காஸ்ட்ரோவின் சாதனை!
நீண்ட பேச்சுத் திறத்திற்கு
ஃபிடல் காஸ்ட்ரோவை யாரும் மிஞ்சவில்லை. கின்னஸ் புத்தகத்தில் மிக நீண்ட உரை நிகழ்த்தியவர் என்று காஸ்ட்ரோவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.
1986-இல் ஹவானாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் 7 மணி 10 நிமிஷம் நேரம் பேசினாராம்!
பல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். புது டில்லி விக்யான் பவனில் ஏதோ ஒரு உலக மகாநாடு. பல நாடுகளி-ருந்து பிரதமர்கள் வந்திருந்தனர். கியூபாவிலிருந்து காஸ்ட்ரோ வந்திருந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரை கைகுலுக்கி வரவேற்றார். காஸ்ட்ரோ என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியைக் கரடிப்பிடியாகப் பிடித்து கட்டிக் கொண்டார். இந்திரா காந்தியினால் கழண்டு வர முடியவில்லை.
நெளிந்து பார்த்தார். முடியவில்லை.
ஹாரி பாட்டர் கதைகள் எழுதி, இங்கிலாந்து ராணியை விட பணக்காரியாக ஆகிவிட்ட J.K.Rowling உபயோகித்த நாற்காலியை ஏலம் விட்டார்களாம்.
என்ன விலைக்குப் போயிற்று தெரியுமா?
மூன்று லட்சத்து தொண்ணூற்று நாலு ஆயிரம் டாலர்களுக்கு! அது என்ன மந்திரசக்தி வாய்ந்த நாற்காலியா?
கால் காசு
1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்
டாலர் நாணயம் e-bay-இல் விலைக்கு வந்தது. அதை முப்பத்து ஐந்தாயிரம் டாலரைக் கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்கிறார்! (ஒரு காசு பெறாத கால் காசுக்கு இவ்வளவு விலையா?).
டாலர் நாணயம் e-bay-இல் விலைக்கு வந்தது. அதை முப்பத்து ஐந்தாயிரம் டாலரைக் கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்கிறார்! (ஒரு காசு பெறாத கால் காசுக்கு இவ்வளவு விலையா?).
மூடிகள், கோடிக்கணக்கில்...
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் "பியர்' பிரியர்... இல்லை...
இல்லை...
"பியர்' மூடிகள் பிரியராம். அவர் புட்டி மூடிகளைச் சேர்க்க முனைந்து இதுவரை சேர்த்துள்ள மூடிகளின் எண்ணிக்கை நூறு கோடியாம்.
ஹிட்லரின் புத்தகம்...
ஹிட்லரின் சுயசரிதை MEIN KAMF. அவர் தான் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதியைத் தன்னிடம் வைத்திருந்தார். சமீபத்தில் அந்தப் புத்தகம் ஏலம் விடப்பட்டது.
இருபதாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஐந்து டாலருக்கு ($20,655) ஏலம் போயிற்றாம்!
சுட்டெரித்தது...
கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி குவைத் நாடு ஒரு உலக ரிகார்டைத் தொட்டது. அந்த
நாட்டில் வெய்யில் உலைக்களமாக அனல் கக்கியது
எத்தனை டிகிரி தெரியுமா? 129.2 டிகிரி பாரன்ஹீட்!
எத்தனை டிகிரி தெரியுமா? 129.2 டிகிரி பாரன்ஹீட்!
உயரப்
பறந்து
உயர்ந்தவர்
அமெரிக்க இரட்டை சகோதரர்கள் ஸ்காட் கெல்லியும் மார்க் கெல்லியும் NASA-வின் விண்வெளி வீரர்கள். ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஒரு வருடம் விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பினார்.
அவர் விண்வெளியில் இருந்த சமயத்தில் அவருடைய சகோதரர் மார்க் கெல்லியை, விண்வெளியிலிருக்கும் ஸ்காட் உண்பது, உறங்குவது போன்றே இருக்கு
மாறு செய்தார்கள்.
ஸ்காட் கெல்லி விண்ணிலிருந்து திரும்பிய பிறகு - அதாவது 5440 தடவை உலகைச் சுற்றி வந்துவிட்ட பிறகு, அவரது உயரத்தையும் மார்க் கெல்லியின் உயரத்தையும் அளந்தார்கள். ஒரு வருட காலத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இருந்ததாலோ என்னவோ, மார்க் கெல்லியை விட இரண்டு அங்குலம் அதிகமாக ஸ்காட் கெல்லி வளர்ந்திருந்தார்.
விண்வெளியில் ஒரு வருஷம் பயணம் செய்த ஸ்காட் கெல்லி எத்தனை சூரிய உதயங்களைப் பார்த்தார் தெரியுமா? பத்தாயிரத்து எண்ணூற்று எண்பது (10,800)!
தள்ளுமுள்ளுதான்....
ஒரே தள்ளுமுள்ளு! எதற்கு? "விண்வெளி வீரர்கள் தேவை' என்று NASA செய்த விளம்பரத்திற்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் தெரியுமா? பதினெட்டாயிரத்து முன்னூறு பேர்.
நீண்ட சுருட்டு!
கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு2016 ஆகஸ்ட் 13-ஆம் தேதி 90வது வயது பிறந்த நாளை ஒரு சுருட்டுக் கம்பெனி வித்தியாசமாகக் கொண்டாடி யது.
அவருக்காக ஒரு சிறப்பு சுருட்டைத் தயார் செய்தார்களாம். உலகிலேயே நீளமான சுருட்டு அது. நீளம்
: 295 அடி.
(குறிப்பு: காஸ்ட்ரோ சுருட்டு பிடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்).
நீண்ட ஆயுள்...
கிரீன்லாண்டில்,
வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள ஷார்க் மீன்கள் கிட்டத்தட்ட 400 வருடங்கள் வாழ்கின்றனவாம். உலகிலேயே நீண்ட ஆயுளைக் கொண்ட உயிரினங்களாம்!