May 07, 2012

மோனா லிசா


 


உலகப்புகழ் பெற்ற  மோனா லிசா ஓவியத்தைப் பற்றி ஒரு செய்தியைப் பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.
 பாரீஸில் லூவ்ர் மிஸியத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியம் ஒரு நாள் திருடு போய்விட்டது. இரண்டு வருஷத்திற்குப் பிறகு தான் அது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் படித்திருக்கிறேன்,
ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை, உங்களிடம் யாராவது ‘மோனாலிசா ஓவியம் திருடு போய் அப்புறம் அகப்பட்டதாமே?” என்று கேட்டால், “ ஆமாம்..,,இத்தனை பிரபலமான ஓவியம் திருடு போகிற அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறார்களே. பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்களா?” என்றுதான் கேட்டிருப்பீர்கள்.

அதை விடுங்கள். என் மனதில் எழுந்த ஒரு கேள்வியைச் சொல்லுகிறேன்,
 சரி, இந்த ஓவியத்தைத் திருடியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?அது, அந்த காலத்திலேயே (1911) 50 லட்சம் டாலர்  மதிப்புள்ளது, யார் வாங்குவார்கள்? வாங்கி வீட்டில் வைக்க முடியுமா?  யாரும் வாங்க மாட்டார்கள்  என்று தெரிந்தும் ஏன் அது திருடப்பட்டது?
இது பற்றி  தகவல்களைத்  திரட்டினேன்,

முதலாவது அந்த மியூசியத்தில் இருந்த பல அற்புதமான ஓவியங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவ்வளவு பிரபலமான  ஓவியமல்ல. பார்க்கப்போனால் அது திருடு போய்  மீண்டும்  அகப்பட்டதால்தான் அதற்குத் திடீர் பிராபல்யம் கிடைத்தது என்கிறார்கள்.
 சுமார் 200 அறைகள் கொண்ட அந்த மியூசியத்தில் அவ்வளவு அதிக பாதுகாப்புகள் கிடையாதாம். திருடு போனதே  தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.
1911’ம் ஆண்டு 21’ம் தேதி  அதை படம் எடுக்க ஒரு போட்டோகிராபர் போனார். வழக்கமான இடத்தில் அது காணவில்லை,  “ “எங்கே மோனாலிசா படம்?” என்று விசாரித்ததும்தான் மியூஸிய அதிகாரிகளுக்கு  படம் திருடு போனது தெரிந்தது!

அதை விற்கமுடியாது என்று தெரிந்தும் யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள்.
பாரிஸில் இருந்த பல ஓவியர்களிடம் போலீஸ் விசாரித்தது. ( பொறமை காரணமாகக்கூட அதைத்  திருடி மறைத்து வைத்திருக்ககூடும். ( ஓவியர் பிக்காஸோவையும் கூட விசாரித்தார்களாம்!)
பல மாதங்கள் வலை வீசியும்ஓவியம்  கிடைக்கவில்லை, ஆனால் அந்த படத்தை பலவித வியாபாரப் பொருளாகச் செய்து நிறைய பேர் விற்க ஆரம்பித்தார்கள்.
போதக்குறைக்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்க (!) மியூசியத்தில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது!

சுமார் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் இருந்த கெரி என்ற  ஒரு ’ஆர்ட்’ வியாபாரிக்கு ஒரு கடிதம் வந்தது.
 “மோன லிசா ஓவியம் இத்தாலி ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்தது. இந்த பொக்கிஷம் இத்தாலிக்குச் சொந்தமானது, பிரான்சில் அது இருக்கக்கூடாது. மோனாலிசா  ஓவியம் என்னிடம் இருக்கிறது. அதை இத்தாலிக்கேத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்காக எனக்கு ஒரு சிறிய தொகை  தரவேண்டும்” என்று கடிதத்தில் எழுதி இருந்தது. கீழே ‘லியானார்டோ வின்சென்ஸா” என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது,
அவனுடன் தொடர்பு கொண்டு அவனைக் கெரி சந்தித்தார், ஓரு தொகை தருவதாகச் சொல்லி ஓவியத்தை வாங்கி கொண்டு வந்தார், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்,

லியானார்டோ வின்சென்ஸா கைது செய்யப்பட்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனை கொடுத்தது,
 அதன் பிறகுதான் மோனாலிசாவின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது! 



 -------------------------------------
இங்கு இரண்டு நையாண்டி படங்கள்  1.மோனாலிசா  பார்பி!
2.  மோனாலிசா MAD Magazine


8 comments:

  1. மோனாலிஸா ஓவியம் பற்றிய செய்தி அருமை!
    என்னுடைய ஆஃபீஸ் ரூமில் வைக்கலாம் என்று இருக்கிறேன்..
    கீழ் ஹால் முழுக்க ரவிவர்மா ஓவியங்கள்..அதிலும் குறிப்பாக தாமரை இலையில் துஷ்யந்தனுக்கு சகுந்தலை தன் நகத்தில் லிகிதம் வரைந்த படம்!

    ReplyDelete
  2. இப்படி ஒரு புகழ்பெற்ற ஓவியம் தன்னிடம் இரு்க்கிறது என்ற எண்ணம் தரும் மனத் திருப்திக்காகக் கூட திருடியிருப்பானோ என்னவோ? விந்தைத் திருட்டுதான்! மோனாலிஸா பார்பி அழகாவே இருக்கு!

    ReplyDelete
  3. I have heard / read about Museum heists when Art works have been burgled. I also think that many expensive art works are for private collection only by people who do not know what to do with their money (easy money!). - R. J.

    ReplyDelete
  4. அந்த திருடன் ஒரு கலைஞனாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
  5. அந்த ரெண்டு வருஷமும் "போனா லிசா" ன்னு அறிவிப்பு மாட்டி இருந்தாங்களா?

    ReplyDelete
  6. இப்பல்லாம் சினிமா ஹிட் ஆக எது எதுவோ பண்றாங்க.. அப்ப இந்த மாதிரி செஞ்சுட்டாங்களா..

    ReplyDelete
  7. I visited the Museum once and it didn't impress me much when I was seeing. Even though I am not sure of the originality, I took a photo infront of Monolisa just for interest. I personally believe that this is a very good example for branding. People come to know about Monolisa in their early childhood stage itself. I dont know how many people in the world really looked the image with a interest to understand.
    Since you have been in the marketing field very long time, I would like to know your view on this.
    - Raghothman

    ReplyDelete
  8. ரொம்ப ஹைப் கொடுப்பவைகளுக்கு, 'அப்படி என்ன இதில் இருக்கு' என்ற அலட்சிய கமென்ட் வருவது சகஜம்தான். பலர், 'தாஜ்மஹால்' வெறும் பளிங்குக் கற்கள் கொண்டு செஞ்ச கட்டிடம்தானே, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் வரமுடியுமா என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

    அந்த ஓவியத்தை டாவின்சி பல வருடங்களாக தன்னுடன் வைத்திருந்து மெருகேற்றிவந்தார் என்று படித்திருக்கிறேன். லூவர் மியூசியத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அங்கு 'ஹைப்' கொடுத்து வைத்திருக்கும் பல ஓவியங்கள் எனக்கு, 'பூ இவ்வளவுதானா? இதில் என்ன இருக்கு' என்றெல்லாம் தோன்றியிருக்கு. அவைகளைப் படமெடுத்து வைத்திருக்கிறேன்.

    இந்த மோனாலிசா ஓவியம், எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்ப்பதுபோல் இருக்கும். ரொம்ப கூர்ந்து கவனித்தால் பெயின்ட் உதிர்வதுபோல் இருக்கும். 'இது யார்' என்பதில் நிறைய gossips உண்டு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!