February 22, 2016

பூங்கா ஸ்டேஷனில்..

கடவுள் கை கொடுத்த  கணங்கள்!

நம் வாழ்க்கையில் எத்தனையோ  மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன. மறக்க முடியாது என்று நாம் கருதிய நிகழ்ச்சிகளைப் பிறகு மறந்தே போய்விடுகிறோம்.  வேறு சில சம்பவங்கள் நிகழ்ந்த கணம் மனதில் உறைந்து விடுகின்றன – நடந்த தேதி, ஆண்டு போன்றவை மறந்து விட்டாலும்!
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். அவை என் வாழ்வில் நடந்தது என்பது முக்கியமே இல்லை.  ஆனால் இந்த சம்பவங்களில் எல்லாம் கடவுள்  கை கொடுத்த கணங்கள் உள்ளன.  கடவுள் ஒரு  SPLIT SECOND-ல் செய்த அற்புதங்கள் உள்ளன! இது தான் முக்கியம்.
சிலவற்றை  COINCIDENCE என்று சொல்லிவிடலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை அவை யாவும் கடவுள் செய்த அற்புதங்கள்தான்.
இது பல  EPISODE கொண்டது. ஒருதொடராகப் போடப் பார்க்கிறேன். 
  
மின்சார ரயிலில், மில்லி செகண்டில் நடந்த அற்புதம்!இது 
1956-ல் நடந்த சம்பவம்.

செங்கல்பட்டில் நான் இருந்த கால கட்டம். அப்போது என் இரண்டாவது  மூத்த  சகோதரருக்குக் கலியாணம் நிச்சயமாயிற்று. ஈரோட்டில் செப்டம்பர்  15-ம் தேதியென்று முகூர்த்தம் குறித்தாகிவிட்டது.  நிச்சயம் ஆன தேதி செப்டம்பர் 1!  அவரை விட மூத்த அண்ணா காஷ்மீரில் ராணுவ மருத்துவ மனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடிதம் போட்டோம், (போன் இல்லாத காலம் அது!) அவரிடமிருந்து ஒரு வாரம் கழித்துப்  பதில் வந்தது,  கட்டாயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அதற்குள் பெண் வீட்டார், 15-ம் தேதியை விட 14-ம் தேதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி முகூர்த்த தேதியை மாற்றிவிட விரும்பினார்கள். நாங்களும்  சம்மதித்தோம்.  அதன் பிறகு மறுபடியும், தேதி மாறியத் தகவலை எழுதி பெரிய அண்ணாவுக்குக் கடிதம் போட்டோம்..

ஒரு வாரம் கழித்து  நாங்கள் போட்ட கவர் திரும்பி வந்துவிட்டது. அந்தக் கவரின் மேல் "விலாசதாரர்  லீவில் சென்று விட்டார்” என்ற குறிப்பு இருந்தது. கலியாண தேதி மாறியது தெரியாமல் 14-ம் தேதி மாலை ஈரோடு வருவதற்குத் தக்கபடி அண்ணா ரிசர்வ் செய்திருக்கப் போகிறாரே  என்று நாங்கள்  கவலைப்பட ஆரம்பித்தோம். அதாவது  கலியாணம் முடிந்த பிறகு அண்ணா வந்தால் எல்லாருக்கும் ஏமாற்றமாகி விடுமே, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தோம். அதற்குள் கல்யாண நாள் நெருங்கி விட்டது. எல்லாரும் சென்னையில் பாட்டி வீட்டுக்குக் வந்து  விட்டோம்.  உறவினர்கள் எல்லாருக்குமாக  20, 25 சீட் பதிவு செய்திருந்தார் எங்கள் மாமா.  

டில்லியிலிருந்து  ஜி.டி வரும்போது சென்டரல் ரயில் நிலையத்திலேயே அண்ணாவைக் கண்டு பிடித்து, செங்கற்பட்டுப் போகவிடாமல், அப்படடியே ஈரோட்டிற்கு அழைத்துப் போய்விடலாம்  என்று திட்டமிட்டோம். சாயங்காலம்தானே ஜி. டி வருகிறது, அதற்குள், என் நண்பர் (இயக்குனர்) ஸ்ரீதரிடம் இருந்து காமிரா கடன் வாங்கி வந்துவிடலாம்  என்று, எண்ணி, காலை பத்து மணிக்கு  கோட்டை ஸ்டேஷனுக்கு  ரயில் ஏறவந்தேன்..
ரயில் – டபுள் யூனிட்- வந்தது. முதல் யூனிட்டில் ஏறினேன். அன்று ஞாயிற்றுகிழமை. ஆதலால் கூட்டமே இல்லை. ஜன்னல் சீட்கள் நிறைய காலியாக இருந்தது, ஒரு ஜன்னல் சீடடில் உட்கார்ந்தேன். 
.
ரயில் கிளம்பியது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் பார்க் ஸ்டேஷனிற்குள் வேகமாக  நுழைந்தது.  முதல் யூனிட்டில் உட்கார்ந்து இருந்ததால் ரயில் சற்று வேகமாகவே ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து பிளாட்பாரத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அங்கு,  நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பார்த்து ஷாக்.  திடீர்  என்று மின்சார ரயிலின் மின்சாரமே என் உடலில் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி. காரணம் அந்த நபர்… நம்ப மாட்டீர்கள்.. என்னுடைய மூத்த சகோதரர்தான்!

அதிர்ச்சி ஒரு செகண்டில் போய்விட்டது. அண்ணாவிடம் ரயில் ஏறாமல் இருக்கச்சொல்லி, வீட்டிற்கு அழைத்துப் போகவேண்டும். அடுத்த கணம், நான் தாவி இறங்கியது கண்டார், தலை தெறிக்க இரண்டாவது யூனிட்டிற்கு ஓடி “அண்ணா” என்று கத்தியதைக் கேட்டனர்! 
 அண்ணா அதற்குள் தன் ஹோல்டாலை வண்டியில் ஏற்றி விட்டார். “அண்ணா, ஏறாதீர்கள்.” என்று குரல் கொடுத்த்படியே ஹோல்டாலைத் தரதர என்று இழுத்து வண்டியிலிருந்து இறக்கி விட்டேன். “ என்னடா.. என்ன சமாச்சாரம்?” என்று திகைப்புடன் அண்ணா கேட்டார்.
விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். அதன் பின்தான் மூச்சு விட்டேன்!
“ எப்படி, காலையிலேயே வந்து விட்டீர்களே? ஜி,டி எக்ஸ்பிரஸ் சாயங்காலம் தானே வருகிறது? … நான் சாயங்காலம் சென்ட்ரலுக்கு வர பிளான் பண்ணி யிருந்தேன்”  என்றேன்.

“ உனக்குத் தெரியதா, .ஜி.டியின் நேரத்தை ஒரு வாரத்திற்கு முன்பு மாற்றி விட்டார்களே.. இனிமேல் காலையில்தான் சென்னைக்கு வரும்” என்றார்.

“அது சரி.. . கலியாண தேதி 15 இல்லை, 14-க்கு மாறிவிட்டது தெரியுமா?”என்று கேட்டேன்.

” தெரியாதே.”

“ லெட்டர் போட்டோம்.. நீங்கள் லீவில் போய்விட்டதாக எழுதப்பட்ட குறிப்புடன்  லெட்டர்  திரும்பி வந்து விட்டது. உங்களுக்கு எப்படித் தகவல் தெரிவிப்பது என்று தெரியாமல் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.. எல்லாரும் பாட்டி வீட்டுக்கு வந்து விட்டோம்.  இன்னிக்கு சாயங்காலம் ஈரோடு போகிறோம்.. மாம்பலம் போய்க் கொண்டிருந்தேன்.. நல்ல காலம், வண்டி ஸ்டேஷனுக்குள் வேகமாக நுழைந்த போது, பராக்குப் பார்க்காமல் பிளாட்பாரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.. நீங்கள் கண்ணில் பட்டதும் தெய்வச் செயல்… இல்லாவிட்டால் நீங்கள் செங்கல்பட்டுக்குப் போய், பூட்டி இருக்கும் வீட்டைப் பார்த்து ஏமாற்றமடைந்து இருப்பீர்கள்.. நானும்  ஜி.டியில் உங்களை எதிர்பார்த்து சாயங்காலம் சென்ட்ரலுக்குப் போய் ஏமாந்திருப்பேன்…  அதிருக்கட்டும், நீங்கள் எப்படி ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டீர்கள்” என்று கேட்டேன்.

“அதுவா..  ஒரு ராணுவ வீரருக்கு அவசர சிகிச்சை டில்லி ராணுவ மருத்துவமனையில் செய்ய வேண்டி இருந்தது. 
‘நீ தான் லீவில் போகிறாயே இவரை அழைத்துக் கொண்டு போய், அங்கு சேர்த்துவிட்டுப் போயேன், தனி விமானம் ஏற்பாடு செய்திருக்கிறோம்”என்றார் என் உயர் அதிகாரி.  சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். அதனால் ஒரு நாள் முன்னதாகவே டில்லி வந்து விட்டேன். எல்லாம் கடவுள் செய்த ஏற்பாடு!” என்றார்.

அடாடா, எத்தனை ஏற்பாடு செய்திருக்கிறான் ஆண்டவன்! கடவுளின் கருணை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அன்று மட்டுமல்ல,  இப்போது இதை எழுதும்போதும்!

அந்த சம்பவம் இப்போதும் வீடியோ மாதிரி மனக்கண்ணில் ஓடுகிறது. என்ன, கண்களில் நீர்த் திரையிடுவதால் காட்சிகள் சற்று மங்கலாகி விட்டன!

I am reminded of the beautiful poem by Angela Morgan

GOD THE ARTIST 

God, when you thought of the pine tree, 
    How did you think of a star?
God, when you patterned a bird song,
    Flung on silver string,
How did you know the ecstasy
    That crystal call would bring?
How did you think of a bubbling throat
     And a beautifully speckled wing?

God, when you fashioned a raindrop,
    How did you think of a stem
Bearing a lovely satin leaf
    To hold the tiny gem?
How did you know a million drops
     Would deck the morning's hem?
Why did you mate the moonlight night
     With the honey suckle vines?
How did you know Madeira bloom
     Distilled ecstatic wines?
How did you weave the velvet dusk
     Where tangled perfumes are?
God, when you thought of a pine tree
     How did you think of a star?
                 ---------------
My post script.
God, when you learnt about my brother's marriage and the problem we were facing, how did you make me spot my eldest brother for a fraction of a millisecond from a fast moving train at Park Railway Station?

7 comments:

  1. மெய்சிலிர்க்க வைத்துவிட்டது உங்கள் அனுபவம். நிச்சயம் கடவுள் செயல்தான்.

    ReplyDelete
  2. பலரின் வாழ்விலும் கடவுள் கை கொடுத்த கணங்கள் உள்ளன.ஆனால் என்ன அற்ப மனிதர்கள் அதை மறந்துவிடுவார்கள். ஆனால் நன்றியுள்ள உங்களை போன்றவர்கள்தான் அதை இன்னும் நினை கூர்ந்து மகிழ்ந்து கடவுள் கை கொடுத்த கணங்களை பற்றி பேசி மகிழ்ந்து வ்ருகிறீர்கள்

    ReplyDelete
  3. நிச்சயம் கடவுள் கிருபைதான்.

    ReplyDelete
  4. ஆச்சிரியமான விஷயம் தான். ஆனால் இந்த மாதிரி சம்பவங்கள் முன்கூட்டியே கடவுளால் மற்றும் நம் guardian angels திட்டமிடப்பட்டவை என்பது என் கருத்து.
    P.s : Periappa - 1956 is when my dad was 5 years old and Ravi Chitappa was born.

    ReplyDelete
  5. உண்மையிலேயே அதிசயமான நிகழ்வுதான்!

    ReplyDelete
  6. அதிசயம்தான். இதெல்லாம் சொன்னால் நம்புவது கடினம். பத்திரிகைகள் மாதிரி ஒவ்வொரு கட்டுரைக்கும் ரொம்ப இடைவெளி விடாதீர்கள். நான், என் கனவில் சத்ய சாய்பாபா வந்து இத்தனாம் தேதிக்கு உனக்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்வார்கள் என்று நான் துபாயில் இருந்தபோது சொன்னார். (அப்போ சென்னையில் என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் தொலைபேசித் தெரிந்துகொள்ளமுடியாது. ஆனான் என் குழந்தைகள் நான் சொல்வதைக் கேட்டு நம்பாமல் சிரிக்கிறார்கள். நமக்கு மட்டும்தான் தெரியும்.. கடவுள் நமக்கு உதவிய தருணங்களெல்லாம்...

    ReplyDelete
  7. Dear Sir,
    Very glad to see your blogs again after such a long time. It is nice too to read your experiences of Divine interventions in your life. Keep the blogs coming but do take care of your eyes and general health with due care.
    Regards,

    R. Jagannathan

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!