May 30, 2013

நாலு விஷயங்கள் - கடுகு


1. ஐயோ வேண்டாம் டீ! 
---- கமல் கொடுத்த குரல்!

டில்லியில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு எனக்கு அழைப்பு கிடைக்கும். 15 நாள் விழாநாள் ஒன்றுக்கு விஞ்ஞான் பவன் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 5,6 படங்கள் திரையிடப்படும். நிறையத் திரை  உலகப் பிரமுகர்களையும் சந்திக்க முடியும்.இந்த   விழாக்களுக்கு கமல்ஹாஸன்  வருவது உண்டு.

ஒரு திரைப்பட விழாவின் சிறப்புக் காட்சி, டில்லி கன்னாட் பிளேஸில் இருக்கும்  பிளாஸா தியேட்டரில்  திரையிடப்பட்டதுபடத்தைப் பார்க்க கமல் வந்திருந்தார். நானும் போயிருந்தேன்.

பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது ஒரு கலைப் படம்போதாதற்குசுரத்தில்லாத வாழ்க்கைஎன்பது  போன்ற தலைப்பு. படம் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

ஒரு காட்சியில் ஒரு ஏழ்மையான கிராமப்புற தாய் தன் பையனுக்கு டீ போட்டுக் கொடுக்கிறாள். தரையில் குந்தியபடி அடுப்பைப் பற்ற வைக்கிறாள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து அடுப்பின் மேல் வைக்கிறாள். தண்ணீர் கொதிக்கும் வரை, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு  பாத்திரத்தையே உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாலைந்து நிமிஷம் கழித்து தண்ணீர்ர் கொதிக்கிறது. தேயிலையைப் போடுகிறாள்.. ஒரு முழு நிமிஷம் கொதிக்கிறது. பிறகு பாலை அதில் விடுகிறாள். ஒரு நிமிஷம் காத்திருக்கிறாள். பாத்திரத்தை இறக்கி டீயை வடிகட்டி, ஒரு கப்பில் ஊற்றிப் பையனிடம் கொடுக்கிறாள்.

பையன் டீ குடிப்பதைச் சுரத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் சுமார் மூன்று நிமிஷம் டீயைக் குடிக்கிறான். பிறகு  தாயிடம் கப்பைக் கொடுக்கிறான். திரையில் இந்த காட்சி  சுமார் பத்து நிமிஷம் ஓடியது. ஒரு வசனம் கிடையாது! கிட்ட தட்ட ஸ்லோ மோஷனில் காட்டியிருந்தால் கூட இந்தக் காட்சிகள் இதை விட வேகமாகப் போயிருக்கும் என்று எண்ணும் அளவுக்கு நிதானமாகப் படம் போய்க் கொண்டிருந்தது
கப்பை வாங்கியபடி  தாய்: “ இன்னொரு கப் டீ போட்டுத் தரட்டுமா? என்று கேட்கிறாள்.
நம்புங்கள். தியேட்டரே எழுந்துநோ.. வேண்டாம்என்று கத்தியது. என் காதருகில் உச்சஸ்தாயியில்நோஓஓஓஓஎன்று ஒரு குரல் கேட்டது. ஆமாம்குரல் கொடுத்தவர் கமல்தான்.
இன்னொரு கப் என்றால் இன்னும் பத்து நிமிஷம் டீபோடுவதைப் பார்க்க வேண்டுமே என்ற கிலிதான் அனைவரையும் கத்த வைத்தது!


2. லுஃப்தன்ஸா
ஜெர்மன் நாட்டை சேர்ந்தலுஃப்தன்ஸா ஏர்லைன்ஸ்  (LUFTHANSA ) பற்றி ஒரு சுவையான தகவல் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது

லுஃப்தன்ஸா என்றால் என அர்த்தம்  என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். அது ஜெர்மன் மொழிப் பெயராக இருக்கலாம் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் ஒரு நண்பர் , சமஸ்கிருத மொழியின் உயர்வைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார் லுஃப்தன்ஸா என்ற பெயரில்  சமஸ்கிருதம் இருக்கிறது. LUFTHANSA என்பது  LUFT, HANSA என்ற இரண்டு வார்த்தைகளால் ஆனது.  LUFT  என்றல் ஜெர்மன் மொழியில் பறப்பது என்று பொருள். HANSA என்றால் ஹம்ஸப் பறவை.( இது சமஸ்கிருத பதம்!) LUFTHANSA என்றால் பறக்கும் ஹம்ஸப் பறவை என்று பொருள்!”

3. சுப்புடுவின்  THREE R's
இசை விமரிசிகர் சுப்புடுவிற்கு இரண்டு பிள்ளைகள்: ஒரு பெண். அவர்கள் பெயர்கள்: (ஸ்ரீ)ராம், ரவி, ராகினி.

சுப்புடுவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது அவர் வீட்டில்  THREE R's  உள்ளன என்று எழுதினேன். அதாவது Reading, 'Riting, 'Rithmetic  போல்  Ram, Ravi, Ragini இருக்கிறார்கள் என்று எழுதினேன். அதை அவர் மிகவும் ரசித்தார்.  
 4. குறும்புக்காரப் பயல் சொன்னது
இது சற்று பழைய விஷயம். ஆஸ்ட்ரோ-ஹங்கேரி ராஜ்ஜியத்தில் (AUSTRO-HUNGARIAN EMPIRE) நடந்ததாக பி.பி.சியில் ஒருத்தர் 1979’ல் சொன்ன தகவல்.

ஒரு உணவு விடுதியில் சாப்பிட்ட டின்னரைப் பற்றி ஒரு ஆசாமி
குறும்பாகச் சொன்ன அபிப்பிராயம்.

If the soup had been as warm as the wine, and the wine as old as the fish, and the fish as young as the maid, and the maid as willing as the hostess, it would have been a very good meal! 
(ஆதாரம்: MARK MY WORDS - NIGEL REES)
(இதைத் தமிழ்ப் படுத்த முயற்சித்தேன். திருப்திகரமாக வரவில்லை. யாராவது முயன்று பார்க்கலாமே!)

12 comments:

  1. கமல் குரல் கொடுத்தது சுவை... மூன்று ஆர் மேட்டர் ரசனை! லூப்தான்ஸா விளக்கமோ வியப்பு! ‌நாலு விஷயம் நாலுவிதமான உணர்வுகளை அளித்து வியப்பூட்டுதே ஸார்!

    ReplyDelete
  2. காபி தயாரிப்பது எப்படி? அந்தக் கொடுமையை நானும் ஒரு மலையாளப் படத்தில் பல வருஷங்களுக்கு முன் அனுபவித்தேன் ! அப்போதெல்லாம் மலையாளப் படங்களுக்கு மட்டும் தேசிய அவார்ட் கொடுப்பார்கள். நானும் அவர்களைப் போல் கலைத்தாகம் கொண்ட அறிவுஜீவியாக ஆக சில படங்களை பம்பாய் ஆகாஷவாணி தியேட்டரில் பார்த்திருக்கிறேன். கஷ்டம்! நான் பார்த்த படத்தில் இன்னும் நீட்டி இருப்பார்கள் - ஒரு மண்டபத்தில் அந்த பெண்மணி உட்கார்ந்திருக்க, ஒரு ஆள் அங்கு வந்து குத்துக்கால் போட்டு பீடியை பற்ற வைப்பான், பெண்மணி மண்டபத்தின் 18 படிகளிலும் ஸ்லோமோஷனில் இறங்கி, அரை மைல் நடந்து குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து மீண்டும் அரை மைலையும் ஒவ்வொரு அடியாக நடந்து, 18 படி ஏறி, 3 கல்லை சேகரித்து அடுப்பாக்கி .. முடியல! அந்த மாதிரி எத்தனை படங்கள்! கோயில் பூசாரி கையில் ஒரு சுருள் கத்தி மாதிரி வைத்து ஆட்டி க்கொண்டு செண்டை மேளங்களுடன் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருப்பார் - அரை மணி ! தமிழில் அக்ரஹாரத்தில் கழுதை என்று ஒரு அவார்ட் படம். ஒருவழியாக மலையாளிகளையும் குத்துப்பாட்டு படம் எடுக்க வைத்துவிட்டோம்! -ஜெ.

    ReplyDelete
  3. சுவாரசியம்.
    தமிழ்ப்”படுத்த” வேணாம்.. இப்படியே நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. நான்கு விஷயங்களுமே சுவாரசியம்.

    கடைசி விஷயம் ஆங்கிலத்திலேயே அருமையாக இருக்கிறதே!

    ReplyDelete
  5. அந்தக் காய்கஞ்சி (ஹி ஹி சூப்!) அவர் அளித்த கனிரசம் போல வெது வெதுப்பாக இருந்திருந்தால் .... அந்தக் கனிரசம் - பரிமாறப்பட்ட மீனைப் போன்று நாட்பட்டதாக இருந்திருந்தால் .... அந்த மீனோ பரிமாறிய இளம்பெண்ணைப் போன்று இளமையானதாக இருந்திருந்தால் ... பரிமாறிய இளம்பெண் விருந்தளித்த அம்மையார் அளவுக்கு விருப்பமுடையவராக இருந்திருந்தால் .... இந்த விருந்து மிகவும் சோபித்திருக்கும்!

    ReplyDelete
  6. கௌதமன் சார்.. தமிழ் 'படுத்தியிருக்கவே' வேண்டாம்! ஆங்கிலத்திலேயே அருமையாக இருந்தது!

    ReplyDelete
  7. KGG's 'kaaykanji - kanirasam' translation is good! - R. J.

    ReplyDelete
  8. Sorry. Tempting as it is to believe, the origin was Lufthansa's name has nothing to do with Sanskrit. Wikipedia say: The name of the company is derived from Luft (the German word for "air"), and Hansa (after the Hanseatic League). The Hanseatic League (also known as the Hanse or Hansa) was a commercial and defensive confederation of merchant guilds and their market towns that dominated trade along the coast of Northern Europe. It stretched from the Baltic to the North Sea and inland during the Late Middle Ages and early modern period (c. 13th to 17th centuries). The legacy of the Hansa is remembered today in several names, for example the German airline Lufthansa (i.e., "Air Hansa").

    ReplyDelete
  9. Sorry Kadugu sir. Tempting as it is to believe, the name Lufthansa does not originate from the Sanskrit word "Hans" for the swan. It is fully Germanic. Luft is Air and Hansa denotes an old commercial and defensive confederation of traders and merchants in northern Europe (especially Germany) called the Hanseatic League (also known as Hanse or Hansa).

    ReplyDelete
  10. Lufthansa - எப்படி படிக்கவேண்டும்? லுFட் ஹன்சா என்றா, இல்லை லுFதான்சா என்றா! - ஜெ.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!