கௌரவம்
அளிக்கப்பட வேண்டிய முறை இதுதான்!
பம்பாய் பல்கலைக்கழகத்தில் 2015’ம் வருஷம் ’சமஸ்கிருத தினம்’ என்று ஒரு நாள்
கொண்டாடினார்கள். விழாவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிறைய பணிகள் புரிந்து வரும் டாக்டர் கௌரி
என்ற ஒரு சமஸ்கிருத அறிஞர் கௌரவிக்கப்பட
இருந்தார்.
அவருக்குக் கௌரவம்
அளிக்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர
ஃபட்னாவிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.
விழா மேடையில் டாக்டர் கௌரி, விழா நிர்வாகிகள்,
மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் அனைவரும்
அமர்ந்திருந்தார்கள். முதல்வருக்காக காத்திருந்தார்கள். குறித்த
நேரத்திற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வந்தார்.
மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் அனைவரும்
அமர்ந்திருந்தார்கள். முதல்வருக்காக காத்திருந்தார்கள். குறித்த
நேரத்திற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வந்தார்.
ஃபட்னாவிஸின் பணிவையும், காலைத் தொட்டு நமஸ்கரித்ததையும்
பார்த்து அனைவரும் அப்படியே வியப்பில் உறைந்து போனார்கள்.
தற்போது டாக்டர் கௌரி கேரளாவிலுள்ள சின்மயானந்தா
பல்கலைக் கழகத்தில் டீன் பதவியில் உள்ளார்.
பல்கலைக் கழகத்தில் டீன் பதவியில் உள்ளார்.
(இத்தகவலைத் தந்தவர்: குறிப்பிட்ட விழாவிற்குச் சென்றிருந்த திருமதி வீணா அமோலிக் அவர்கள். அவருக்கு என் நன்றி.)
இன்னொரு வியப்புத் தகவல்.
பலே விற்பனை
சமீபத்தில் Lillian Eichler Watson என்ற எழுத்தாளர் 70 வருஷத்திற்கு முன்பு தொகுத்த ஒரு புத்தகம் லாட்டிரி பரிசு மாதிரி எனக்குக் கிடைத்தது. எல்லா கட்டுரைகளும் அபாரமான கட்டுரைகள் மட்டுமல்ல, நெகிழ்ச்சியூட்டும் கட்டுரைகள். அதில் படித்த ஒரு கட்டுரைக்கு, தமிழ் உடையான வேட்டியைக் கட்டி, அடுத்த பதிவாக விரைவில் போடுகிறேன். சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு மூன்று பாகங்களாகப் போட வேண்டியிருக்கும் எனக் கருதுகிறேன்.
லில்லியன் 1922 -ல் A BOOK OF ETIQUETTE (ஒழுங்கு நடைமுறைகள் (?)) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது இரண்டு வருஷத்தில் இருபது லட்சம் காபிகள் விற்றன. லாபம் மட்டும் இரண்டரை லட்சம் டாலராம் (இன்றைய கணக்கில் 30 லட்சம் டாலர் இருக்கும்!)
JEOPARDY கேள்விகள்
அமெரிக்க டி.வி.யில் முப்பத்தைந்து வருஷமாக நடந்து வரும் வினாடி வினா நிகழ்ச்சியான JEOPARDY-யில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாம்.
மின்னல் வேகம்
பிரபல ஜெர்மன் கார் நிறுவனம்: BUGATTI (புகாட்டி). கார் பந்தயத்திற்கு உகந்த காரை அவர்கள் தயாரித்து வெள்ளோட்டம் விட்டார்கள். மணிக்கு 304 மைல் வேகத்தில் பறந்ததாம்.
மின்னல் வேகம்
பிரபல ஜெர்மன் கார் நிறுவனம்: BUGATTI (புகாட்டி). கார் பந்தயத்திற்கு உகந்த காரை அவர்கள் தயாரித்து வெள்ளோட்டம் விட்டார்கள். மணிக்கு 304 மைல் வேகத்தில் பறந்ததாம்.
ஹாஹா, செத்துப்போன மொழினு சொல்லும் சம்ஸ்கிருதம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதை அதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இந்தச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார்கள்? நினைச்சுப் பார்த்துச் சிரித்தேன். நல்லதொரு தகவல். மற்றச் செய்திகளும் ஆச்சரியம் அளிப்பவை. கார் வேகம் பிரமிக்க வைக்கிறது. புத்தக விற்பனை இந்திய எழுத்தாளர்களுக்குக் கொஞ்சம் மனதை வருத்தும் தகவல். இங்கெல்லாம் அப்படி விற்பனைஆவதில்லையே!
ReplyDeleteஅனைத்தும் ரசிக்க வைத்தன. பெரியோர்களின் காலில் பொது இடங்களில் தொட்டு வணங்கி மரியாதை செய்யும் பண்பு வடநாட்டில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.
ReplyDelete22களில் 2 1/2 லட்சம் டாலர் சம்பாதித்தாரா? தமிழ்நாட்டில் நாவல் எழுதி ஓரளவு சம்பாதித்தவர்கள் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ராஜேஷ்குமார்...... என்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தாம்