Believe it or not என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும்
‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று குட்டித்
தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன்.
அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத
அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற
பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது
நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு
புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன்.
அந்த
உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத்
தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ்
மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை
எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை
எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்:
JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25,
30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி
பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் டாலர், என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.