December 30, 2016

புத்தக அபேஸ் : ஒரு ‘சாதனை’யாளரின் கதை

கடை கண்ணிகளில், முக்கியமாக சூப்பர் பஜார், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் ஆகியவைகளில் பொருள்களை கடத்திப்போவது சற்றுச் சுலபம். இப்போது கண்காணிப்பு காமிராக்கள் வந்துள்ளதால் ஓரளவு குறைந்திருக்கக் கூடும்.

புத்தக சாலைகளில் இப்படி நடப்பதும் சகஜம். ஆனால் புத்தகத்தை அபேஸ் செய்பவர்கள் சற்றுப் படித்தவர்கள் என்பதால் இது ஒரு கௌரவமான திருட்டாக (அவர்களால்) கருதப்படுகிறது.
அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பல்கலைக்கழகப் புத்தக சாலையில் உறுப்பினராகச் சேர்ந்தேன்எனக்குப் பிடித்த சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை இஷ்யூபண்ணுவதற்குக் கொடுத்தேன்.
அதில் பார் கோடுகள் ஒட்டப்பட்டிருந்ததால் அவற்றை சர் சர்ரென்று தேய்த்து வைத்தார். அவற்றை எடுக்கப் போனேன். ஒரு நிமிஷம் இருங்கள்என்று சொல்லி, அவற்றை எடுத்து புத்தகம் ஒவ்வொன்றையும் மணை மாதிரி இருந்த ஒரு பலகையின் மீது ஒரு செகண்டு தேய்த்துவிட்டுக் கொடுத்தார்கள்.

எல்லாப் புத்தகங்களையும் தேய்த்து வைத்ததும் அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்... இல்லை... இல்லை... காலை எடுத்து வைத்திருப்பேன். திடீரென்று பயங்கர சைரன் மாதிரி அலறல் கேட்டது. தயவுசெய்து செக்-அவுட் கவுண்ட்டருக்குப் போகவும்என்று அசரீரி குரல் கொடுத்தது. யாரைப் போகச் சொல்கிறது என்று தெரியாமல் திருதிரு என்று விழித்தேன். அப்போது ஒரு லைப்ரரி பணியாளர்  ஓடிவந்துஒரு நிமிஷம். புத்தகத்தில் ஏதோ ஒன்று ஸ்கேன் பண்ணவில்லை போலிருக்கிறது. வெரி ஸாரி... மன்னித்துக் கொள்ளுங்கள். திரும்ப ஸ்கேன் பண்ணித் தருகிறேன்என்று சொல்லி, மறுபடியும் ஸ்கேன் செய்து என்னிடம் கொடுத்தார். நான் அவற்றை வாங்கிக் கொண்டு ராஜநடை போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அந்த மணையில் இருக்கிறது சூட்சமம் என்று தெரிந்து கொண்டேன்.
இந்த எலக்ட்ரானிக் வித்தையைக் கண்டு வியந்தேன். புத்தகத்தின் முதுகில் உள்பக்கமாக ஏதோ சிறிய அட்டை மாதிரி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது, சில வருஷங்கள் கழித்து ஒரு பழைய லைப்ரரி புத்தகத்தைபுக் சேலி'ல் வாங்கி ஆராய்ந்த போது தெரிந்தது.
ஆகவே நூல் நிலையத்திலிருந்து புத்தகங்களைரைட்கொடுப்பது இயலாத காரியமாக இந்தத் தொழில்நுட்பம் வராத காலத்தில், நியுயார்க் பப்ளிக் லைப்ரரியிலிருந்து ஒருத்தர் புத்தகங்களை அபேஸ் பண்ணியிருக்கிறார். அந்தப் புத்தகங்களை வைக்க வீட்டில் இடமில்லாததால் இதற்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வைத்திருந்தார். உண்மைதான். வீடு கொள்ளாத அளவு புத்தகங்கள். எத்தனை தெரியுமா? பத்து, நூறு, ஆயிரம்... ஊஹும், பதினைந்தாயிரம் புத்தகங்கள். பழையநியுயார்க் டைம்ஸ்இதழில் இந்த அபேஸ் பற்றிய விரிவான பதிவு வந்திருந்தது. இண்டர்நெட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்த போது வலையில் மாட்டிக் கொண்டது இந்தத் தகவல்.

இந்தச் சாதனை பற்றிய விவரங்களைத் தருகிறேன்.
ஜோசப் ஃபெல்ட்மென் ஒரு வழக்கறிஞர். வயது 58. அவர் நியுயார்க்கில் கிரீன்விச் வில்லேஜ் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் 1975 செப்டம்பர் 19ம் தேதி தீப்பிடித்தது. முதல் மாடியிலும் இரண்டாவது மாடியிலும் பிடித்த தீயை அணைத்து விட்ட பிறகு, மற்ற மாடிகளை தீயணைப்பு ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது இந்த ஃபெல்ட்மென்னின் வீட்டில் புத்தகங்கள் கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். சமையலறையில் கூடப் புத்தகங்கள். அந்த வீட்டை அவர் புத்தகக் கிடங்காக வைத்திருந்தார். அவரைக் கைது செய்து விசாரித்தபோது அவர் சொன்னது. எனக்குப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
சுமார் 10 வருஷங்களாக அந்தப் பகுதியிலிருந்து இரண்டு கிளை நூலகங்களிலிருந்து அவர் புத்தகங்களை அதேபோல் பண்ணியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிந்தது.
அந்த வீட்டின் நாலு அறைகளிலும் ஒற்றையடிப் பாதை மாதிரி இடம் விட்டு புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். (ஃபெல்ட்மென்ட், நூல் நிலையத்தின் உறுப்பினர் கூட இல்லையாம்.)
எப்படி புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்தீர்கள்? என்று போலீஸ் கேட்டதற்கு, மொத்தம் மொத்தமாகஎன்று சொல்லிவிட்டு வாயை மூடிக் கொண்டார்.
இருபது பேர் 3 நாள் வேலை செய்து ஏழு லாரிகளில் புத்தகங்களை ஏற்றி நியுயார்க் பப்ளிக் லைப்ரரிக்கு எடுத்துச் சென்றார்களாம்.
ஃபெல்ட்மென்னுக்கு ஏழு வருட சிறைத் தண்டனை உறுதி என்று நூல் நிலைய அதிகாரி சொன்னார். (கடைசியில் இந்தக் கில்லாடிக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்று தெரியவில்லை.)
பின்குறிப்பு : இந்தச் சம்பவத்தை வைத்து ஒருவர் ELOMAN AND THE INFINITE என்ற தலைப்பில் நாடகம் ஒன்றைத் தயாரித்து   நியூயார்க் பிராட்வேயில்  மேடை ஏற்றினார்.
3 comments:

 1. மனணப்பலகை என்னும் scanner,barcode என்று இருந்தாலும் ஃபெலடமென்னின் சாதனையை மெச்சத்தான வேண்டும்.கற்கை நன்றே திருடியாயினும் கற்கை நன்றே.சுவாரசியான பதிவு.பொலிக,பொலிக 2017. நலமே நாளும்..நன்றி..

  ReplyDelete
 2. படிக்க சுவாரசியமாக இருந்தது.

  ஃபெல்ட்மென் செம கில்லாடி போலிருக்கிறது. இப்போதெல்லாம் RFID TAG போட்டுவிடுகிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் செக்யூரிட்டி Gate வழியாக நீங்கள் போனபோது சைரன் அலறியது. ஆனாலும் லைப்ரரியில் கண்காணிப்புக் கேமராக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கும். இல்லாவிட்டால், இந்த RFID TABஐ எடுத்துவிட்டால், புத்தகங்களை லவட்டிவிடலாம்.

  ஏன் புத்தகங்களை மட்டும், அடுத்தவரிடம் கொடுத்தால் திருப்பி வருவதில்லை? புத்தகங்கள் அந்த அளவு மனிதனை ஈர்க்கிறதா?

  ReplyDelete
 3. Puthu varushaththil niingaL nalla usual nalaththudan irukka PerumaaLaip praarththikkiraen.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!