சிலவற்றைத் தவறான பொருளில் உபயோகிக்கிறோம். செம்மொழிக்குச் செய்யும் பணியாக ஒரு சில பழமொழிகளுக்கு ’சரியான’ விளக்கம் இங்கு தரப்படுகிறது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.\

அடி மேல் அடி அடித்தால் அம்மாமியும் நகர்வாள். கொடுமைபப்டுத்தும் மாமியாரை ஊருக்கு எப்படி அனுப்புவதாம். என்ன கேட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக் கொண்டே இருந்தால் ”போதுமடா சாமி” என்று சொல்லி ஊருக்குக் கிள்ம்பிப் போய் விடுவார்! யாரோ ஒரு கெட்டிக்கார நாட்டுப்பெண் கண்டுபிடித்த பழமொழி அல்லது சூத்திரம் இது,
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

இந்த பழமொழியின் சரியான உருவம் ”சும்மா இருந்த சங்கை ஊதி கொடுத்தான் ஆண்டி” என்பது தான்!
ஆண்டி சங்குக் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வந்து சங்கு வாங்குபவர்களுக்கு. சங்கை ஊதிக்காட்டிக் கொடுக்கிறான். இது தான் உண்மையான கருத்து.
காற்றுள்ளபோதே தூற்று
இது சரியான அபத்தப் பழமொழி. நமக்குக் கோபம் வரும்போது தூற்றிப் பேசக்கூடாது. இதற்காக காற்று வரும்வரை காத்திருக்க வேண்டுமா? அதற்குள் கோபம் ஆறிவிடாதா? அது மட்டுமில்லை, அவர் யாரைத் தூற்ற வேண்டுமோ அந்த ஆசாமி பேசாமல் காத்திருப்பாரா?

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
ஏதோ கழுதையை இகழ்ந்து கூறுவதாக நினைக்க வேண்டாம். “ நல்ல கற்பூரம் தானா? பார்த்து சொல்” என்று கழுதையிடம் கேட்பவன் அடி முட்டாள் .கற்பூர வாசனை அதற்குத் தெரியாது என்பதை அறியாதவன் வடிகட்டின ஆசாமியாகத்தான் இருக்க வேண்டும்.
மேலும் அது என்ன ஆறு கால பூஜை செய்து கற்பூர ஆரத்தி எடுக்கிறதா? இந்தப் பழமொழியின் முழு வாசகம்”: அட முட்டாளே. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? கழுதையிடம் கேட்பவனைப் பார்த்துச் சொல்வது.
தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே.
பார்த்தால் என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா? பார்ப்பது அநாகரீகம் என்ற பொருளில் அது கூறப்படவில் ஆபத்துதான் என்பதுதான் உண்மையான கருத்து,
தானமாகப் பெற்ற மாட்டை, தானம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க. அதன் வாயைத்திறந்து பல்லைப் பிடித்தால் அது சும்மா இருக்குமா? வெடுக்கென்று கடிக்கலாம்: அல்லது முட்டி விட்ம். ஆக, இந்த பழமொழி ஒரு எச்சரிக்கை வாசகம். அவ்வளவுதான்!
நல்ல விளக்கம். காலையில் படித்து ரசித்தேன்!
ReplyDeleteநகைச்சுவை தாளிப்பு அருமை. மாடு கடி,கழுதை உதை இரண்டும் அன்பவித்தவர் எழுதின மொழியாக இருக்கும் அந்தப் பழமொழிகள்:)
ReplyDeleteநன்றி கடுகு சார்,
IS this comedy are serious ?
ReplyDeleteகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
ReplyDeleteI heard, in olden days, the camphor will be kept with books in order to avoid worms/insects. A donkey, who is busy in eating, won't look for camphor smell.
தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே.
Age of cow & horse will be identified based on their teeth row only. So, do not check for age of the cow, which is given to you for free.
அம்மியை அடித்தல், ஆண்டி ஊதிய சங்கு, நோயுற்ற வாழ்வே... எல்லாப் பழமொழிகளுக்கும் அருமையான விளக்கம் தந்து அசத்திட்டீங்க! ரசிக்கவும் வெச்சுட்டீங்க ஸார்!
ReplyDeleteThoodtrudhal' also means a kind of winnowing for seoarating the grain from the chaff and needs strong air to blow away the lighter chaff
ReplyDelete<>
ReplyDeleteYes, I know that. The article was meant to give twisted explanation and interpretations to the proverbs!" =Kadugu
Madhav22 April 2013 5:38 pm
ReplyDeleteIS this comedy are serious ?
aha.. this is comedy. i am relling you seriously! -kadugu