முன் குறிப்பு: நான் டில்லியில் இருந்தபோது வாரத்தில் இரண்டு நாள் அமெரிக்கன் லைப்ரரிக்குப்
போய் வருவேன். அங்கு பல புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படிப்பேன். ரேடியோ
காமெடி ஷோ முதலியவற்றின் விமர்சனங்கள், கதைக் குறிப்புகள் மட்டுமன்றி பல காமெடியன்களின் வாழ்க்கை வரலாறு, நடித்த படங்களின் கதைச் சுருக்கம் ஆகியவற்றையும்
படிப்பேன். அதனால் அமெரிக்க நகரங்கள் - முக்கியமாக நியூயார்க் நகரைப் பற்றிய பல
தகவல்கள் எனக்குத் தெரிந்தன.
நியூயார்க் நகரத்தின் Fifth Avenue மிகப் பிரபலமான கடை வீதி. (அந்த
வீதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் காலாற நடந்து போவேன் என்று நான் கனவு கூடக்
கண்டதில்லை.)
WALDORF ASTORIA என்ற ஹோட்டல் அந்த பகுதியில்தான் இருக்கிறது. பல காமெடியன்களின் ஆதர்ச ஹோட்டலாக இருந்தது. அதில் நிகழ்ச்சி நடத்துவதைப் பெரிய கௌரவமாகக் கருதினார்கள். அவர்களுடைய நிகழ்ச்சி நடக்கும் தினங்களில், ஹோட்டல் முகப்பில் மின்சார பல்புகளால் அவர்களின் பெயரைப் பளிச்சிட்டு இருப்பார்கள். காமெடியன்கள் தங்கள் பெயரைப் பார்த்துக் குதித்திருக்கிறார்கள்; மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மறக்காமல் தங்களது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், நியூயார்க் நகரில்
உள்ள மேடம் டஸ்ஸாட் மெழுகுச்சிலை கண்காட்சிக்குப் போனேன். அப்போது என் பெண்
“இங்கிருந்து வெகு அருகில்தான் Waldorf Astoria என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் இருக்கிறது. ரொம்பப் பழைய காலத்து ஹோட்டல். போய்ப் பார்த்துவிட்டு
வரலாமா?” என்று கேட்டாள். “வெளியே இருந்துதான் பார்க்க முடியும். பரவாயில்லை. Waldorf Astoria பற்றி நிறையப் படித்திருக்கிறேன். டஸ்ஸாட்
மியூசியத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகும்போது அந்த ஹோட்டலைப் பார்த்துக்
கொள்ளலாம்” என்று சொன்னேன்.
அப்போது Waldorf Astoria வைப் பற்றிய ஒரு அபாரமான சுவையான வரலாறை படித்தது நினைவுக்கு வந்தது. அதை
இங்கு தருகிறேன்.