November 19, 2012

நாலு பேரு சொன்னாங்க!

மே வேஸ்ட் சொன்னது:
ஹாலிவுட் நடிகை  மே வேஸ்ட் சரியான வாயாடி. அசைவ ஜோக் ராணி! அவரைப்பற்றி ஏராளமான துணுக்குகள் உள்ளன. பல அச்சில் போட முடியாதவை.
மே வேஸ்ட், தன்னுடன் நடிப்பவர்களை  மிஞ்சிவிடத்தான் பார்ப்பார். ‘நைட் ஆஃப்டர் நைட்’ என்ற படத்தில் அவருடன் நடித்த அலிஸன் ஸ்கிப்வொர்த்திற்கு பல சீன்களில் நடிக்க வாய்ப்பே தராமால், தன்னைத்  தானே  முன்னுக்குத் தள்ளிக்கொண்டார். ஷூட்டிங் முடிந்ததும்,  அலிஸன் கோபமாக அவரிடம் “இத பாரு, உனக்கு ஒண்ணு சொல்றேன், , நான் ஒரு நடிகை என்பதை தெரிஞ்சுக்கோ” என்றார் .
மே வேஸ்ட், ” அப்படியா...? கவலைப்படாதே.. நீ சொன்ன ரகசியத்தை யார் கிட்டேயும் நான் சொல்லமாட்டேன்!” என்றார் கூலாக!
==========================
பிக்காஸோ சொன்னது
உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ ஒரு குறும்புப் பேர்வழி. ஓவியங்கள், சிலைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏராளமாக
உருவாக்கியவர்.
(50,000 -க்கு மேல் இருக்குமாம்  .

அவருடைய  வண்ண ஓவியங்களை அதிக அளவில் வாங்கியவர் கெர்ட்ரூட் ஸ்டீன் என்ற அமெரிக்கப் பெண்மணி.
கெர்ட்ரூட்டை வண்ண ஒவியமாக  பிக்கஸோ வரைந்தார். அதைப் பார்த்த ஒருவர் , பிக்காஸோவிடம், ”நீங்கள் வரைந்த ஓவியம் மாதிரியே கெர்ட்ரூட்  இல்லையே?” என்றார்.”
”அப்படியா.. கவலைப்படாதீர்கள்! சீக்கிரம் அது மாதிரி ஆகிவிடுவார்!” என்றார் பிக்காஸோ அலட்டலாக!

+    +  +
பிக்காஸோவின் ஒரு ‘பொன்மொழி” மறக்க முடியாதது.
அவர் சொன்னார்: என் அம்மா எனக்குக் கொடுத்த அட்வைஸ்: ” நீ ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தால் மேஜர் ஜெனரலாக வேண்டும்.  சர்ச்   பாதிரியானால், போப்பாண்டவராக ஆகவேண்டும்:” இதைப் பல தடவை சொல்லியிருக்கிறார்.  நான் என்ன செய்தேன் தெரியுமா? ஓவியன் ஆனேன். அதனால் பிக்காஸோவாக ஆனேன்!"
(I became an artist and became Picasso!)


பிரிட்டிஷ் பிரதமராக இருந்த  மார்க்கரெட் தாட்சர் சொன்னது.

சில ஆண்டுகளுக்குமுன்பு  (1996)அமெரிக்கவில் நேஷ்வில் நகரில் உள்ள வேண்டர்பில்ட் சர்வகலாசாலை மாணவர் விடுதியில் இரண்டு நாள் தங்கி இருந்தேன். அந்த வார  இறுதியில்  சர்வகலாசாலை மைதானத்தில் மார்க்கரெட் தாட்சர் பேசப்போவதாகவும் நுழைவுக் கட்டணம் 20 டாலரோ ( 30 டாலரோ?) என்று சொன்னார்கள்.” என்னது, மைதானக் கூட்டத்திற்கு டிக்கட் வாங்க வேண்டுமா? என்று கேட்டேன்.. “ஆமாம். இன்றைய தேதியில் கூட்டத்தில் பேச, அதிகப் பணம் வாங்குபவர்  தாட்சர் தான்” என்றார்கள். (இத்தனைக்கும் அப்போது அவர் பிரதமராக இல்லை!)

தாட்சர்  தன் உரைகளில் எப்போதும் ஏராளமாகப் பொன்மொழிகளைச் சொல்வார்  என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரை பற்றிய ஒரு சுவையானத் துணுக்கைப் பார்க்கலாம்.
1978’ல் தாட்சர்  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம்  ஒரு பொதுஜனத் தொடர்பு அதிகாரியை நியமிக்க விரும்பினார். பிரபல விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டிம் பெல் என்பவர் பேட்டிக்கு வந்தார். அவரிடம் தாட்சர் கேட்ட ஒரு கேள்வி: “ உங்களுக்குப் பிடித்தமான கவிதை எது?”
“ ராட்யார்ட் கிப்ளிங் எழுதிய  ‘இஃப் ’(IF)  என்ற கவிதைதான்" என்றார்  டிம். ”அப்படியா,  எனக்கு பிடித்த கவிதையும் அதுதான் . உடனே வேலைக்குச் சேர்ந்து விடுங்கள்.. வெரிகுட்.. உரை தயாரிக்கும்போது  நம் இருவருக்கும்    ஐடியாவில் இணக்கம் இருக்கும் ” என்றார் தாட்சர்
(அந்த அற்புதமான இஃப் கவிதையைக் கடைசியில் தருகிறேன்.)
*                        *                   *
தாட்சரின்   பொன்மொழிப் பித்தைப் பற்றி சமீபத்தில் ஒருபுத்தகத்தில் படித்ததைக் கூறுகிறேன்..
ரொனால்ட் மில்லர் என்பவர் முதன்முதலில் தாட்சருக்கு ஒரு சொற்பொழிவு உரையைத் தயாரித்துக் கொடுத்தார். அதில் ஆபிரகாம் லிங்கனின்  DON'T MAKE THE RICH POORER; MAKE THE POOR RICHER" என்ற  பொன்மொழியைச் சேர்த்திருந்தார். தாட்சரிடம் உரையைக் கொடுத்தார்.
மில்லர் எழுதுகிறார்: ”உரையை வாங்கி மேலெழுந்த வாரியாகப் படித்த தாட்சர், சட்டென்று கைப்பயைத் திறந்து துழாவினார்.ஒரு கசங்கிய பழுத்துப் போன காகிதத்தை எடுத்தார். அதில் இதே பொன்மொழி எழுதப்பட்டிருந்தது!. இதை நான் எங்கு போனாலும் எடுத்துச் செல்வேன்.’ என்று என்னிடம் சொன்னார். அதன் பிறகு அவருக்குப் பல உரைகளைத் தயார் செய்து கொடுத்து இருக்கிறேன்.”

நடிகர் கிரிகோரி பெக் சொன்னது.
நடிகர்  கிரிகோரி பெக் திரை உலகில் அப்போதுதான் நுழைந்திருந்தார். ஓரளவு பெயரும் பெற்றிருந்தார். அந்த சமயத்தில் அவர் தன் நண்பருடன் நியூ யார்க்கில் உள்ள மிகப் பிரபல ஹோட்டலுக்குச் சென்றார். அந்த ஹோட்டலில் வி,ஐ,பி.களுக்கு டேபிள் ரிசர்வ் செய்து கொடுப்பார்கள். அங்கு இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
கிரிகோரி பெக்கின் நண்பர் அவரிடம்,” மேனேஜரிடம் போய் நீ யார் என்று சொல். டேபிள் ரிசர்வ் செய்து தருவார்” என்றார்.
“ நான் சொல்ல மாட்டேன். அப்படி நான் சொல்லித்தான் அவருக்குத் தெரிய வேண்டுமென்றால், நான் வி.ஐ.பி.யே இல்லை!” என்றார் பெக்!
 ====================== 

If  ----Rudyard Kipling



If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too:
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don't deal in lies,
Or being hated don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise;


If you can dream---and not make dreams your master;

If you can think---and not make thoughts your aim,
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same:.
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build'em up with worn-out tools;

If you can make one heap of all your winnings

And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings,
And never breathe a word about your loss:
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: "Hold on!"

If you can talk with crowds and keep your virtue,

Or walk with Kings---nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
If all men count with you, but none too much:
If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run,
Yours is the Earth and everything that's in it,
And---which is more---you'll be a Man, my son!

  #######                    

4 comments:

  1. நல்லாவே சொல்லி இருக்காங்க...

    நன்றி...

    ReplyDelete
  2. பிக்காஸோ சொன்னது டாப். மற்ற அனைத்துமே ரசனை. அருமை.

    ReplyDelete
  3. Amazing! I am talking about Mae West, Thatcher, Picasso, Tim Bell, Rudyard Kipling and K for keeping notes of all these anecdotes and sharing this wonderful post with us. I may not remember all for long but you make my days whenever I read your posts. - R. J.

    ReplyDelete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!