January 18, 2017

காப்பி அடித்து.........

காப்பி அடித்து வகையாக மாட்டிக் கொண்டது
 காப்பி அடிப்பது ஒரு கலை. கதையோ, கட்டுரையோ, இசையோ, திரைப்படக் கதையோ, காட்சியோ எதுவாக இருந்தாலும் காப்பி அடிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். இதைவிட அதிகத் திறமை, எங்கிருந்து காப்பி அடிமத்தது என்பது தெரியாமலிருக்கும்படி மறைக்க வேண்டும். ஒரு பிரபல பொன்மொழி ஒன்று உண்டு. Originality consists in concealing the original!
சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். ஒரு ஆன்மீகப் புத்தகத்தை ஒரு நிறுவனம் வெளியிட்டது. புத்தகத்திற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதைப் பார்த்த மற்றொரு பதிப்பகம், அந்த புத்தகத்தைத் தானும் வெளியிட்டது. அந்தப் புத்தகமும் நன்கு விற்கவே, முதலில பிரசுரித்த நிறுவனத்தின் புத்தக விற்பனை சற்றுச் சரிந்தது.
முதல் நிறுவனம், இரண்டாவது நிறுவனம் பிரசுரித்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தது. அதற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தங்களது புத்தகத்தை அப்படியே காப்பி அடித்துப் போட்டிருந்ததைக் கண்டுபிடித்தது. காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தது இரண்டாவது நிறுவனத்தின் மீது. இது பழைய சுலோக புத்தகம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சுலோகங்கள். இதன் காப்பிரைட் உரிமையை யாரும் கோர முடியாது என்று சொன்னது. வழக்கு தள்ளுபடி ஆனது (என்பது எனக்கு ஞாபகம்).

முதல் நிறுவனம் இரண்டு பதிப்புகளையும் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டு சோதித்துப் பார்த்தது. அப்போது திடீரென்று ஒரு விஷயம் புலப்பட்டது. முதல் புத்தகத்தில் வந்திருந்த சுலோகங்களில் என்ன எழுத்துப் பிழை இருந்ததோ அதே பிழை அதே சுலோகத்தில் இரண்டாவது பதிப்பகத்தின் புத்தகத்திலும் இருந்தது. அதன் பிறகு இரண்டாவது பதிப்பகத்தால் ஏதும் கூற முடியவில்லை. (பல வருடங்கள் கடந்து விட்டதால் விவரங்கள் பல மறந்து போய் விட்டன.)
இந்தத் தகவலை இப்போது எழுதத் தூண்டியது பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த ஒரு சம்பவம். இரண்டு செய்திப் பத்திரிகைகள் சம்பந்தப்பட்டது.
மெல்வில் ஸ்டோன் என்னும் சிகாகோ டெய்லி நியூஸ் பத்திரிகையின் உரிமையாளர் தனது வாழ்க்கை வரலாறில் குறிப்பிட்டிருக்கும் இந்தச் சம்பவம், பலர் எடுத்து எழுதியிருக்கிறார்கள்.
இது 1890 வாக்கில் நடந்த சம்பவம். டெய்லி நியூஸில் வரும் செய்திகளை அலாக்காக தடுத்து சிகாகோ போஸ்ட் அண்ட் மெயில போட்டு வருவதாக மெல்விலுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. காப்பி அடிக்கிறார்கள் என்பதை எப்படி நிரூபிப்பது என்று மெல்விலுக்குத் தெரியவில்லை. பலநாள் மண்டையைக் குடைந்து ஒரு கில்லாடி வேலை செய்தார்.
அப்போது செர்பியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. அதைச் செய்தியாகப் போடும் போது ஒரு லேசான தில்லுமுல்லு வேலை செய்தார்
செர்பியாவின் மேயர்கூறியதாக (செர்பிய மொழி என்று தோன்றும்படி) ஒரு வாக்கியத்தைச் சேர்த்தார். அந்த உடான்ஸ் வாக்கியம் இதுதான் : 'Er us siht la Ets II iws nel lumcmeht' காலையில் NEWS பத்திரிகையில் வந்த இந்த முழு ரிப்போர்ட்டையும் அப்படியே போஸ்ட் இதழ் தனது மாலைப் பதிப்பில் ஈயடிச்சான் காப்பி அடித்துப் போட்டு விட்டது. ஆஹா, தான் வைத்த கூண்டில் எலி அகப்பட்டுக் கொண்டது என்று மெல்விலுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர் வைத்த பொறி என்ன? அந்த செர்பிய(?) மொழி வாக்கியத்தைப் பின்னாலிருந்து படியுங்கள். மேயர் சொன்னதாக வந்த வாக்கியம் கப்ஸா. பின்னாலிருந்து படிக்கும் போது : 'The Mc Mullens will steal this sure' என்று வரும். மெல்வில் இதை எல்லா பத்திரிகைகளுக்கும் தெரிவித்தார்.
போஸ்ட் பத்திரிகைக்கு இது சரியான சம்மட்டி அடி. இந்த அடியில் நொறுங்கிப் போன போஸ்ட் மீளவே இல்லை. இரண்டு வருஷம் கழித்து போஸ்ட் பத்திரிகையை மெல்வில் வாங்கி விட்டார்.
காப்பி அடிப்பது இன்று நேற்று வந்ததல்ல; காலம் காலமாக வருவதுதான்.
பதிலுக்கு பதில்
இரண்டு தினசரி இதழ்களுக்குள் போட்டி இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். பல சமயம் இரண்டும் கோதாவில் இறங்கி விடுவதும் உண்டு. பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் Fun Fareல் கிடைத்த ஒரு துணுக்கு :
நியூயார்க்கில் SUN என்ற தினசரியும் POST என்ற தினசரியும் கௌரவமான செய்தித் தாள்கள் எனப் பெயர் பெற்றவை. ஒரு நாள் அவர்களுக்குள் புதைந்து கிடந்த போட்டி உணர்வு காரண்மாக ஏதோ ஒரு விவகாரத்தில்சன்பத்திரிகையைபோஸ்ட்பத்திரிகை தாக்கி தலையங்கம் எழுதியது. அதில்சன்பத்திரிகையைமஞ்சள் நாய்என்று குறிப்பிட்டிருந்தது. (மஞ்சள் நாய் என்பதுசொறி நாய்மாதிரியான வார்த்தையாக இருக்க வேண்டும்.)
சன்இதழ் பதிலுக்குக் கொடுத்த சூடான பதில் : ‘போஸ்ட்இதழ்சன்பத்திரியையைமஞ்சள் நாய்என்று சொல்கிறது. ‘சன்இதழைப் பொறுத்தவரை போஸ்ட் பத்திரிகையை எந்த ஒரு நாயும் எந்த ஒரு போஸ்டையும் அணுகும் முறையையேசன்கடைப்பிடிக்கும்.
காப்பி அல்ல; இரண்டும் சொந்த கற்பனைதான்!
கிட்டத்தட்ட ஒரே கருத்துள்ள கவிதையை இரண்டு பேர் எழுதியுள்ளனர். இரண்டு பேரும் பிரபலமான எழுத்தாளர்கள். விவரங்களைத் தருகிறேன். இது நடந்தது 1925 வாக்கில்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரியையில் இடம் பெற்றவர்கள் டோரதி பார்க்கர் மற்றும்  ரிங் லார்ட்னர் 
ஒரு சமயம் டோரதி பார்க்கர், சில வாரங்கள் ரிங் லார்ட்னர் வீட்டில் ஓய்வெடுக்கச் சென்று இருந்தார். இருவரும் பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அதன் பிறகு டோரதி ஒரு கவிதையை எழுதினார். அது பிரபலமான கவிதையான RESUME.
Razors pain you; 
Rivers are damp; 
Acids stain you; 
And drugs cause cramp. 
Guns aren’t lawful; 
Nooses give; 
Gas smells awful; 
You might as well live.

ரிங் லார்ட்னரும் 'All at Sea' என்ற தன் இசை நாடகத்தில் ஒரு பாடல் எழுதினார்.
But cyanide. it gripes inside;
Bichloride blights the liver;
And I am told one catches cold
When one jumps into the rivers.
To cut my throat could stain my coat
and my valet furious.
Death beckons me; but it must be
a death that ain't injurious!
பார்த்தால் காப்பி அடித்தது போல் இருக்கிறது.  இல்லை... இல்லை... இரண்டும் அவரவர் சொந்தமாக எழுதிய கவிதைகள்தான்!

7 comments:

  1. காப்பியைப் பற்றின பல செய்திகள் எனக்குப் புதிது. சுவாரசியம் நிறைந்தது. செய்திச் சேனல்கள் (ஆன்லைன்) என்ற பெயரில் தமிழில் நிருபர்களே இல்லாமல் பிற பத்திரிகையிலிருந்து செய்தியைக் காபியடித்துத் தனக்கேற்ற மசாலாவைச் சேர்த்து வெளியிடுகிறார்கள். ஆனால் சிகாகோ போஸ்ட் போல் ஈயடிச்சான் காபிக்கு ரொம்பத் தில் வேணும். டெக்னாலஜி வந்தபின் ஆங்கில நாவல்களை அப்படியே காபி எடுத்து 400 ரூ புத்தகத்தை 60 ரூக்கு பிளாட்பார்ம் கடைகளில் இந்தியாவில் விற்கிறார்கள். எந்த புகழ் பெற்ற நாவலும் இப்படிக்கிடைக்கும்.

    கவிதை முழுவதும் புரியவில்லையாயினும் ஒத்த சிந்தனை, இன்ஸ்பிரேஷன் என்பது பொதுவானது (கவிதை, நாவலில்)

    ReplyDelete
  2. காப்பி அடிப்பது நம்ம ஆட்களுக்குக் கைவந்த கலை ஆச்சே! :)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி. இப்போ யு.எஸ்ஸில் இருக்கேன். இந்தியா வந்ததும் சொல்றேன். ஶ்ரீரங்கம் வாசி. அம்மாமண்டபம் ரோடு. ஆனால் அங்கே போக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கு! :)

      Delete
  4. Can I send the book to your address in India?

    ReplyDelete
  5. ம்ம்ம் அனுப்பலாம். அனுப்பிட்டுச் சொன்னீங்கன்னா செக்யூரிடி கிட்டே புத்தகத்தை வாங்கிப் பத்திரப்படுத்தும்படி தொலைபேசிச் சொல்றோம். விலாசம் தரேன்.

    Mrs. Geetha Sambasivam,

    407, Cozy Nest,

    Ammamandapam Road,

    Opp.Shanmuga Kalyana Mandapam,

    Srirangam-Tiruchy. 620006.

    ReplyDelete
  6. THe book will be posted on 29th Jan 17

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!