உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-1
முன்குறிப்பு: அடுத்த மூன்று அல்லது நான்கு பதிவுகள் ஒரு தொடர்ப் பதிவாகப் போட எண்ணியுள்ளேன்.. ஆங்கில நகைச்சுவை கட்டுரை ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு 3,4 பகுதிகளாக வரும்.
யார் அந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பதைப் பின்குறிப்பில் தெரிவிக்கிறேன். எழுதியவர் யார் என்று யூகித்து முதலில் எழுதுபவர் ஒருவருக்கு என்னுடைய “கமலாவும் நானும்” புத்தகம் பரிசாக ( அல்லது (தண்டனையாகத்!) தரப்படும்
ஒரே நிபந்தனை: அவர்களுடைய முகவரி இந்தியாவிற்குள் இருக்க வேண்டும்
..--------------------
என்னுடைய பரம்பரை காரணமாகவோ என்னவோ,. எந்த வித உடற்பயிற்சியோ, டயட்டோ இல்லாமல் என் உடல் ஒரே அளவில் இருந்து வருகிறது. எத்தனையோ வருஷங்களாக சூட் வாங்க ரெடிமேட் கடைக்குப் போனால் 39 சைஸ் எடுத்து மாட்டிக்கொண்டு, ஜம்மென்று ராஜ நடைப் போட்டுக்கொண்டு வந்து விடுவேன். (முதலில் அதற்குப் பில் போட்டு பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பது முக்கியம்!)
எனக்குப் பேன்டின் கால்பக்கம் மடிப்பு இருக்கவேண்டு. சில சமயம் அவசரமாக வாங்கும்போது இதையெல்லாம் பார்க்க முடியாது. மடிப்பு இல்லாவிட்டாலும் வாங்கி விடுவேன், நானே மடித்துக் கொண்டு நடையைக் கட்டுவேன்.
இரண்டு பேருடைய கைரேகை எப்படி ஒரே மாதிரி இருக்காதோ, அது மாதிரிதான் நமது உடல் அமைப்பும், ஆகவே சற்று ஏறக்குறைய இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி விடுவேன்,
என் வலது தோள் , என் இடது தோளை விட உயரம் குறைந்து இருக்கும். இதற்கு ‘ஸ்வே பேக் என்று பெயராம். டாக்டர்கள் சொன்னார்கள். இதைவிட சற்று தபுடலான, செல்வச்செழிப்பை பிரதிபலிக்கக்கூடிய பதமாக இருந்திருந்தாதால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். உடலமைப்பில் இந்த சிறிய குறை இருந்தாலும் நான் என்றும் ஒல்லியான 39 தான்!
இப்படி இருக்க எதற்கு ஹாங்காங் தையற்காரரிடம் ஒரு சூட் தைக்கச் சொன்னேன்? முக்கிய காரணம் எதுவும் இல்லை.. அன் சொந்த வேலையாக ஹாங்காங் .போனேன். அதனால் அங்கு சூட் தைக்கக் கொடுக்க வேண்டியதாயிற்று.
நான் ஹாங்காங் போகிறேன் என்று சொன்னதும் என் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஹாங்காங்கிலுள்ள தங்கள் ஒஸ்தி தையற்காரரிடம் கட்டாயமாக நான் ஒரு சூட் தைத்துக்கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்திக்காதக் குறையாகச் சொன்னார்கள்.
ஹாங்காங் பக்கமே போயிராத நண்பர்களுக்கு, ஹாங்காங் போய் வந்த நண்பர்கள் இருந்தது மட்டுமல்ல , அவர்கள் சூட் தைத்துக்கொண்ட தையற்காரரின் விவரங்களையெல்லாம் இவரிடம் சொல்லியிருந்தார்கள்!