December 02, 2016

புள்ளிகள், தகவல்கள்

நகைச்சுவை எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் ஒரு சமயம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். பொழுது போவதற்காக தினசரியில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியைப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில அவரால் சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அருகிலிருந்த நர்ஸிடம் “உங்களிடம் ஒரு உதவி வேண்டும். இந்தக் குறுக்கெழுத்துப் போட்டியில் ஒரு வார்த்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றார். அவள் “வார்த்தைக்கு என்ன க்ளூ கொடுத்து இருக்கிறார்கள்?” என்று கேட்டாள். “ஏழு எழுத்து வார்த்தை. அதில் மூன்று ‘யு’ (U) எழுத்து இருக்கிறது” என்றார்.
நர்ஸ் சிறிது நேரம் யோசித்துவிட்டு “இல்லை சார்...எனக்குத் தெரியவில்லை. அது வழக்கத்தில் இல்லாத UNUSUAL வார்த்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றாளாம்.
எழுத்துப்போட்டி
லண்டனிலிருந்து வெளியாகும் NEW STATENMAN வார இதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டி வெளியாகும். கடந்த 70, 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. (‘தாளிப்பு’வில் இதைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.) 1949ஆம் ஆண்டு ஒரு இதழில் வந்த போட்டி: GREEN அல்லது GREENE என்ற பெயருடைய எழுத்தாளர் ஒருவரின் நடையைப் பற்றி ஒரு சிறிய நையாண்டிக் கட்டுரையை எழுதும்படிக் கேட்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் GRAHAM GREENE என்ற எழுத்தாளர் இருந்தார். (இவர்தான் மேலை நாடுகளில் ஆர். கே. நாராயணனை அறிமுகப்படுதினவர்.)
இந்த நியூஸ்டேட்ஸ்மேன் போட்டியில் புனைபெயரில் ஒரு நையாண்டிக் கட்டுரையை (தன்னைத்தானே கேலி செய்து) எழுதி அனுப்பினார். அதில் அவருக்குப் பரிசு கிடைத்தது. எந்தப் பரிசு? இரண்டாம் பரிசு.
(சார்லி சாப்ளின் மாதிரி நடிக்கும் போட்டியில் சார்லி சாப்ளினே மாறுவேடத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் அவருக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததாகவும் துணுக்கு ஒன்று உண்டு.)
எனக்கும் அதே பிரச்னைதான்
தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஷேர் வாங்குவது, விற்பது பற்றி பேச்சு வந்தது. அப்போது கென்னடி “
நான் இப்போது அதிபராக இருக்கிறேன். அதிபராக இல்லாவிட்டால் நான் நிறைய கம்பெனிகளின் ஷேர்களை வாங்கி இருப்பேன்.”  என்றார்.
அந்த தொழிலதிபர் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் உரிமையுடன் “ஆமாம், ஆமாம். எனக்கும் அதே பிரச்னைதான். நீங்கள் அதிபராக இல்லாவிட்டால் நானும் நிறைய ஷேர்களை வாங்கி இருப்பேன்.” பாஸ்டன் க்ளோப் பத்திரிகையில் 1963-ல் வந்தது.
ஆண் பெயருக்கு மவுசு
ஹாரி பாட்டர் கதைகள் எழுதி ஏராளமாகப் பணமும் புகழும் சம்பாதித்துள்ள ஜே.கே.ரௌலிங்கின் முழுப் பெயர் ஜோன்னா ரௌலிங். சரி, ‘கே’ எப்படி நடுவில் வந்தது?
அவருடைய பிரசுரகர்த்தர் சொன்னாராம் “ஒரு பெண் எழுத்தாளர் என்றால் புத்தகங்கள் குறைவாகத்தான் விற்கின்றன. அதனால் உங்கள் இனிஷியலுடன் இன்னொரு எழுத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ரௌலிங் தன் பாட்டியின் பெயரான கேத்லீனிலிருந்து ‘கே’யை எடுத்துச் சேர்த்துக்கொண்டாராம்.
தி.ஜ.ரங்கநாதன், ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, கி.வா. ஜகன்னாதன், பி.எஸ்.ராமையா, வை.மு.கோதைநாயகி என்று பலர் இனிஷியல்களுடந்தான் பிரபலமாகி உள்ளனர்.
ஜார்ஜ் எலியட்

The Mill on the Floss, Silas Marner போன்ற நாவல்களும், பல கவிதைப் புத்தகங்களையும் எழுதிய ஜார்ஜ் எலியட் (1819-1880) உண்மையில் ஒரு பெண் எழுத்தாளர். அவரது இயற்பெயர் Mary Ann Evans. அந்த நூற்றாண்டில் பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனால் அவர் ஆண் பெயரில் எழுதினாராம்.
பொறாமையுடன் ஒரு பொக்கே
ஹாலிவுட்டில் BING CROSBY என்ற புகழ்பெற்ற ஹீரோ இருந்தார். ஒரு சமயம் அவர் COUNTRY GIRL என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படத்தின் கதாநாயகி GRACE KELLY என்ற பிரமாதமான அழகு நட்சத்திரம். (இவர் பின்னால் MONOCO நாட்டின் அரசகுமாரனை மணந்து Princess of Monoco ஆனார்.) Bing Crosbyக்கு படத்தில் தன் காதலியாக நடிக்கும் கெல்லி மீது லேசான மயக்கம் ஏற்பட்டது.

அதைத் தன் மனைவி கேத்தியிடம் அவர் மறைக்கவில்லை. ஒரு சமயம் க்ராஸ்பியின் மனைவி கிரேஸ் கெல்லியை சந்தித்தபோது “பிங் உங்கள் அழகுக்கு அடிமையாகி விட்டார். எனக்கு அதனால் உங்கள் மேல் பொறாமையாக இருக்கிறது” என்று பாதி தமாஷாகவும் பாதி நிஜமாகவும் சொன்னார்.
அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து பிங் காலமாகிவிட்டார். பிங் நினைவாக BEST OF BING என்ற ஒரு டிவி நிகழ்ச்சியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மொனாகோ இளவரசி கிரேஸ் கெல்லி பங்கு பெற ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தியும் பூங்கொத்தையும் பிங் கிராஸ்பியின் மனைவி கேத்தி அனுப்பினார். வாழ்த்துச்செய்தியில் அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? “அன்புடனும் பொறாமையுடனும் கேத்தி கிராஸ்பி” என்று எழுதியிருந்தார். (WITH LOVE AND JEALOUSY - KATHY)
ஆ! அந்த சிரிப்பு!
அமெரிக்க திரைப்பட நடிகை BETTE DAVS. கிட்டத்தட்ட 1௦௦ திரைப்படங்கள், டி.வி. மற்றும் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். பல விருதுகளை வென்றிருக்கிறார். அவர் ஒரு சமயம் சொன்ன சுவையான சம்பவம்.
நான் CLARK GABLE-உடன் நடிக்கவில்லை என்றாலும், அவர் மீது எனக்கு “கிக்” உண்டு. ஒரு சமயம் நான் என் பல் டாக்டரைப் பார்க்கப் போனபோது, பேச்சுவாக்கில் இதைச் சொன்னேன். நான் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குப் புதிது. அங்கு பல் வைத்தியர்கள் அதிகம் இல்லை. நான் சிகிச்சைக்குப் போன பல் வைத்தியர்தான் CLARK GABLE-ன் பல் வைத்தியரும் என்று கேள்விப்பட்டேன். அவர் என்னிடம் கேட்டார் “நீங்கள் CLARK GABLE இடம் என்ன அம்சத்தைக் கவர்ச்சியாகக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான் சொன்னேன் “அவரது மோகனப் புன்னகைதான்.”
உடனே பல் டாக்டர் “அப்படியா? அந்த ‘பளிச்’ புன்னகையை இன்று பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன். எனக்குத் தலை கால் புரியவில்லை. தலைக்குள் மின்சாரம் பாய்ந்தது. அடுத்து பல் டாக்டரிடம் வரப்போகிறவர் CLARK GABLE ஆக இருக்கும் என்று எண்ணினேன். எனக்கு சிகிச்சை முடிந்ததும் என்னை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கண்ணாடிப் புட்டியில் ஒரு ஜோடி பல் செட் இருந்தது. அவைதான் CLARK GABLE-ன் வெள்ளை வெளேர் பல் செட்கள் என்று டாக்டர் சொன்னார்.
குறும்புக்காரப் பேர்வழி.
NOEL COWARD இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர், எழுத்தாளர்.
ஒரு சமயம் LADY DIANA COOPER என்ற நடிகை, நோயலிடம் “உங்கள் PRIVATE LIVES” நாடகத்தைப் பார்த்தேன். நகைச்சுவையே இல்லையே?” என்றாள்.

அதற்கு நோயல் கூறிய சுருக் பதில் “அப்படியா? நீங்கள் நடித்த LADY MACBETHஐப் பார்த்தேன். சிரித்து மாளவில்லை!”
நோயல் எழுதிய ஒரு நகைச்சுவைப் பாடல்.
THE STATELY HOMES OF ENGLAND
HOW BEAUTIFUL THEY STAND
TO PROVE THE UPPER CLASSES
HAVE STILL THE UPPER HAND
எல்லாம் L.B.J. தான்.
அமெரிக்க அதிபர் L.B. ஜான்சன் குடும்பத்தில் அனைவருமே ‘L.B.J’தான். அனைவரின் பெயர்களும் சுருக்கி எழுதினால் “L.B.J” என்றுதான் வரும்.
அவரது மனைவியின் பெயர் லேடி பேர்ட் ஜான்சன். அவரது மகள்களின் பெயர் லிண்டா பேர்ட் ஜான்சன், லூஸி பெய்ன்ஸ் ஜான்சன். போதாததற்கு அவரது நாய்க்குட்டியின் பெயர் லிட்டில் பீகல் ஜான்சன்.

10 comments:

  1. எல்லாமே ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. இனிஷியல்களால் புகழ் பெற்றவர்கள் என்பதுதான் ரொம்ப stretched ஆகத் தோணினது. (காக்கை உட்காரப் பனம்பழம்). இதையே இரண்டு இடுகைகளாக்க் கொடுத்திருந்தால் அடிக்கடி வரும்படி இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. அடுத்த பதிவு சற்று தாமதமாகும்.- கடுகு

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ஆணிகளால் வரையப்பட்ட ஓவியம் பிரமிப்பைத் தருகிறது.

    சுவையான தொகுப்பு.

    ஆங்கில உச்சரிப்பு பற்றி சொல்லும்போது தன் நண்பரிடம் ஒருவர் சொன்னாராம் - SUGAR என்ற வார்த்தையில் மட்டுமே SU என்ற இரண்டு எழுத்துக்களும் அழுத்தமாக(ஷு) என்று (ஷூ என்ற வார்த்தையில் உள்ளது போல) உச்சரிக்கப் படுகிறது. SU என்று தொடங்கும் வேறு எந்த ஆங்கில வார்த்தையிலும் இந்த உச்சரிப்பு கிடையாது என்றாராம்.

    பதிலுக்கு அந்த நண்பர் கேட்டாராம் - ARE YOU SURE? என்று!!!

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  4. சபாஷ்... WHAT ABOUT 'ASSURANCE '?

    ReplyDelete
  5. எப்படி சார்,கொட்டை நீக்கி கோதுநீக்கி தேனில் நனைத்து பலா தருகிறீர். எல்லாமே ஜோர்.you r already late in postings,now why u take it too late? Plz reconsider..

    ReplyDelete
  6. It is easy to write but typing is back breaking. Further I have problem in myright retina. I have just found a person who has offered his services toi type. He is very efficient, fast anda accurate.
    I jsut arrived from US and I haad to fight not jet only the famoous jet lag and the problems of phone connection, internaet etc.
    -Kadugu

    ReplyDelete
  7. Sir,gud day to u. By grace of God,u will be alright.take some rest & then feed us..

    ReplyDelete
  8. Thanks. The msitake sin my typing is due to sight aberrations!
    I am sure with your good wishes I will be OK. Thanks.

    - Kadugu

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!