Mr.GIMPEL
இவர் ஒரு மென்பொருள் நிபுணர். இவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு தருகிறேன்.
* * *
என்னைப் பார்த்து யாரும் "நீ ஓரு பைத்தியம்' என்று சொல்ல முடியாது. நான் பைத்தியம்தான். ஆனால் 'ஒரு பைத்தியம்' அல்ல! பலவித விஷயங்களில் எனக்கு, -- நாகரிகமாகச் சொன்னால் --ஆர்வம் உண்டு. சாதாரண நடைமுறையில் 'பைத்தியம்' என்றும் கூறலாம். அப்படிப்பட்ட பல விஷயங்களில் ஒன்று : முப்பரிமாணப் படங்கள் எனும் 3-டி படங்கள்!
1995-வாக்கில் "விகடனி'ல் ஸ்டீரியோகிராம் என்ற வகை 3-D படங்களைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தார்கள். கம்ப்யூட்டர் மென்பொருளை உபயோகித்து, நிறைய திறமையை
உபயோகித்து அத்தகைய படங்களை உருவாக்க பயிற்சியும் நேரமும் தேவை.
அந்த
மாதிரிப் படங்களை 3-D யாகப்
பார்க்க ஒருவிதமாக
Cross Eyed (?) முறையில் பார்க்கப் பழகிக் கொள்ள
வேண்டும்.
இப்படிப் பார்க்கும் வித்தை ஒரு
நிமிஷத்திலும் வந்துவிடக்கூடும் அல்லது பல மாதங்கள் முயற்சித்தாலும் வராமலும் இருக்கும்!
அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வித்தை எளிதில் வந்துவிட்டது. அதனால் ஸ்டீரியோகிராம் படங்களை இரவு பகலாகக் கம்ப்யூட்டரில் உருவாக்க ஆரம்பித்தேன். திமிங்கிலம், ஆடு, மாடு, கரடி, பறவை, கட்டடங்கள், படகு, மரங்கள், மலர்கள், பாம்பு என்று துவங்கி, பிள்ளையார், நடனமங்கை, ஓட்டப்பந்தய வீரர், படகோட்டி, நடராஜர், தட்சிணாமூர்த்தி என்று முன்னேறினேன்.
ஸ்டீரியோகிராமிற்கு அடுத்த கட்டம் ANAGLYPH
3-D படங்கள் வந்தன. இந்தப் படங்களைப் பார்க்க கலர் கண்ணாடி தேவைப்படும். கண்ணாடி போட்டுப் பார்த்தால் 3-D படம் சூப்பராகத்
தெரியும்.
நம்ப
மாட்டீர்கள்,
டஜன்
கணக்கில் இந்த
டைப்
படங்களைப் போட்டுப் பழகினேன்.
ஒரு மாதிரி 3-D பித்து ஓய்ந்து விட்டது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வகை
3-D
படங்கள் வர
ஆரம்பித்தன.
ஒரே படத்தில் இரண்டு உருவங்கள். உதாரணமாக படத்தை ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் பிள்ளையார் தெரிவார்; வேறு ஒரு கோணத் திலிருந்து பார்த்தால் முருகப் பெருமான் தெரிவார். இந்தப் படங்கள LENTICULAR என்பார்கள். இப்படி பல ஜோடிப் படங்களை உருவாக்கி, அச்சடித்து சைனா பஜாரில் விற்கிறார்கள். உங்களில் பலர்
இந்தப் படங்களை வாங்கி யிருப்பீர்கள்.
இப்படிப்பட்ட "2-in-1' 3-D படங்களை உருவாக்குவதற்கு நிறைய பயிற்சி தேவை; தேர்ச்சி தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குரிய கம்ப்யூட்டர் மென் பொருள்கள் தேவை! இன்டர்நெட்டில் பல இலவச மென்பொருள்கள் இருந்தன. அவை யாவும் முதல், இரண்டு, மூன்றாம் ஸ்டெப் வரை செல்ல உதவும். அதற்கு அடுத்து மேலே போனால்தான், படம் முழுமையடையும். அந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்காது என்பதுடன் விலையும் சற்று அதிகம்! சும்மா விளையாடிப் பார்ப்பதற்கு, செலவு செய்ய மனம் வரவில்லை.