ஈவினிங் நேரத்திலே...
ஈவினிங் நேரத்திலே - சகியே
ஈஸ்டர் விடுமுறையில்
கூவம் நதிக் கரையின் பார்க்கில்
குஷியாய் வீற்றிருந்தேன்.
சிகரெட்டுப் புகையும் - சகியே
ஜிம்மென் றடித்ததடி
புகைச் சுருளோட்டம் - பின்னிருந்து
புரண்டு வந்ததடி
திரும்பிப் பார்த்தேனடி - கிளியராய்
தெரியவில்லையடி
விரும்பும் ஓர் உருவம் - புகைக்குள்ளே
‘விசிபிள்’ ஆச்சுதடி
எங்கோ பார்த்த முகம் - ஒரு ‘யங்
லேட்’ அங்கு நின்றான்
இங்கே வந்தனையே - என்றே
இங்கிதம் பேசலுற்றான்
‘கர்லிங் கிராப்’ அழகும் - கழுத்தில்
கட்டிய டை அழகும்
‘மிர்ரர்’ அதைப் போல - மின்னி
மிளிரும் ‘பேஸ்’ அழகும்
மிகைப்படுத்துவானேன் - அவனோடு
‘மிக்சர்’ ஆகி விட்டேன்.
வாயிற் புகையினையே - குப்பென்று
வானத்தில் ஊதிவிட்டு
காயும் உதடசைத்து - அவன் சொன்ன
கதையைக் கேளடியோ
பேப்பர் மலர் அழகின் - பேஷனில்
பேதித்து விட்டாயடி
‘வேப்பராய்’ப் போகுதடி - என்னாவி
வெந்து புழுங்குதடி
‘ஸ்பெக்ட்’ விழிகளிலே - என்னை
எக்ஸ்பெக்ட் பண்ண வைத்தாய்
‘சஸ்பெக்ட்’ வேண்டாமடி - உனக்கு
சரணம் என்றானடி
‘பார்க்கிங் டாக்’ ஒன்று - எங்கிருந்தோ
பாய்ந்து வந்ததடி
ஆர்க்குத் தெரியாதடி - அப்பவே
அப்ஸ்காண்ட் ஆகிவிட்டான்.
‘ஹார்ட்’டைக் கவர்ந்து சென்ற - அந்தக்
கள்வன் நினைவினில் ‘கிளாத்
மார்ட்’டும் பிடிக்கவில்லை - ஹேர்ஆயில்
மணமும் சகிக்கவில்லை
வெள்ளைச் சுனோவினிலே - என்னமோ
வெப்பத்தைக் கண்டேனடி
சள்ளை பிடித்த பெளடர் - எனக்கு
சஞ்சலம் தந்ததடி
என்ன படித்தாலும் - மூளையில்
ஏறுவதில்லை யடி
என் மார்க்கெல்லாமே - பரீட்சையில்
டென்மார்க் ஆச்சுதடி
ரேஷன் குறைவது போல் - எடையின்
ரேட்டில் குறைந்தேனடி
காசம் பிடித்தவள் போல - தினமும்
கரையலுற்றேனடி
‘இன்ஜக்ஷன்’ செய்தாலும் - படிப்பு
இம்மியும் வரவில்லை
‘கன்ஜக்ஷ’னும் கூடச் - சகியே
‘ஹார்ட்’டில் நிற்கவில்லை.
ஸாரி என் சகியே - அவனைச்
சந்தித்தே தீர வேண்டும்
மேரி பண்ண வேணும் - இல்லையேல்
வீழ்ந்து மடிய வேணும்
இது மாதிரி ” These are all my favourite things" 'Jack and Jill went up the hill" " அந்த நாள் முதல் இந்த நாள் வரை”, “Mary had a little lamb", பாட்லகளுக்கும், : கட்டபொம்மன் வசனஙகளுக்கும் . ஜூலியஸ் சீசரில் மார்க் அண்டனியின் உரைக்கும் பல நையாண்டிகள் உள்ளன, பின்னால் அவைகளைத் தருகிறேன்!
அடடா... இப்படிக் கூட கவிதை எழுதலாமா? தமிங்கிலீஷ்ல இருந்தாலும் ரசிக்கவும், குபீர்னு சிரிக்கவும் வெச்சுடுத்தே!
ReplyDelete‘மிர்ரர்’ அதைப் போல - மின்னி மிளிரம் ‘பேஸ்’ அழகும்மிகைப்படுத்துவானேன் - அவனோடு ‘மிக்சர்’ ஆகி விட்டேன்.
ReplyDeleteநானும் மிக்சர் ஆகிவிட்டேன்.. சூப்பர் கவிதை..
சூப்பர் கவிதை....
ReplyDeleteஆங்கிலமும் தமிழும் கலந்து கலக்கி இருக்கிறார் அந்த கவிதை எழுதியவர்.
சுவையான கவிதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.
என்ன ஒரு ஒரிஜினல் தமிழ் நடை! இதை டைம் மேகஸினிலும் போடலாம் - மொழி பெயர்க்காமலேயே! - ஜெ.
ReplyDeleteஹா ஹா ஹா.. நல்ல காமெடி சார்
ReplyDeleteநானும் ஒரு கவிதை இதுமாதிரி முயற்சிக்கவேணும்ன்னு இருக்கு !
ReplyDeleteஇந்த கவிதையில் தமிழைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு ஆயிரம் கடுகு இனாம்!
ReplyDeleteஇந்த பாடல் ஒய் திஸ் கொலை வெறி ‘கீர்த்தனை’க்கு முன்னோடி- --கடுகு
ReplyDelete