சிறிய துவக்க உரை
ஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.
அங்கு எனக்கு கிடைத்த ஒரு புத்தகம் PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,
சமீபத்தில் அவர் எழுதிய ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.
1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார் என்பதை ஒரு கட்டுரையில் விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்) தமிழில் தருகிறேன்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.
என்
குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து
வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர
ஆரம்பித்தது. பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம்
மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு
உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு
அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.

நானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்
என்
குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து
வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர
ஆரம்பித்தது. பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம்
மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு
உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு
அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.
வசதிமிக்க
என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி அதிகப் படுத்திக்
கொள்வதையும், தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று,
சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி
IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல, இப்படி வாங்கப்பட்டப்
பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும், தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி!