் 3-டி படங்கள்!
1995-வாக்கில் "விகடனி'ல் ஸ்டீரியோகிராம் என்ற வகை 3-D படங்களைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தார்கள். கம்ப்யூட்டர் மென்பொருளை உபயோகித்து, நிறைய திறமையை
உபயோகித்து அத்தகைய படங்களை உருவாக்க பயிற்சியும் நேரமும் தேவை.
அந்த
மாதிரிப் படங்களை 3-D யாகப்
பார்க்க ஒருவிதமாக
Cross Eyed (?) முறையில் பார்க்கப் பழகிக் கொள்ள
வேண்டும்.
இப்படிப் பார்க்கும் வித்தை ஒரு
நிமிஷத்திலும் வந்துவிடக்கூடும் அல்லது பல மாதங்கள் முயற்சித்தாலும் வராமலும் இருக்கும்!
அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வித்தை எளிதில் வந்துவிட்டது. அதனால் ஸ்டீரியோகிராம் படங்களை இரவு பகலாகக் கம்ப்யூட்டரில் உருவாக்க ஆரம்பித்தேன். திமிங்கிலம், ஆடு, மாடு, கரடி, பறவை, கட்டடங்கள், படகு, மரங்கள், மலர்கள், பாம்பு என்று துவங்கி, பிள்ளையார், நடனமங்கை, ஓட்டப்பந்தய வீரர், படகோட்டி, நடராஜர், தட்சிணாமூர்த்தி என்று முன்னேறினேன்.
ஸ்டீரியோகிராமிற்கு அடுத்த கட்டம் ANAGLYPH
3-D படங்கள் வந்தன. இந்தப் படங்களைப் பார்க்க கலர் கண்ணாடி தேவைப்படும். கண்ணாடி போட்டுப் பார்த்தால் 3-D படம் சூப்பராகத்
தெரியும்.
நம்ப
மாட்டீர்கள்,
டஜன்
கணக்கில் இந்த
டைப்
படங்களைப் போட்டுப் பழகினேன்.
ஒரு மாதிரி 3-D பித்து ஓய்ந்து விட்டது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வகை
3-D
படங்கள் வர
ஆரம்பித்தன.
ஒரே படத்தில் இரண்டு உருவங்கள். உதாரணமாக படத்தை ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் பிள்ளையார் தெரிவார்; வேறு ஒரு கோணத் திலிருந்து பார்த்தால் முருகப் பெருமான் தெரிவார். இந்தப் படங்கள LENTICULAR என்பார்கள். இப்படி பல ஜோடிப் படங்களை உருவாக்கி, அச்சடித்து சைனா பஜாரில் விற்கிறார்கள். உங்களில் பலர்
இந்தப் படங்களை வாங்கி யிருப்பீர்கள்.
இப்படிப்பட்ட "2-in-1' 3-D படங்களை உருவாக்குவதற்கு நிறைய பயிற்சி தேவை; தேர்ச்சி தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குரிய கம்ப்யூட்டர் மென் பொருள்கள் தேவை! இன்டர்நெட்டில் பல இலவச மென்பொருள்கள் இருந்தன. அவை யாவும் முதல், இரண்டு, மூன்றாம் ஸ்டெப் வரை செல்ல உதவும். அதற்கு அடுத்து மேலே போனால்தான், படம் முழுமையடையும். அந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்காது என்பதுடன் விலையும் சற்று அதிகம்! சும்மா விளையாடிப் பார்ப்பதற்கு, செலவு செய்ய மனம் வரவில்லை.
இப்படிப்பட்ட "2-in-1' 3-D படங்களை உருவாக்குவதற்கு நிறைய பயிற்சி தேவை; தேர்ச்சி தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குரிய கம்ப்யூட்டர் மென் பொருள்கள் தேவை! இன்டர்நெட்டில் பல இலவச மென்பொருள்கள் இருந்தன. அவை யாவும் முதல், இரண்டு, மூன்றாம் ஸ்டெப் வரை செல்ல உதவும். அதற்கு அடுத்து மேலே போனால்தான், படம் முழுமையடையும். அந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்காது என்பதுடன் விலையும் சற்று அதிகம்! சும்மா விளையாடிப் பார்ப்பதற்கு, செலவு செய்ய மனம் வரவில்லை.
கிட்டத்தட்ட இந்தப் படங்களை "எட்டாத பழம் புளிக்கும்' என்று தத்துவத்தைச் சொல்லி, மனதை சமாதானப்படுத்திக் கொண்டு மறந்து விட்டேன்.
சில வாரங்கள் கழித்து, திரும்பவும் வலையில் தேடினேன். அதுவரை விலைக்கு விற்றுக்கொண்டிருந்த ஒரு சூப்பர் மென்பொருள், இனி இலவசம் என்று அறிவித்து இருந்தார்கள். அத்துடன் ஒரு சிறு குறிப்பையும் போட்டிருந்தார்கள். "இந்த மென்பொருளுக்கு எந்தவிதமான சப்போர்ட்டும் தர இயலாது” என்றும் போட்டிருந்தார்கள். மென்பொருளின் பெயர்
GIMPEL-3D. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து என்
கணினியில் அதை
"இன்ஸ்டால்'
செய்தேன்.
ஆவலுடன் அதைத்
துவக்க
"கிளிக்'
செய்தேன்.
வேலை
செய்யவில்லை.
இரண்டு மூன்று தடவை
முயற்சி செய்தேன்.
ஏமாற்றமே மிஞ்சியது.
எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமே, என்று எண்ணி, என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, பிரச்னையை எழுதினேன். முடிந்தால் உதவும்படி கேட்டுக் கொண்டேன். அந்த மென்பொருளை உருவாக்கி, விற்பனை செய்து வந்தது ஒரு தனி நபர் என்று தெரிந்தது. அவரிடமிருந்து பதில் வந்தது. தான் பல்வேறு கணிப்பொறி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும்,
3-D
மென்பொருள் மீது
கவனம்
செலுத்த நேரமே
இல்லாததால் அதை
அப்படியே விட்டு விட்டதாகவும் அவர் எழுதியதுடன்,
"இருந்தாலும்...'
என்று
ஆரம்பித்து,
"உங்களுக்கு எப்படி உதவ
முடியும் என்று
பார்க்கிறேன்.
ஒரு
வாரம்
டைம்
கொடுங்கள்'
என்று
எழுதியிருந்தார். அவர்
எந்த
நாட்டிலிருந்து, எந்த
ஊரிலிருந்து எழுதுகிறார் என்பது தெரியவில்லை.
நாலைந்து நாட்கள் கழித்து அவரிடமிருந்து கடிதமும் அத்துடன் ஒரு மென்பொருள் இணைப்பும் வந்தது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்ன file-ஐ நீக்கிவிட்டு, இணைப்பில் உள்ள file-ஐ இன்ன இடத்தில் பேஸ்ட் பண் ணுங்கள். வேலை செய்யக்கூடும் என்று எழுதியிருந்தார்.
அவர்
சொன்ன
படி
செய்தேன்.
பலன் இல்லை. அவருக்கு கடிதம் எழுதினேன்.
இரண்டு நாட்கள் கழித்து, அவரிடமிருந்து கடிதம் வந்தது. "என் மென்பொருளில் ஒரு குறைபாடும் இல்லை. புதிய விண்டோஸ் மென்பொருளில் ஒரு குறிப்பிட்ட பைலில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். அதன் பக்கவிளைவுதான் காரணம். அந்த குறிப்பிட்ட பைலுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை என் மென்பொருளில் செய்து அனுப்புகிறேன்' என்று
எழுதினார்.
இப்படி எழுதியதுடன், ஒரு முழுப் பக்கத்திற்கு மென்பொருள் இயங்குவது எப்படி, எந்த பைல் முரண்டு பிடிக்கிறது என்று பள்ளிக்கூட ஆசிரியர் போல் விரிவான விளக்கத்தை எழுதியிருந்தார். அவர் எழுதியதில் கிட்டத்தட்ட எதுவுமே எனக்குப் புரியவில்லை.
"எனக்கு கணினிமொழி புரோகிராம் எதுவும் தெரியாது. இவ்வளவு விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு நிறைய விஷயங்கள் புரியவில்லை. உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிப்பு கேட்கிறேன்'
என்று
எழுதினேன்.
மறுபடியும் அவரிடமிருந்து 4,
5 இணைப்புகளுடன் கடிதமும் செய்முறையும் வந்தன. அதன்படி செய்தேன். மறுபடியும் ஏமாற்றம். மறுபடியும் அவருக்குக் கடிதம் எழுதினேன். "எனக்காகக் கஷ்டப்படாதீர்கள். விட்டு விடுங்கள்' என்று குறிப்பிட்டேன்.
அவர் விடுவதாக இல்லை. கடிதமும் வேறு சில செயல்முறைகளையும் எழுதியிருந்தார்.
இப்படி ஒரு மாதம், கடிதங்கள் போய் வந்து கொண்டிருந்தன. நான் விடுவதாக இருந்தாலும் அவர் விடுவதாக இல்லை. ஒருநாள் சில இணைப்புகளுடன் விவரமான கடிதம் வந்தது. அதன்படி செய்து பார்த்தேன்... ஆஹா! வெற்றி... வெற்றி..!! அந்த மென்பொருள் பிரமாதமாக வேலை செய்ய ஆரம்பித்தது. எனக்குத் தலைகால் புரியவில்லை.
அவருக்குக் கடிதம் எழுதினேன். என் நன்றியை, எவ்வளவு பலமாக, ஆழமாக, உண்மையாகத் தெரிவிக்க முடியுமோ அந்த அளவு தெரிவித்து எழுதினேன். "நீங்கள் அன்பு கூர்ந்து எனக்காக உங்கள் நேரத்தையும் உழைப்பையும்
தந்திருக்கிறீர்கள். என் ஆரய்ச்சிக்கு மிகுந்த உதவி செய்திருக்கிறீர்கள்'' என்று
எழுதினேன்.
மறுநாள் அவரிடமிருந்து ஒரு சின்னக் கடிதம் வந்தது. "நன்றியை நான்தான் உங்களுக்குக் கூற வேண்டும். இப்போது விண்டோஸில் வேலை செய்யும் GIMPEL-3Dயை உங்கள் ஆர்வமிக்க உதவியால் நான் உருவாக்கி விட்டேன்! நன்றி ' என்று எழுதி நெகிழ்த்தி விட்டார் கிம்பெல்.
* * *
பிகு. மென்பொருள் கிடைத்துவிட்டது. சில படங்களைத் தயார் செய்யும் முயற்சியில் இறங்கினேன். வலது கண் RETINA-வில் பிரச்னை... அத்துடன் இந்த மாதிரிப் படங்களை
LENTICULAR SHEET-ல்
ஒட்ட
வேண்டும்.
அந்த
ஷீட்
மொத்தமாகத்தான் கிடைக்கிறது. சில்லறையில் கிடைப்பதில்லை; விலையும் அதிகம். ஆகவே தற்சமயம் அதற்கு ஓய்வு கொடுத் துள்ளேன்.
* * *
இப்போது எனக்கு3-D-PRINTING' பைத்தியம் பிடித்துவிட்டது. இதற்கான மென்பொருளும் மட்டுமல்ல, 3-D-PRINTER-ம் ( விலை: $2600) இங்கு (அமெரிக்காவில்) டவுன் லைப்ரரியில் உள்ளன. அங்கு போய் புகுந்து விளயாடலாம். கட்டணம் எதுவும் இல்லை.
சின்ன டிசைன் பண்ணி, பிரிண்ட் பண்ண ஒன்று, ஒன்றரை மணி நேரம் ஆகும்.
ஆர்வத்துக்கு வயதில்லை. இதே ஆர்வம் 2000களில் வந்திருந்தால் எத்தனையோ உயரங்களைத் தொட்டிருப்பீர்கள்.
ReplyDeleteகிம்பெல் அவர்களும் பாராட்டுக்குரியவர். உங்க Backgroundஐ வயதையும் அவருக்கு எழுதியிருந்தீர்களா அல்லது உங்கள் தொடர்ந்த மெயில்கள் அவரை Impress பண்ணியிருந்ததா?
அமெரிக்காவில் Tax Payers Money மக்களுக்கு வேலை செய்கிறது. இங்கு?
2000 களில் ஸ்டீரியோகிராம், நாலாயிரம் பதிப்பு, தமிழ் FONTS, DTP சேவை, என்று போய்விட்ட்டது.
ReplyDeleteGIMPEL- க்கு வயதெல்லாம் எழுதவில்லை. ‘பொடிப்பயல்’ என்று கையை உதறி இருப்பார்.
<<அமெரிக்காவில் Tax Payers Money மக்களுக்கு வேலை செய்கிறது, என்பது உண்மைதான்.
உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். இப்போ அமெரிக்காவில் தான் இருக்கீங்களா?
ReplyDeleteநன்றி.
ReplyDeleteபதிவில் சில வரிகள் விட்டுப் போய்விட்ட்டன. அவற்றை இப்போது சேர்த்துள்ளேன்.
-கடுகு
Newark Children Museum போனபோது 3D பிரிண்டர் பார்த்தேன். அதில் ஒரு வீனஸ் சிலையை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் செய்து காட்டுகிறார்கள். சுமார் ஐந்தாறு மணி நேரம் ஆகிறது. வியப்பாக இருந்தது. (ஆரம்பகாலத்தில் தாங்கள் தமிழ் fontகள் செய்து கல்கிக்கு கொடுத்தது எனக்குத் தெரியும். இப்போது அனுபவஸ்தர் ஆகிவிட்டீர்கள். பெரிதாக எதோ ஒன்று செய்யத்தான் போகிறீர்கள். வாழ்த்துக்கள்!)
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
இராய செல்லப்பா அவரகள்குக், நன்றி.
ReplyDeleteபெரிதாக எதுவும் கிழிக்கப் போவதில்லை.
-கடுகு
இந்த 3D PRINTER வீட்டு டிசைன், தொழிற்சாலைக்கான உதிரி பாகங்கள் டிசைன் போன்றவற்றில் மிகுந்த உபயோகம். ரெண்டு வருடங்களுக்கு முன்னால், துபாயில் (ஒரு COMPUTER SHOWவில்), ஆட்கள் ஒரு கூண்டுக்குள் 10 நிமிடம் நின்றுகொண்டிருந்தால், ஸ்கேனரை வைத்து ஸ்கேன் பண்ணி, உடனே நம்முடைய 7 இஞ்ச் அல்லது 1 அடி சிலையை 3D TECHNOLOGYமூலமாக செய்துகொடுத்துவிடுகிறார்கள் (கூட்டம் ஜாஸ்தியா இருந்ததுனால, 2 வாரத்தில் கொரியரில் அனுப்புகிறேன் என்றார்கள்). (அப்பா வெளியில் போயிருக்கும்போது, பையனுக்கு அப்பா பொம்மையின் கன்னத்தைக் கிள்ள உபயோகமாயிருக்கும்)
ReplyDeleteகடுகு சார், நடக்கறவங்களுக்கு அவங்க எடுத்துவைக்கிற ஒரு அடிதான் மனசுல இருக்கும். பார்க்கறவங்களுக்குத்தான் அவங்க எத்தனை உயரம் சென்றிருக்கிறார்கள் என்று தெரியும். உங்களது STRENGTH எதையும் முயற்சிப்பது, ஏராளமாகப் படிப்பது, ரசித்ததைப் பகிர்ந்துகொள்வது, நகைச்சுவையாக எழுதுவது, உங்களின் நாலாயிரம் பதிப்பு என்று பல சொல்லலாம். (நீங்கள் நிறைகுடம். நான் காலிக்குடம். ரெண்டுலயும் சத்தம் வராததுனால, நானும் நீங்களும் ஒண்ணுன்னு நினைச்சுக்கவேண்டியதுதான்)
இந்த 3D PRINTER வீட்டு டிசைன், தொழிற்சாலைக்கான உதிரி பாகங்கள் டிசைன் போன்றவற்றில் மிகுந்த உபயோகம். ரெண்டு வருடங்களுக்கு முன்னால், துபாயில் (ஒரு COMPUTER SHOWவில்), ஆட்கள் ஒரு கூண்டுக்குள் 10 நிமிடம் நின்றுகொண்டிருந்தால், ஸ்கேனரை வைத்து ஸ்கேன் பண்ணி, உடனே நம்முடைய 7 இஞ்ச் அல்லது 1 அடி சிலையை 3D TECHNOLOGYமூலமாக செய்துகொடுத்துவிடுகிறார்கள் (கூட்டம் ஜாஸ்தியா இருந்ததுனால, 2 வாரத்தில் கொரியரில் அனுப்புகிறேன் என்றார்கள்). (அப்பா வெளியில் போயிருக்கும்போது, பையனுக்கு அப்பா பொம்மையின் கன்னத்தைக் கிள்ள உபயோகமாயிருக்கும்.
ReplyDeleteநீங்கள் போட்டிருக்கும் 3D DESIGN படத்தைப் பார்த்தேன் (30 செகன்ட்..) எனக்கு அதன் SIGNIFICANCE புரியவில்லை. LENTICULAR SHEET - இதுவும் என்னன்னு கண்டுபிடிக்கிறேன்.
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
என்னவென்று சொல்வது, பிரமிப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும், விஷய ஞானத்தையும் பற்றி படிக்கும்போது!
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்