May 20, 2014

அஞ்சறைப் பெட்டி


படித்தது, பார்த்தது, ரசித்தது, 
                   சிரித்தது, கேட்டது, திரித்தது 
                           என்று சில குட்டித் துணுக்குகள்!

1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான  READER'S DIGEST  பத்திரிகையில் வெளியாகி உள்ளது!
சுட்டி: : GONE WITH THE WIND

2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும்.  ஜமைக்காவில் ஒரு பகுதியில்    பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்.  அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல்  திருடு போய்விட்டதாம்! (ஆதாரம்: TIME).

3. அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாநிலத்தின்   கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது  வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில்  சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).

4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.

**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு  ‘டாட்டா’  கொடுக்கத்  திட்டமாம்.

**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம்? (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட  60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்! (ஆதாரம்: டைம் இதழ்)

5. ஒபாமா சொன்னது
சில வாரங்களுக்கு முன்பு  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா   ஒரு  உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு  நிமிஷத்திற்கு  ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸோலார் பேனல்கள்  வீடுகளாக  மாறி வருகின்றன.
6.நோக்கியாவின் சேவை:
அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் நடந்த நிகழ்ச்சி.,
 எங்கள் செல்போனில் ஒரு செய்தியை தொலைபேசி நிறுவனம்:  AMBER ALERT  என்று தலைப்பிட்டு அவசரச் செய்தியாக அனுப்பியது.  செய்தியில்,  இரண்டு குழந்தைகளை  சில நிமிஷங்களுக்கு முன்பு  --------- என்ற   இடத்திலிலிருந்து கடத்திக் கொண்டு போய் விட்டார்கள் என்பதுடன்,  கார் மாடல், கலர், எண்  விவரங்களையும் தந்திருந்தது. காரைப் பார்த்தால் போலீசுக்குத் தகவல் சொல்லும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் நோக்கியா ஃபோன் வைத்திருக்கும் கோடிக்கணக்கான பேர்களுக்கும்  செய்தி அனுப்பிவிட்டது அந்த நிறுவனம்..
(கடத்தியவன் தன் மனவியைக் கொன்று விட்டு, தன் குழந்தைகளைக்  கடத்திக்  கொண்டு போய் விட்டான் என்பது பின்னால் தெரிந்தது.)
மறு நாள் அவன் பிடிபட்டான். எங்கு? எப்படி? சுமார் 12 மணி தூர கார் பயண தூரத்தில் உள்ள நார்த் கரோலினா மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில்,   டெலிபோனில் வந்த தகவலைப் பார்த்த ஒருவரின் கண்ணில் அந்தக் கார் பட்டது. அவர் போலீசுக்குத் தெரிவித்தார். அவன் பிடிபட்டான்!
இதுவல்லவோ உண்மையான டெலிபோன் சேவை!

7. சரவண பவன்:  
சென்ற வார நியூயார்க் டைம்ஸ் ஞாயிறு மலரில் அட்டகாசமான கலர் படங்களுடன், Masala Dosa to Die For என்ற தலைப்பில் சரவண பவன் பற்றிய
கட்டுரை வெளியாகி உள்ளது. சுட்டியைக் கொடுத்துஇருக்கிறேன்.    சரவண பவன்

 8. டிவிடி ஹால்
நியூயார்க்  பப்ளிக் லைப்ரரி என்னும்  நியூயார்க்  பொது நூலகம் 5-வது அவென்யூவில் இருக்கிறது. ஒரு சமயம் அங்கு போயிருந்தேன். அதில் மாடி மாடியாக ஏறி இறங்கிப் புத்தகங்களைப் பார்த்தேன். கீழ்த்தளத்தில் உள்ள
கலியாண மண்டபம் அளவு பெரிய ஹாலில்   ஷெல்ஃப்களில்  எல்லாம் டிவிடிகள் ஆயிரக்கணக்கில்  இருந்தன! 
திரைப்படங்களுக்கும் பஞ்சமே இல்லை.போதாதற்கு கம்ப்யூட்டர்களும் நிறைய இருந்தன!

9.THE LYONS DEN
Leonard Lyons  என்ற பத்திரிகை நிருபர் நியூயார்க்  போஸ்ட் செய்திப் பத்திரிகையில் 1934 முதல் 1974 வரை தொடர்ந்து எழுதி வந்தார். அவரது கட்டுரைகள் மிகவும் சுவாரசியமானவை.

 LYONS DEN என்ற தலைப்பில் பிரசுரமான அவரது கட்டுரைகள் ஆயிரம் வார்த்தைகள்தான் இருக்குமாம். கிட்டதட்ட 100 பத்திரிகைகளில் சிண்டிகேட் செய்யப்பட்ட கட்டுரைகள்.
” அப்பா சொன்ன கதைகள்” என்ற தலைப்பில் ஒரு தடிமனான புத்தகத்தை அவரது மகன் எழுதி இருக்கிறார். அது எனக்குக் கிடைத்தது.
அப்பப்பா, பிக்காஸோ, பெர்னார்ட் ஷா, சாமர்செட் மாம், மெரிலின் மன்றோ, ஐன்ஸ்டீன், எட்வர்ட் VIII போன்ற  பல பிரபலங்களைப் பற்றி எத்தனை
எத்தனை சுவையான  தகவல்கள்! (பின்னால் பதிவுகளில் போடுகிறேன்.)
Leonard Lyons  எத்தனை கட்டுரைகள் எழுதி இருக்கிRAர் தெரியுமா? 12,749!

(புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பது LYONS, மெரிலின் மன்றோ மற்றும்
LYONS-ன் மனைவி.)

10. சில அனகிராம்கள் 
இடது பக்கம் இருக்கும் பதம்(களில்) இருக்கும் எழுத்துகளை மாற்றி  அமைத்து உருவாக்கப்பட்டவை வலது பக்க வார்த்தை(கள்).

A TELEPHONE GIRL - REPEATING HELLO
A DIET - I'D EAT
CERTAINLY NOT = CAN'T RELY ON IT 
RATS AND MICE = IN CAT'S DREAM
THE EYES = THEY SEE
POSTMASTER = STAMP STORE
DEBIT CARD =BAD CREDIT
I POD LOVER =POOR DEVIL
GOD SAVE US ALL = SALVAGED SOUL
ANTIDEMOCRATIC = DICTATOR CAME IN
ORATORS HATE = A SORE THROAT
HOT WATER = WORTH TEA

எதிர்ப் பதங்கள்
EARLIEST = RISE LATE
PERSECUTED = DUE RESPECT
HONESTLY = ON THE SLY
MISFORTUNE = IT'S MORE FUN
NOMINATE = I NAME NOT
DIPLOMACY = MAD POLICY
 
Anagaram Maker   என்ற இலவச மென்பொருள் மூலம் நிறைய கண்டுபிடிக்கலாம்.

11. இந்தாங்க 5 டாலர்
ஒரு நாள் ஈஸ்ட் ஹனோவர் என்ற பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்குப் போயிருந்தோம். அங்கு புதிதாக  BAJA FRESH (  பாஹா ஃப்ரெஷ் என்று உச்சரிக்க  வேண்டுமாம்!) ரெஸ்டாரண்ட்  திறந்திருப்பதைப் பார்த்தோம்.
 
  என்னதான் FRESH என்று பார்க்கலாம் என்று என்  பேத்தி  சொன்னாள். போனோம். ஆர்டர் வாங்கும் கவுண்டரில் கியூ இருந்தது. அன்று தான் அந்த உணவு விடுதி திறந்திருந்தார்கள் என்று தெரிந்தது. பலருக்கு ஈ-மெயிலில் தகவல் அனுப்பி இருந்தார்கள் என்றும் அத்துடன் ஒரு 5 டாலர் தள்ளுபடி கூப்பனை இணைத்திருந்தார்கள் என்றும் சொன்னார்கள்.  நாங்கள் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இல்லை என்பதாலோ என்னவோ எங்களுக்கு எதுவும் வரவில்லை.
அப்போது கியூவில் எங்களுக்கு முன்னே நின்றுகொண்டிருந்தவர். “ ”இந்தாருங்கள் டிஸ்கவுண்ட் கூப்பன். எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கூப்பன் அச்சடித்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்லிக் கொடுத்தார்.

இலவச கூப்பன் கிடைத்ததால்,  ‘பாஹா’ மெக்ஸிகன்  உணவு ‘ஆஹா’ என்று இருந்தது!

4 comments:

 1. அஞ்சறைப் பெட்டி செய்திகள் அனைத்துமே ரசிக்க முடிந்தது...

  ReplyDelete
 2. பதினொன்றறைப் பெட்டியில் எல்லா அறைகளும் அபாரமான வஸ்துக்கள்! ஂமிகுந்த சுவை!' அண்ணாச்சி பற்றி ஒன்றும் மறைக்காமல் எழுதிய பேட்டியாளர் தைரியமிக்கவர்தான்! -ஜெ.

  ReplyDelete
 3. இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்திருந்து அல்லது சேகரித்து தருவதற்கு மிக்க நன்றி ...

  ReplyDelete
 4. எல்லாம் interesting செய்தித்துணுக்குகள்.
  1. அமெரிக்காவின் நோக்கியா சேவையையும் மக்களின் பொறுப்புணர்வையும் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடியும்.
  2. சரவண பவன்.. சுவை எப்போதும் நன்றாக இருக்கும். நான் 1986லிருந்து சரவணபவனில் சாப்பிடுகிறேன். எந்தஊர் சென்றாலும் சரவண பவன் இருந்தால் taste பார்த்துவிடுவேன்.
  3. மெக்சிகன் உணவகத்தில் சைவமாக என்ன என்ன சாப்பிடலாம்?

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!