August 16, 2011

என் கையேடு:: தப்பிப் பிறந்த மேதை

ஒரு மகப் பேறு மருத்துவர் தனது நண்பரான மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வந்தார்.
:” டாக்டர்.. ஒரு சின்ன அட்வைஸ்.. ஒரு குடும்பத்தில் அப்பாவுக்கு ஒரு தீராத நோய்.. அம்மாவுக்கு காச நோய். அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தைக்குக் கண்பார்வை இல்லை. இரண்டாவது, பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது. மூன்றாவது குழந்தை ஊமை- செவிடு. நான்காவது குழந்தைக்கு டி..பி.... இப்போது அந்த தாய் மறுபடியும் கர்ப்பம். இந்த நிலையில் அவர்களுக்கு என்ன  யோசனை சொல்லலாம்?” என்று கேட்டார்.
இரண்டாவது  டாக்டர் சொன்னார்,” இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நானாக இருந்தால் அந்தப் பெண்ணின் கருவைக் கலைத்து விடுவேன்...”
“ அப்படியா?.. நல்ல காலம் .. உங்கள் யோசனைப்படி சுமார் 250 வருஷத்திற்கு முன்பு  ஒரு டாக்டர் செய்திருந்தால்,  பிறப்பதற்கு முன்பே பீத்தோவனைக் கொன்றிருப்பார்!:

ஆம்.. பீத்தோவன் என்ற  இசை மேதை இப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்தார்!

3 comments:

  1. //.. நானாக இருந்தால் அந்தப் பெண்ணின் கருவைக் கலைத்து விடுவேன்...”
    “ அப்படியா?.. நல்ல காலம் .. உங்கள் யோசனைப்படி சுமார் 250 வருஷத்திற்கு முன்பு..// ஒரு பீத்தோவனுக்காக எத்தனை குழந்தைகள் கழ்டப்பட்டன? (அவரும் காது கேளாதவர் தானே). காச நோய் அவதியுடன் குழந்தைகளப் பெற்ற அந்த பெண்மனி எவ்வளவு கழ்டப்பட்டிருப்பாள்? குழந்தைகள் கழ்டத்தைப் பார்த்து எவ்வளவு நொந்திருப்பாள்? பீத்தோவனின் அப்பா ஒரு மனசாட்சியில்லாத மிருகமாய் இருந்திருக்க வேண்டும். (ஆனானப் பட்ட கண்ணனுக்காக 7 குழந்தைகளைப் பெற்று கொலை செய்யப்பட காரணமாயிருந்த - அதுவும் சிறையிலிருந்த போது - வசுதேவரும் தேவகியும்கூட எனக்கு இந்த மாதிரியாகத்தான் தோன்றுகிறார்கள்). - ஜெ.

    ReplyDelete
  2. யாராவது பதில் எழுதியிருப்பார்களோ என்று பார்த்தேன். கஷ்டம் என்பதை ‘கழ்டம்’ என்றே எழுதியிருப்பதைப் பார்த்து, கஷ்டப்பட்டுவிட்டர்கள் போலிருக்கிறது. - ஜெ.

    ReplyDelete
  3. <<< Jagannathan said... சிறையிலிருந்த போது - வசுதேவரும் தேவகியும்கூட எனக்கு இந்த மாதிரியாகத்தான் தோன்றுகிறார்கள் >>>கடந்த இரண்டு மாதமாகத் தினமும் பி ஆர் சோப்ராவின் மகாபாரதத்தை தினம் ஒரு எபிசோட் பார்த்து வருகிறேன். எனக்கும் இந்த கேள்விதான் தோன்றியது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!