``சௌம்யா! மெஹந்தி போடறதுக்கு நீ இன்னும் ஏற்பாடு பண்ணலை. முகூர்த்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை...''
``சொல்லிட்டேன்மா. அப்புறம் ஒரு விஷயம். நலங்கு அது இதுன்னு பண்ணறதுக்கு எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பாட்டி முதல்ல வந்து, .சாரட்டு வண்டிலே சனக மகாராசன் பிள்ளை போல வர்றான், நம்ப சரோஜாவுக்கு வங்கி, ஒட்டியாணம், புல்லாக்கு, நத்து, ஜிமிக்கி போட வர்றான், மீசைக்கார வீரன்' என்கிற மாதிரி எல்லா கலியாணத்திலேயும் நம்ப பாட்டி பாடுவாள். என் கலியாணத்தில் பாட வேண்டாம்னு சொல்லு. எங்க கம்ப்யூட்டர் கம்பெனியிலே இருந்து வர்றவங்க `சரியான நாட்டுப்புறம்’னு சொல்லிச் சிரிப்பாங்க'' என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, ``ஆயிரம் கல்யாணத்தில நலங்குப் பாட்டு பாடியிருக்கேன். என் பேத்திக்கு இஷ்டமில்லைன்னா பாடலை'' என்றாள்.
சௌம்யா-சுரேஷ் கலியாணம் தடபுடலாக நடந்தது. கலியாணம் ஆனவுடன் அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் வேலை கிடைத்து போய் விட்டார்கள்
இரண்டு வருஷம் கழித்து கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள பாட்டியை நியூஜெர்ஸிக்கு வரவழைத்துக் கொண்டாள் சௌம்யா.
பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு கலியாணத்திற்குப் பாட்டியை சௌம்யா. அழைத்துக் கொண்டு போனாள்
கலியாணத்தின் போது, ``யாராவது நலங்கு பாட்டுப் பாடுங்கோளேன்'' என்றார் புரோகிதர்.
சட்டென்று “.சாரட்டு வண்டிலே சனக மகாராசன்....”என்று பாட்டி பாட ஆரம்பிக்க, ஒரே கை தட்டல்! கேலியும் கிண்டலுமாக பல பாடல்கள். பாட்டிக்கு பலர் கை குலுக்கினார்கள். கரடிப் பிடியாக கட்டிப் பிடித்துப் பாராட்டினார்கள். ``சௌம்யா! யுவர் பாட்டி ஈஸ் கிரேட்! யூ ஆர் லக்கி!'' என்றார்கள்.
*
இரண்டு மாதம் கழித்து நலங்கு பாட்டியின் கலியாணப் பாடல்கள் சிடியை நியூஜெர்சி தமிழ் பண்பாட்டு மையம் வெளியிட்டது.
சௌம்யாவிற்கு பெருமை தலைகால் புரியவில்லை.