April 29, 2013

சகுந்தலா தேவி

கம்ப்யூட்டரையே கணிதத்தில் வென்றவர் சகுந்தலா தேவி. 
 சமீபத்தில் காலமானார்.,

தன் ‘அபூர்வ’ சக்தியால் உலகப் புகழ் பெற்ற இவரைiக் கணக்குப் புலி என்றோ, கணித மேதை என்றோ, பிராடிஜி  என்றோ கூற முடியாது.அவரிடம் ஒரு அதிசய சக்தி இருந்தது. அது இறைவன் கொடுத்த அபூர்வத் திறமை. பெரியபெரிய எண்களைப் பெருக்குவது, வர்க்க மூலம், (ஸ்கொயர் ரூட். க்யூப்ரூட், கண்டு பிடிப்பது போன்ற திறமை இருந்தது.

சுமார் 40 வருஷத்திற்கு முன்பு அவரைச் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் சகஜமாகப் பேசினார்.

அவரிடம், “  பெரிய பெரிய கணக்குகளை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களால் எப்படி . போட முடிகிறது?  அந்த சமயங்களில் ஏதாவது ஆழ்மனதில் யோசிக்கிறீர்களா ? உங்களுக்கே உங்கள் திறமையைக் கண்டு வியப்பு ஏற்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டேன்.

“ எனக்கு விடை தெரிகிறது, சொல்கிறேன். எப்படி தெரிகிறது என்பதை என்னாலேயே  விளக்க முடியாது.  ... சரி.. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்... 17-ஐயையும் 18-ஐயையும் கூட்டினால் என்ன வரும்?”என்று கேட்டார்.

நான் உடனே  “35”என்றேன்..

“ சரி.. எப்படி இவ்வளவு சீக்கிரம் சொன்னீர்கள்? மனதிற்குள் கூட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

 ” இல்லை..இது என்ன பெரிய கணக்கு.. கூட்டாமலேயே எனக்கு விடைதெரியும்” என்றேன்


“ அதாவது உங்கள் மூளை எப்படிக் கூட்டியது என்று உங்களுக்குத் தெரியாது. அது மாதிரிதான் எனக்கும்.. மனதில் வரிசையாக எண்கள் தெரிகிறது” என்றார்.

“ நீங்கள் தூங்கும்போது கனவு காண்பதுண்டா?” என்று கேட்டேன்.

“ ஏன், காண்பதுண்டு. எல்லா விதத்தில்லும் நான் சாதாரணமானவள்தான்... இந்தத்  திறமை எப்படி எனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இப்படி அதிசயத் திறமை உள்ளவர்கள் பலர் பல நாடுகளில் இருந்துள்ளார்கள்” என்றார்.

( அவரது பேட்டியைக்  குமுதத்தில் நான் எழுதினேன்)’
தொடர்ந்து. ”நாளைக்கு டில்லி ஐ.ஐ.டியில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறேன் வந்து விடுங்கள்” என்றார். .மறுநாள் போனேன். நல்ல கூட்டம். மாணவர்களும் பேராசிரியர்களும் பெரிய பெரிய கணக்குகளை (விடையுடன்) தயார் பண்ணிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் கணக்குகளைச் சொல்லச் சொல்ல,  கடகட என்று விடைகளை சகுந்தலா தேவி போர்டில் எழுதினார்.

”கூட்டத்திலிருந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு எண்ணைச் சொல்லுங்கள்” என்றார்.  அதை மாணவர் போர்டின் மேல் பகுதியில் பெரிதாக எழுதிக் கொண்டே வந்தார். ” இன்னும் பத்து பேர் எண்களைச் சொல்லுங்கள்” என்றார். அதையும் போர்டின் கீழ்ப் பகுதியில் மாணவர் எழுதினார், இரண்டிற்கும் இடையே ஒரு பெருக்கல் குறியைப் போடச் சொன்னார்.

” சரி. விடையை எழுதிக் கொண்டே வாங்க” என்று சொல்லிவிட்டு,  ஜெட் வேகத்தில் எண்களைச் சொல்ல ஆரம்பித்தார்.


” விடை சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்த்து சொல்லுங்கள்”
பலர்  ‘சரியாக இருக்கிறது: என்று கத்தினார்கள். கூட்டம் அசந்து விட்டது!

சகுந்தலா தேவியின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் ரிகார்ட்ஸில்  இடம் பெற்றுள்ளது. இந்தத் திறமை அவருடைய மூப்பு காலத்திலும் இருந்ததா என்று தெரியவில்லை. அவருக்கு நம் அஞ்சலி.
                 =              =                =

 இதே மாதிரி திறமையுள்ள ஒரு பையனை, சகுந்தலா தேவியை  சந்திப்பதற்கு 15
வருஷங்களுக்கு முன்பு செங்கற்பட்டு- தாம்பரம் ரயிலில் சந்தித்து இருக்கிறேன், நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயம். தினமும் ரயில் பயணம்தான்.
அப்போது ஒரு நாள் ஒரு பையன் - சரியான கிராமத்துப் பையன் - எங்கள் பெட்டியில் வந்தான். அவன் எங்களைப் பார்த்து “ சார்.. ஏதாவது பெருக்கல் கணக்கு கொடுங்கள். உடனே விடை சொல்கிறேன்” என்றான்.
நாங்கள் பத்து பன்னிரண்டு கணக்குகளைக் கொடுத்தோம். பட், பட் விடைகளைச் சொல்லி அசத்தி விட்டான். பிறகு, ”சார், ஏதாவது பைசா கொடுங்கள்” என்று பரிதாபமாகக் கேட்டான். நாங்கள் எட்டணா, ஒரு ரூபாய் என்று திரட்டிக் கொஞ்சம் பணம் கொடுத்தோம்.

 “எப்படிடா,  உனக்கு விடையைக் கண்டுபிடிக்க முடிகிறது?” என்று கேட்டோம்.
அவனுக்குத் தெரியவில்லை. “ தெரிகிறது சார், அவ்வளவுதான்!:” என்றான்.

====
இதே மாதிரி அபூர்வத் திறமையுள்ள மற்றொரு சிறுவனைச் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன். அவன் டில்லிப் பையன்.
டில்லியில் சௌத் இந்தியன் தியேட்டரில் (இதன் டைரக்டர் சுப்புடு)  பரசு என்று ஒரு சீனியர் கேரக்டர் நடிகர் இருந்தார், அவருடைய பேரன் சிறுவனாக இருந்தபோது அவனிடம் ஒரு அபாரத் திறமை இருந்தது. எந்த வருஷம், எந்தத்  தேதியைச்  சொன்னாலும். அன்று என்ன கிழமை என்று சரியாகச் சொல்லிவிடுவான். எப்படிச் சொல்ல முடிகிறது என்று அவனாலும் விளக்கமுடியவில்லை,

அவனைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் கிழமை கேட்க ஆரம்பித்தார்கள். அதனால் அவனுடைய பெற்றோர்கள் அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவனிடம் கேள்வி கேட்பதற்குத் தடை விதித்து விட்டார்கள்! அவன் இப்போது நியூயார்க்கில் படித்துக் கொண்டிருக்கிறான்.

===
இரண்டு வருஷத்திற்கு முன்பு ஒரு புத்தகம் படித்தேன்.  MATHEMATICAL PRODIGIES பற்றிய புத்தகம். 16-ம், 17-ம் நூற்றாண்டுகளிலேயே இது மாதிரி திறமை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் இருந்தன.  குறிப்பு எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து சுவையான தகவல்களைப் பின்னால் போடுகிறேன்.

6 comments:

  1. நான் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கோவிந்தராஜ் என்று ஒருவர் (கோவையை சேர்ந்தவர் என்று ஞாபகம்) கணித நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார். பெருக்கல், தேதி மாதம் வருடம் சொன்னால், நாள் சொல்வது எல்லாம் செய்தார். ஆனால் அந்த மனிதர் முகத்தில் சிரிப்பே காணப்படவில்லை. அடிக்கடி தண்ணீர் குடித்தார். முகம் இறுக்கமாகவே காணப்பட்டது. கணக்குகளுக்கு விடை காண அவர் சிந்திக்கும் பொழுது மாணவர்கள் ஏதாவது சப்தம் செய்தால், கை கூப்பி, அமைதியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    ReplyDelete
  2. A gifted lady, indeed. With a request not to misunderstand me and with due respect to the departed soul, I would like to know your / others' opinions on how this 'talent' was useful or did anybody - a scientist or astronomer - made use of this talent? I know that she 'performed' in many stages to the admiration of the audience - but do you think if anyone felt the use of it? - R. J.

    ReplyDelete
  3. This is like stage magic,you are amaazed because you cannot do that. Remember the quotation I had posted earlier.: A horse which can count up to ten, is an amazing horse and not an amazing mathematician.
    This is mental circus or gymnastics. But still no one can deny that it is a great gift.--psr

    ReplyDelete
    Replies
    1. Thank you for the understanding and a honest response. I agree she was gifted and none else could do that. - R. J.

      Delete
  4. அஞ்சலிகள்

    ReplyDelete
  5. I guess this is kind of "super recall" autism. "Kim Peek" also had this kind of special recalling memory and the "Rain Man" movie is based on him.
    Please refer "http://en.wikipedia.org/wiki/Eidetic_memory" and "http://en.wikipedia.org/wiki/Kim_Peek".

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!