January 31, 2015

கதம்பம்....

 1.சில உண்மையான, அதே சமயம் நம்பமுடியாதத் தகவல்கள்

அ. மூக்கின் மேல் மூன்று விரல் 
     ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள், இன்னொரு குடும்பத்தின் இரண்டுசகோதரிகளை மணந்து கொள்வதுண்டு. இது சற்று அபூர்வமானது என்றாலும் பல குடும்பங்களில் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே குடும்பத்திலிருந்து மூன்று சகோதரர்கள், இன்னொரு குடும்பத்திலிருந்து மூன்று சகோதரிகளை மணந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டீர்கள். அப்படி மணந்து கொண்ட மூன்று ஜோடிகளில் ஒரு ஜோடியை எனக்குத் தெரியும். அவர்கள் என் சதாபிஷேக நிகழ்ச்சிக்கும் வந்து இருந்தார்கள்!

ஆ. பல வருஷங்களுக்கு முன்பு குமுதத்தில் வந்த துணுக்கு:
தூத்துக்குடியில் ஒரு தம்பதிக்கு 1963’ம் ஆண்டு மே 5.ம் தேதி  ஒரு குழந்தை பிறந்தது.
பிறகு இரண்டு வருடம் கழித்து, 1965 மே 5 தேதியன்று  இரண்டாவது குழந்தை பிறந்தது.
அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, 1967 மே 5 தேதியன்று  மூன்றாவது குழந்தை பிறந்தது!
குமுதத்தில் வந்த இந்தத் துணுக்கில் மேற்கொண்டு எந்த விவரமும் இல்லை! (சுமார் 50 வருஷத்திற்கு முன்பு படித்தது. ஊர் பெயர், தேதி இரண்டும் சரியாக நினவில் இல்லாததால் ஒப்புக்குப் போட்டுள்ளேன்.)
 

2.கிளு கிளு அறிவிப்பு
விமானப் பயணத்தின் போது விமானம் கிளம்பியதும்,.  விமான பணிப்பெண் சில பாதுகாப்பு அறிவிப்புகளைச் செய்வதுடன் அவைகளைச் செய்தும் காண்பிப்பார்.   அமெரிக்காவில் உள்ள  SOUTH WEST AIRLINES  விமானத்தில்  அறிவிப்புகளை வித்தியாசமாகவும், நகைச்சுவையுடனும் ( சில சமயம் ‘ஏ’ ரகமாகவும் - ‘பெரிய ’A’  இல்லை, சின்ன ’a’ தான்!) செய்கிறார்கள்!
சில அறிவிப்புகள்!  

உங்கள் காதலரை விட்டுப் பிரிந்து போவதற்கு  ஐம்பது வழிகள் உள்ளன. ஆனால் இந்த விமானத்திலிருந்து வெளியே செல்ல ஆறு வழிகள் தான் உள்ளன....”
"This flight is non-smoking. However, if you really feel the need to have a cigarette while we are in flight, please do feel free to step outside on to the wing."

 "I hope you choose Southwest the next time you want to fly in an aluminum tube, at 500 miles per hour, 10,000 feet in the air." 
"Everyone, we have a rare treat today, a first time flyer at the age of 93!"  (applause)  "His co-pilot will be..." 
After a fairly difficult landing, "Sorry folks for the bumpy landing. It wasn't the pilot's fault and it wasn't the plane's fault. It was the asphalt." 
"There is, in fact, a smoking section on this airplane. It is located on the tip of the left wing, where we will be featuring the film 'Gone with the Wind'"
•      To the tune of This Old Man:
We love you, you love us,
We're much faster than the bus,
We hope you'll come back for our hospitality,
Marry one of us and you'll fly free!

 Please remove your personal items from the seat next to you; even if you're saving it for your imaginary friend, we have actual passengers who would appreciate the seat!

•  "If you are travelling with someone that needs assistance, put on your mask first then assist the other passenger... unless it's my ex-boyfriend, then don't bother."
 •  "We've been cleared for departure. Whether you like it or not, this Boeing is going!"
•  "Cleared for departure. We're about to get really high and go reaaalllyyy faaassst."

"It will really boost our ego if you pretend to hear the safety instructions."

"If you don't like our flight, there are eight emergency exits. Feel free to walk out any time"
 
"If there's an emergency water landing, please put on the vest and paddle. Paddle, paddle all the way until you reach the shore" 
"We'll be dimming the lights to enhance the beauty of our Flight Attendants"
"You might experience a fast rush during take off and when ascending. They charge for that in Disneyland.      But, with us - it's free. Sit back and enjoy the ride."

 
3. வித்தியாசமான அறிவிப்பு
 

பல வருஷங்களுக்கு முன்பு நடிகர் ராஜேஷ் கன்னா பிரபலமாக இருந்த சமயம் பம்பாய் ஹோட்டல் ஒன்றில் வாஷ்-பேசினுக்குமேல் பொறுத்தப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு சிறிய அறிவிப்பை எழுதி இருந்தார்கள்.
அது: “ நீங்கள் ராஜேஷ் கன்னாவாக இருக்கலாம். ஆனால் இந்த வாஷ்பேசினுக்கு முன் நின்று கொண்டு தலைவாரிக்கொள்ள வேண்டாம்.
4. 105 வயதில்


GEORGE SELDES   ஒரு அந்தக்கால அமெரிக்கப் பத்திரிகையாளர். அந்தக்காலம் என்றால் 1930கள். அவர்  GREAT QUOTATIONS என்று ஒரு 1110 பக்க புத்தகத்தையும், GREAT THOUGHTS என்று ஒரு 540 பக்க புத்தகத்தையும் தொகுத்து இருக்கிறார். (லெனின். முஸோலினி, ஹிட்லர்  போன்றவர்கள் இருந்த கால கட்டத்தில் அவர் ஐரோப்பியாவில் பணியாற்றி இருக்கிறார். , லெனின், ஐன்ஸ்டீன். பெர்னார்ட் ஷா ஆகியவர்களிடம் தொடர்பு வைத்திருந்தாராம்.
1985 -ல் வெளியான GREAT THOUGHTS  புத்தகம் எனக்குக் கிடைத்தது..லேசாகப் புரட்டிப் பார்த்தேன். இருபத்தைந்து வருஷங்களில் திரட்டிய ஏராளமான குறிப்புகளை எட்டு வருடங்கள் அலசித் தொகுத்துள்ளார்.  இந்தப் புத்தகம் பத்து வருஷங்களில் சுமார் 11 லட்சம் காபிகள் விற்றுள்ளதாம்.

அதன் மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பை வெளியிடும் முயற்சியில்
GEORGE SELDES இறங்கினார். துரதிர்ஷ்டம் புத்தகம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அவர் 1995-ம் ஆண்டு காலமாகிவிட்டார்.  எந்த வயதில்? 105-வது வயதில்!

5 comments:

 1. South West Airlines அறிவிப்புகள் அனைத்தையும் ரசித்தேன்.

  அருமையான கதம்பம்.

  ReplyDelete
 2. Dear Sir, please share some from the book GREAT THOUGHTS

  ReplyDelete
 3. GREAT THOUGHTS புத்தகத்திலிருந்து சிலவற்றைப் பின்னால் போடுகிறேன்.-கடுகு

  ReplyDelete
 4. ஏர்லைன்ஸ் அறிவுப்புகள் அருமை. நான் பிளைட்டில் ஏறியவுடன், வெறுப்பது, ஒரேமாதிரியான அறிவுப்புகளை. அதனால் அதைக் கவனிப்பதேயில்லை. நகைச்சுவையான அறிவிப்புகள் நல்ல மூடுக்கும் கொண்டுவரும். அருமையான தகவல்கள்.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!