April 27, 2017

துணுக்குத் தோரணம்

 TIME வீடு  மாறிய போது...

சமீபத்தில்  பிரபல "டைம்' வார  இதழ் தனது அலுவலகத்தைக்  காலி செய்துவிட்டு, நியூயார்க்கிலேயே வேறு ஒரு கட்டடத்திற்கு இடம் பெயர்ந்தது. 
எத்தனையோ வருஷங்களாகக் குடி இருந்த பழைய கட்டடத்தைக் காலிசெய்யும்போதுபத்திரிகையின் பழைய ஆவணங்களையும் புகைப்படங்களையும் நியூயார்க்  Historical Society -க்குக் கொடுத்துவிட்டது. ஆவணங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 70 லட்சம்! பழைய கட்டடத்தின்  ஓரம்  ஒரு தூண் அருகில் TIME CAPSULE பல வருடங்களுக்கு முன்பு புதைத்து வைத்திருந்தார்கள். அதை  அப்படியே  விட்டு விட்டார்களாம்.  1959இல் டைம் இதழின் ஆசிரியரால்  நிராகரிக்கப்பட்ட கட்டுரைகளை  சிவப்பு பென்சிலால் "X' போடுவாராம். அந்தப் பென்சிலைக்கூட அந்த TIME CAPSULE-இல் வைத்திருக்கிறார்களாம்!

ஆக்ஸ்போர்ட் அகராதி.  
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி2015-ம் வருடத்தின்  புதிய  ஆங்கில வார்த்தையாகக்  
குறிப்பிட்டு இருப்பது: மோஜி ஈமோஜி. கம்ப்யூட்டர் "ஸ்மைலி போன்றது  அகராதியில்  சேர்க்கப்பட்டு ள்ளதாம்.  இந்த  ஈமோஜி அனைத்து உலக மொழிகளையெல்லாம் கடந்தது  என்று குப்பிட்டு  இருக்கிறார்கள்.
அகாதா    கிறிஸ்டி
அகாதா  கிறிஸ்டி  எழுதியுள்ள  துப்பறியும்  நாவல்கள்  95.  உலகில் 105 மொழிகளில்  இவரது  புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.  

அவரது புத்தகங்களின்  விற்பனை  2 பில்லியன்  பிரதிகளாம்.  (ஒரு பில்லியன் =100,000,000).
இத்தனை  புத்தகங்கள்  எழுதி  அவர் சம்பாதித்த பணத்தை விட, அவருடைய பேரன்  ஒரு நாடகத்தின்  ராயல்டி மூலம் அதிகம் பெருக்கி விட்டானாம். லண்டனில் 65 வருடங்களாக இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிற நாடகம் :   அகாதா  எழுதிய MOUSETRAP.  அதன் ராயல்டி  தொகை தன் பேரனுக்குச் சேர வேண்டும்  என்று  அகாதா  எழுதி வைத்துவிட்டார்.  இதுவரை  கிட்டத்தட்ட 25,000 தடவை  அந்த நாடகம் மேடையேறி  உள்ளது.
அந்த நாடகத்தின் கதை, வசன புத்தகத்தை பல வருடங்களுக்கு முன்பு கஷ்டப்பட்டு வரவழைத்துப் படித்தேன்.  இத்தனை  வருடம்  ஓடக்கூடிய அளவுக்கு  அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நல்ல மர்மங்கள் நிறைந்த நாடகம்தான்.  இருந்தாலும்  உலக  சாதனை படைக்க அதில் என்ன  இருக்கிறது  என்று  எனக்குத் தோன்றவில்லை.
OPRAH- விற்கு அடித்த லாட்டிரி   
பிரபல டிவி  நிகழ்ச்சியாளர்  OPERAH WINFREY அமெரிக்காவின் மிக மிக பெரிய பணக்காரர்களில்  ஒருவர்.
அவர் சமீபத்தில் Weight Watchers Association நடத்தும் "டயட் புரோகிராம்கம்பெனியின் 10 சதவிகிதம் ஷேர்களை வாங்கியிருக்கிறார். அந்த கம்பெனியின் செயல் திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார். கம்பெனியின் 10 சதவிகித ஷேர்களை OPERAH வாங்கினார் என்ற தகவல் ஷேர் மார்க்கெட்டில் தீ போலப் பரவ, அடுத்த நாளே அந்தக் கம்பெனியின் ஷேர்களின் விலை சரசரவென்று ஏறி, இரண்டு மடங்காக ஆகி விட்டது. அதன் பலன் : OPERAH,  ஒரே  இரவில் பெற்ற லாபம் 70 மில்லியன் டாலர் கள்!
நுழைந்து போக வழி
W.C.Fields என்பவர் சென்ற தலைமுறை திரைப்பட நகைச்சுவை நடிகர், எழுத்தாளர் (1880-1946). அவர், 1946-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அதிக நாள்கள் உயிருடன் இருக்க மாட்டார் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அவர் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. வழக்கம்போல் ஜோக் அடித்து, கிண்டல் செய்துகொண்டு இருந்தார்.
அவரைப் பார்க்க அவருடைய நண்பரும் நடிகருமான Thomas Mitchell
வந்தார். அவர் உள்ளே நுழைந்தபோது, Fields  ஆர்வமாக எதையோ படித்துக் கொண்டிருந்தார்.
மிட்செல் அவரிடம், "என்னப்பா... என்னவோ படித்துக் கொண்டிருக்கிறாயே... என்ன புத்தகம்?'' என்று கேட்டார்.
Fields அவரிடம், "பைபிள் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
"என்னது... பைபிளா? நீ  இப்போதிருக்கும் நிலைமையில் பைபிளை எதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறாய்?''
"ஒன்றுமில்லை... ஏதாவது Loopholes கிடைக்கிறதா என்று  பார்க்கிறேன்''  என்று சொல்லி, கலகலவென சிரித்தார்.
ஒரே  நாளில் 1250 பிரதிகள் விற்பனை
குரங்கிலிருந்து  மனிதன் வந்தான் என்ற தத்துவத்தை விளக்கி, சார்லஸ் டார்வின் ‘ON THE ORIGIN OF SPECIES’   என்ற புத்தகத்தை 1009-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி பிரசுரித்தார். 
அவர் அச்சடித்தது 1250 பிரதிகள். புத்தகம் பிரசுரம் ஆன அன்றைய தினமே மொத்தப் பிரதிகளும் விற்று விட்டனவாம்.

AUDUBON  எழுதிய புத்தகம் 1 கோடி டாலர்
லண்டனில் உள்ள  பிரபல  ஏல கம்பெனியான SOTHEBY  2010-ஆம் ஆண்டு டிசம்பர்  7-ஆம் தேதி நடத்திய ஏலத்தில் பல அரிய புத்தகங்கள் ஏலம் விடப் பட்டன The Birds of America  (ஜான் ஜேம்ஸ் AUDUBON)  எழுதி 1827-30 ஆண்டுகளில்  பிரசுரித்த 4 வால்யூம் புத்தகம்).  என்ன  விலைக்கு  ஏலம் போயிற்று தெரியுமாஒரு கோடி (1,00,00,000) டாலர்கள். AUDUBON அபாரமான ஓவியர். 

5 comments:

 1. அதிசயமான அதே சமயம் உண்மையான செய்திகள். எல்லாமே அருமை! அகதா கிறிஸ்டி எனக்குப் பிடித்த எழுத்தாளர். மவுஸ் ட்ராப் இன்னமும் படித்ததில்லை.

  ReplyDelete
 2. அனைத்தும் புதிய அறிந்திராத தகவல்கள். ரசிக்க முடிந்தது.

  பில்லியனில் ஒரு பூஜ்ஜியம் குறைத்துவிட்டீர்கள். இன்னும் நிறையபேர் பிலியனர்என்று சொல்லிக்கொள்ளட்டும் என்ற பெருந்தன்மையா?

  ReplyDelete
 3. ..”. while in American English it has always equated to a thousand million (i.e. 1,000,000,000) ” என்று விக்கிப்பீடியா சொன்னதால் அப்படியே எழுதி விட்டேன்

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள். ஒவ்வொன்றும் ஸ்வாரஸ்யம்....

  ReplyDelete
 5. On the "long scale," one billion is 1 million million, or 1 and 12 zeroes (1,000,000,000,000). The long scale is still used in some European countries (France, for example). The UK switched to the short scale in 1970/71. On the "short scale," one billion is 1,000 million, or 1 and 9 zeroes (1,000,000,000).

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!