ஒரு பொருளைத் தயாரிப்பதை விடக் கடினமானது, அதைப் பிரமாதமாக
விளம்பரப்படுத்துவது, விளம்பரத்தில் அந்தப் பொருளைப் பற்றி ஒரு குட்டி வாசகம்
இருந்தால், அது பலரையும் கவரும்படியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு
பாப்புலராக இருந்த பல வாசகங்கள் இன்று மறைந்து போய்விட்டன.
“தொண்டையில் கிச்..கிச்.”,
“பேஷ்..பேஷ்..”, “இதை...இதை... இதைத் தா நினைச்சேன்” என்பவை எல்லாம் இப்போதும்
உள்ளனவா என்று தெரியவில்லை. அவை இருந்த காலத்தில் பலரின் கவனத்தை அவை கவர்ந்தன
என்பதில் சந்தேகமில்லை.
நான் எழுதிய ஒரு விளம்பர JINGLE,
10-15 வருடங்கள் ரேடியோவிலும் டிவியிலும் சக்கைப் போடு போட்டது. காரணம் அந்த
ட்யூன் அவ்வளவு சிறப்பாக அமைந்து விட்டதுதான். என் பாடலில் தனி சிறப்பு எதுவுமில்லை.
இந்த விளம்பரத்தைப் பல மொழிகளில்
தயாரித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்ட பம்பாய் நிறுவனம், சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தியது.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு கொண்டிருந்தார்கள்.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு கொண்டிருந்தார்கள்.
இந்தியில் இருந்த பாடலைத் தமிழ்ப் படுத்தித் தரும்படி, அலுவலகத்தில் இருந்த எனக்குப் போன் செய்து, கேட்டார்கள்.. நான் தமிழில் எழுதிப் போனில் படித்தேன். சிறிது நேரம் கழித்து, ”ஒரு
வார்த்தையைச் சேர்த்தால் ட்யூனுக்குச் சரியாக அமைந்துவிடும்.” என்றார்கள்.
புதிய பெயரில், புதிய பாக்கெட்டில்
தயாரிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகை விளம்பரங்களில் கூறப்பட்டிருந்ததால், ‘புதிய’
என்ற வார்த்தையை தகுந்த இடத்தில் சேர்த்துச்சொன்னேன். அதைக் கேட்ட இசையமைப்பாளர்,
“ ட்யூனுக்கு
ரொம்ப சரியாக வந்துவிட்டது” என்று சொன்னார்.
விளம்பரமும்
தயாரிக்கப்பட்டு, ரேடியோ, டிவி விளம்பரங்களில் இந்த JINGLE ஒலிபரப்பப்பட்டது. அந்த
ட்யூன் மிகவும் பாப்புலராகி விட்டதால், பத்து வருடங்களுக்கு மேலாக அதே (‘புதிய’
என்ற வார்த்தையுடன்) தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். பத்து வருடங்கள் ஆனாலும்
‘புதிய’ வார்த்தையை விடவில்லை.
இதுவாவது சுமார் பத்து
வருடத்துக்கு மேல் கொடிகட்டிப் பறந்த JINGLE. அமெரிக்காவில் 100 வருடங்களாக ஒரு
காப்பிப் பொடியின் விளம்பரத்தில் ஒரே வாசகத்தை உபயோகித்து வருகிறார்கள்.
அந்த வாசகமும் அதன் பின்னால்
உள்ள கதையும் சற்று சுவையானவை.
MAXWELL HOUSE காஃபி
MAXWELL HOUSE காஃபி
அமெரிக்காவில் MAXWELL
HOUSE என்ற காபி மிகவும் பழமையானது; சற்று பிரபலமானது. நூறு வருஷத்துக்கும் மேலாக
அந்த கம்பெனி உள்ளது.
அந்த காபி விளம்பரத்தில்
வரும் வாசகம்: GOOD TO THE LAST DROP.
இந்த விளம்பர வாசகம் அந்தக்
கம்பெனிக்கு தற்செயலாகக் கிடைத்தது. ஒரு சமயம் – 1917-ஆம் வருஷம் – அமெரிக்க
அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட், தன் நண்பரான முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சனின்
வீட்டிற்குச் சென்றார். (ரூஸ்வெல்ட் பயங்கர காபிப் பிரியராம்!) ஜாக்சன் அவருக்குக்
காபி கொடுத்தார். காபி மிகவும் நன்றாக இருக்கவே இன்னொரு கப் கேட்டாராம். அதையும்
பருகிவிட்டு ‘காபி அபாரம். கடைசி சொட்டு வரை சூப்பராக இருந்தது.’ என்கிற மாதிரி
‘GOOD TO THE LAST DROP’ என்றாராம். ஜாக்சன், “இது MAXWELL
HOUSE காபி’ என்றாராம்.
இந்த சம்பவம் எப்படியோ
வெளியில் பரவி, ‘மாக்ஸ்வெல் ஹவுஸ்’ காபி கம்பெனிக்குப் போய்விட்டது.
ஒரு அதிபர் கொடுத்த
பாராட்டாக மட்டுமின்றி கச்சிதமான, புதுவிதமான வாசகமாகவும் அமைந்துவிட்டதால்,
தங்கள் விளம்பரங்களில் அதை உபயோகிக்க ஆரம்பித்தனர்.
இன்றும் அதே வாசகத்துடன்
விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்!
” இப்படி அதிபர் சொல்லவில்லை. சும்மா கதை விடுகிறார்கள்” என்று மற்ற காபி கம்பெனிகாரர்கள் கூற ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, ’GOOD TO THE LAST DROP’ என்றால் கடைசி சொட்டு சுவையற்றது’ என்று அர்த்தமாகிறது, இல்லாவிட்டால், கடைசி சொட்டு வரை என்று கூறாமல், ‘கடைசி சொட்டு உட்பட’ என்றுதானே சொல்லி இருப்பார் என்று சொன்னார்கள். ஆனால் மாக்ஸ்வெல் ஹவுஸ் கம்பனி இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை, சமயம் பார்த்து இந்த வாசகத்தைத் தங்கள் கம்பெனி’ ஸ்லோகனா’கப் பதிவு செய்து கொண்டது!
உண்மையான சம்பவமோ இல்லையோ,
சுவையானது என்பதால் இங்கு பதிவிட்டுள்ளேன்.
( அந்த வாசகத்தை வைத்து, ஒரு பிரபல LIFT கம்பெனியை நையாண்டி செய்தார்களாம்: அதுவும் Good to the last drop!தான் என்று!
( அந்த வாசகத்தை வைத்து, ஒரு பிரபல LIFT கம்பெனியை நையாண்டி செய்தார்களாம்: அதுவும் Good to the last drop!தான் என்று!
நியூயார்க் டைம்ஸ் தினசரியின் வாசகம் மிகவும் பழமையானது. மிகவும் பிரபலமானது. கடந்த
நூறு வருஷங்களுக்கு மேலாக அந்த நாளிதழின் முதல் பக்கத்தில் “ALL THE NEWS
THAT’S FIT TO PRINT’ என்று போட்டிருப்பார்கள். இப்படிப் போட ஆரம்பித்தது
1896-ஆம் வருடத்தில். அந்த காலத்தில் இதையும் கேலி செய்து
மாற்றி எழுதினவாம் சில பத்திரிகைகள்!
கல்கி, விகடன் போன்ற நம் பத்திரிகைகள் இப்படி வாசகங்களைப் போடுகின்றன. சமீப
காலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் கூட வாசகங்களை (ஆங்கிலத்தில்!) படத்தின் பெயரோடு
போடுகின்றன.
இதை முதன் முதலில் துவக்கி வைத்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அறுபதுகளில் என் அருமை நண்பர் இயக்குனர் ஸ்ரீதர், ‘சித்ராலயா’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியபோது, அதற்கு ஒரு சின்னத்தையும் (LOGO), விளம்பர வாசகத்தையும் உருவாக்கினார். அந்த வாசகம்: அலைகடலில் சிறுதோணி; கலை உலகில் எங்கள் புதிய பாணி!
இதை முதன் முதலில் துவக்கி வைத்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அறுபதுகளில் என் அருமை நண்பர் இயக்குனர் ஸ்ரீதர், ‘சித்ராலயா’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியபோது, அதற்கு ஒரு சின்னத்தையும் (LOGO), விளம்பர வாசகத்தையும் உருவாக்கினார். அந்த வாசகம்: அலைகடலில் சிறுதோணி; கலை உலகில் எங்கள் புதிய பாணி!
NIGEL REES என்பவர் பல வருஷங்களுக்கு முன்பு
‘SLOGANS AND CATCH PHRASES’ என்ற புத்தகத்தில் பல வாசகங்களைத் தொகுத்துத்
தந்துள்ளார். சுவையான புத்தகம். கிடைத்தால் படித்துப் பாருங்கள்!
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா அவர்கள். அவருக்கு என் நன்றி!
இன்னும் நிறைய விளம்பர வாசங்கங்களும் டியூன்'களும் நினைவுக்கு வருகின்றன. 'ஆரோக்ய வாழ்வுதனைக் காப்பது லைப்பாய்..லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்யம் அவ்விடமே' என்பதும், 'ல லலா ல லா.. ல லா ல லா..' என்ற லிரில் சோப் விளம்பரமும் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteதெரியாத விளம்பர உலகத்தைப் பற்றி நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம்.
ஆறு வார்த்தைகளில் சில, Pages, Words, OR, No, இதையே திருப்பி, OM. வேறு வார்த்தைகள் பிடிபடவில்லை. மீண்டும் பார்க்கிறேன்.
Page, age, words, word, no/on, novel are the six words in the picture. If anything else is hidden, please advise.
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteஇந்தப் பதிவுகளையும் பாருங்கள்
பூஸ்ட், லிரில்: https://kadugu-agasthian.blogspot.com/2013/11/blog-post_17.html
ஏர் இந்தியா : https://kadugu-agasthian.blogspot.com/2012/05/blog-post_20.html
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
நீங்கள் எழுதித் தந்த விளம்பரம் எதுவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை. “புதிய ஹமாம்” சோப் விளம்பரமா அது?
சின்ன சின்ன வார்த்தைகள் - “வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்” நினைவுக்கு வருகிறது.
(பெண்களுக்குப் பிடித்ததில் ஆச்சரியமே இல்லைதானே:):))
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
நீங்கள் எழுதித் தந்த விளம்பரம் எதுவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன், கண்டுபிடிக்க முடியவில்லை. “புதிய ஹமாம்” சோப் விளம்பரமா அது?
சின்ன சின்ன வார்த்தைகள் - “வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்” நினைவுக்கு வருகிறது.
(பெண்களுக்குப் பிடித்ததில் ஆச்சரியமே இல்லைதானே:):))
நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி சுப்ரமணியம்
'புதிய சன் ரைஸ்' சரியா?
ReplyDeleteபல வருடங்கள் மாற்றாமல் வந்து கொண்டிருந்த விளம்பரம் விக்கோ வஜ்ரதந்தி.
பூஸ்ட் இஸ் த சீகிரெட் ஒப்பி அவர் எனெர்ஜி கூட ரொம்ப வருடங்கள் வந்து கொண்டிருக்கிறது.
Appa naan 3 thaan right-aa!,kaN check seyyanum!
ReplyDelete