April 27, 2017

துணுக்குத் தோரணம்

 TIME வீடு  மாறிய போது...

சமீபத்தில்  பிரபல "டைம்' வார  இதழ் தனது அலுவலகத்தைக்  காலி செய்துவிட்டு, நியூயார்க்கிலேயே வேறு ஒரு கட்டடத்திற்கு இடம் பெயர்ந்தது. 
எத்தனையோ வருஷங்களாகக் குடி இருந்த பழைய கட்டடத்தைக் காலிசெய்யும்போதுபத்திரிகையின் பழைய ஆவணங்களையும் புகைப்படங்களையும் நியூயார்க்  Historical Society -க்குக் கொடுத்துவிட்டது. ஆவணங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 70 லட்சம்! பழைய கட்டடத்தின்  ஓரம்  ஒரு தூண் அருகில் TIME CAPSULE பல வருடங்களுக்கு முன்பு புதைத்து வைத்திருந்தார்கள். அதை  அப்படியே  விட்டு விட்டார்களாம்.  1959இல் டைம் இதழின் ஆசிரியரால்  நிராகரிக்கப்பட்ட கட்டுரைகளை  சிவப்பு பென்சிலால் "X' போடுவாராம். அந்தப் பென்சிலைக்கூட அந்த TIME CAPSULE-இல் வைத்திருக்கிறார்களாம்!

ஆக்ஸ்போர்ட் அகராதி.  
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி2015-ம் வருடத்தின்  புதிய  ஆங்கில வார்த்தையாகக்  
குறிப்பிட்டு இருப்பது: மோஜி ஈமோஜி. கம்ப்யூட்டர் "ஸ்மைலி போன்றது  அகராதியில்  சேர்க்கப்பட்டு ள்ளதாம்.  இந்த  ஈமோஜி அனைத்து உலக மொழிகளையெல்லாம் கடந்தது  என்று குப்பிட்டு  இருக்கிறார்கள்.
அகாதா    கிறிஸ்டி
அகாதா  கிறிஸ்டி  எழுதியுள்ள  துப்பறியும்  நாவல்கள்  95.  உலகில் 105 மொழிகளில்  இவரது  புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.  

April 15, 2017

ஒரு வரியில் நெகிழ்த்தி விட்டார்...

 Mr.GIMPEL
 இவர் ஒரு மென்பொருள் நிபுணர். இவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை  இங்கு தருகிறேன்.
         *                               *                          *
என்னைப் பார்த்து யாரும் "நீ ஓரு பைத்தியம்' என்று சொல்ல முடியாது. நான் பைத்தியம்தான். ஆனால் 'ஒரு பைத்தியம்' அல்ல! பலவித விஷயங்களில் எனக்கு, -- நாகரிகமாகச் சொன்னால் --ஆர்வம் உண்டு. சாதாரண நடைமுறையில் 'பைத்தியம்' என்றும் கூறலாம். அப்படிப்பட்ட பல விஷயங்களில் ஒன்று : முப்பரிமாணப் படங்கள்  எனும் 3-டி படங்கள்!
1995-வாக்கில் "விகடனி'ல் ஸ்டீரியோகிராம் என்ற வகை 3-D படங்களைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தார்கள். கம்ப்யூட்டர் மென்பொருளை உபயோகித்து, நிறைய திறமையை  உபயோகித்து அத்தகைய படங்களை உருவாக்க பயிற்சியும் நேரமும் தேவை. அந்த மாதிரிப் படங்களை  3-D யாகப்  பார்க்க ஒருவிதமாக Cross Eyed (?) முறையில் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். இப்படிப் பார்க்கும் வித்தை ஒரு நிமிஷத்திலும்  வந்துவிடக்கூடும் அல்லது பல மாதங்கள் முயற்சித்தாலும் வராமலும் இருக்கும்!
அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வித்தை எளிதில் வந்துவிட்டது. அதனால் ஸ்டீரியோகிராம் படங்களை இரவு பகலாகக் கம்ப்யூட்டரில் உருவாக்க ஆரம்பித்தேன். திமிங்கிலம், ஆடு, மாடு, கரடி, பறவை, கட்டடங்கள், படகு, மரங்கள், மலர்கள், பாம்பு என்று துவங்கி, பிள்ளையார், நடனமங்கை, ஓட்டப்பந்தய வீரர், படகோட்டி, நடராஜர், தட்சிணாமூர்த்தி என்று முன்னேறினேன்.
ஸ்டீரியோகிராமிற்கு அடுத்த கட்டம் ANAGLYPH 3-D படங்கள் வந்தன. இந்தப் படங்களைப் பார்க்க கலர் கண்ணாடி தேவைப்படும். கண்ணாடி போட்டுப் பார்த்தால் 3-D படம் சூப்பராகத்  தெரியும். நம்ப மாட்டீர்கள், டஜன் கணக்கில் இந்த டைப் படங்களைப் போட்டுப் பழகினேன்.
            ஒரு மாதிரி 3-D பித்து ஓய்ந்து விட்டது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வகை  3-D படங்கள் வர ஆரம்பித்தன.

ஒரே படத்தில் இரண்டு உருவங்கள். உதாரணமாக படத்தை ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் பிள்ளையார் தெரிவார்; வேறு ஒரு கோணத் திலிருந்து பார்த்தால் முருகப் பெருமான் தெரிவார். இந்தப் படங்கள   LENTICULAR  என்பார்கள்.       இப்படி பல ஜோடிப் படங்களை உருவாக்கி, அச்சடித்து சைனா பஜாரில் விற்கிறார்கள். உங்களில் பலர்  இந்தப் படங்களை வாங்கி யிருப்பீர்கள்
இப்படிப்பட்ட "2-in-1'   3-D படங்களை உருவாக்குவதற்கு நிறைய பயிற்சி தேவை; தேர்ச்சி தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குரிய கம்ப்யூட்டர் மென் பொருள்கள்  தேவை!  இன்டர்நெட்டில் பல இலவச மென்பொருள்கள் இருந்தன. அவை யாவும் முதல், இரண்டு, மூன்றாம் ஸ்டெப் வரை செல்ல உதவும். அதற்கு அடுத்து மேலே போனால்தான், படம் முழுமையடையும். அந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்காது என்பதுடன் விலையும் சற்று அதிகம்! சும்மா விளையாடிப் பார்ப்பதற்கு, செலவு செய்ய மனம் வரவில்லை

April 06, 2017

மிஸ்டர் பஞ்சு: எலக் ஷனுக்கு நில்லுங்க!

சார் நாங்கள் எல்லாருமாக "டிஸைட்பண்ணி விட்டோம்... இருபது வருஷமாக நம்ப ஊரில் முக்கியப் புள்ளியாக இருந்து வர்றீங்க... நீங்கள் தான் நம் வார்டுக்கு முனிசிபல் கவுன்சில் எலெக் ஷனுக்கு நிற்கணும்'' என்று மணி சொன்னான்மிஸ்டர் பஞ்சுவிடம்.

ஆமாம் சார்இது எங்களுடைய ஏகமனதான விருப்பம்'' என்று கோபுஸ்ரீரங்கன்சிட்டி முதலியவர்கள்  பின்பாட்டு ஊதினார்கள்.
ஏனய்யா காலை வாரி விட வேறே ஆள் கிடைக்கலையாபோங்கய்யாஅவங்க அவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு'' என்றார் பஞ்சு
பஞ்சுவின் இல்லத்தில் வராந்தாவில் குழுமியிருந்த ஜமா, ’ஜக்கு’'கிற  வழியாக இல்லை!
"சீரியஸாகப் பேசுகிறோம்லைட்டாகத் தூக்கிப் போட்டு விடுகிறீங்களேஇன்டிபென்டன்டாக எலெக்ஷனுக்கு நில்லுங்கநாங்க எல்லாரும் உயிரை விட்டு வேலை செய்கிறோம்
"உயிரைத் தவிர உங்களிடம் என்ன இருக்கிறது'என்று ’ஜோக்'  அடிக்காதீர்க'' என்றான் கோபு.
தேர்தலில் நிற்கிறது என்பது என்ன சாதாரண காரியமாஎன்னஎவ்வளவோ கன்சிடரேஷன்ஸ் இருக்கிறதுமுதலாவது மணி-'' என்று பஞ்சு கூற...
இதோ இருக்கிறேன் ஸார், மணி!'' என்று மணி சொன்னான்.
நீ செல்லாக் காசுநான் சொன்னது மணி... பணம்எக்கச்சக்கமாகச் செலவு ஆகுமே!'' என்றார் பஞ்சு.
ஆக்சுவலி.. இதில் செலவு என்று பார்த்தால் இரண்டாயிரத்துக்கு மேலே போகாது'' என்றான் ஸ்ரீரங்கன்.
இரண்டாயிரம் பைசாவுக்கு வழி கிடையாதே!'' என்றார் பஞ்சு.
உங்களுக்கு எதுக்கு சார் கவலைஒரு உதவி நிதி சேர்த்துவிட மாட்டோமா?'' என்று கேட்டான் கோபு.
பஞ்ச நிதி ஆயிற்றுஇப்போது பஞ்சு நிதி'' என்று கேலியாகக்  கூறினான் ராமு.
பஞ்சு சார்நேற்று சங்கத்திலே கூட ரொம்ப நேரம் "அனலைஸ்செய்தோம்ஜனங்களுக்கு இப்போது "சிட்டிங் மெம்பர்சுந்தரம் பேரில் ஏகப்பட்ட வெறுப்பு'' என்றான் சீனன்.
சிட்டிங் மெம்பர் இல்லை சார்அவர் சீட்டிங் மெம்பர்'' என்றான் சிட்டி.
செகண்ட்லி நம்ப வார்டுக்கு எந்தக் கட்சியும் கேண்டிடேட்ஸ் போடவில்லைநிற்கப் போகிற எல்லாரும் சுயேச்சைதான்ஒரு சில கட்சிகள் சிலருக்கு ஆதரவு தருகின்றனஅதனால் நீங்களும்  சுயேச்சையாக நில்லுங்கநெல்லு மிஷின் நீலமேகம் 101 ரூபாய் டொனேஷன் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்'' என்று சொன்னான் வெங்கு.