---- கமல் கொடுத்த குரல்!
டில்லியில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு எனக்கு அழைப்பு கிடைக்கும். 15 நாள் விழா; நாள் ஒன்றுக்கு விஞ்ஞான் பவன் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 5,6 படங்கள் திரையிடப்படும். நிறையத் திரை உலகப் பிரமுகர்களையும் சந்திக்க முடியும்.இந்த விழாக்களுக்கு கமல்ஹாஸன் வருவது உண்டு.
ஒரு திரைப்பட விழாவின் சிறப்புக் காட்சி, டில்லி கன்னாட் பிளேஸில் இருக்கும் பிளாஸா தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க கமல் வந்திருந்தார். நானும் போயிருந்தேன்.
பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது ஒரு கலைப் படம். போதாதற்கு “சுரத்தில்லாத வாழ்க்கை”என்பது போன்ற தலைப்பு. படம் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.