கடவுள் கை கொடுத்த கணங்கள்!
ஒரு சமயம் புனேவில் பணிபுரிந்து
கொண்டிருந்த என் சகோதரன் லீவில் சென்னைக்கு வந்திருந்தான். புனேக்குத் திரும்பிப்
போக 3-டியர் டிக்கெட்டை வாங்கி ரிசர்வ் செய்யும்படி அவனுடைய நண்பனிடம்
சொல்லியிருந்தான். அவனும் வாங்கி வைத்திருந்து என் சகோதரனிடம் கொடுத்தான்.
குறிப்பிட்ட தினம் பெட்டி படுக்கையுடன் என்
சகோதரனும் அவனை வழியனுப்ப நானும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி முன்னதாக
காலை 10 மணி வாக்கில் சென்றோம் சென்றோம்..
அவனுடைய
டிக்கெட்டில்
’ G-பெட்டியில் 17வது பர்த்’ என்கிற மாதிரி
எழுதப்பட்டு இருந்தது. (இது 50 வருஷத்திற்கு முந்திய கதை).
புனா
ரயில் பிளாட்ஃபாரத்துக்கு வந்து நின்றது. அதில், G-பெட்டியைத் தேடிப்போய் வெளியே
ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தோம். ஷாக். அதில் என் சகோதரனின் பெயர் இல்லை.
பிளாட்ஃபாரத்த்தில்
இருந்த ஒரு டி.டி.ஆரிடம் டிக்கெட்டைக் காட்டி, விஷயத்தைச் சொன்னோம்.
அவர்
டிக்கெட்டைப் பார்த்து “ என்ன சார்...இது இன்னிக்குக் காலைல புறப்பட்டுப்போன 7 மணி
வண்டிக்கு ரிசர்வ் பண்ணியிருக்கிறது... அதைக் கோட்டை விட்டு விட்டீர்களே...”
என்றார். அது மெயில்..இது எக்ஸ்பிரஸ் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். அது எங்கள்
காதில் விழவில்லை.
“சார்...பர்த்
ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டோம்.
“இல்லை
சார்...எல்லாம் FULL என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.என்
தம்பியிடம், “நீ இங்கேயே பெட்டி படுக்கையுடன் இரு. நான் புக்கிங் ஆபீசில் போய்க்
கேட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி ஓடினேன். ஒரு ரயில் பெட்டியில் R.M.S என்று
போர்டு போட்டிருந்தது. நான் G.P.O -வில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அதைச் சொல்லி
R.M.S.காரரைக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே போனேன்.