துணுக்குத்
தோரணம்
K -1: குருஷ்சேவ் வந்தபோது
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள 150 வருட பழைய
கல்லூரியின் நூல் நிலையத்திற்கு இரண்டு வருஷத்திரற்கு முன்பு முதல் முறையாகப்
போனேன். நூல்நிலையத்தில் “புத்தகங்களை இங்கேயே படிக்கலாம்; ஆனால் வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது”
என்றார்கள்.
அது பிரம்மாண்டமான புத்தகசாலை. முதல் நாள் ஒவ்வொரு மாடியாகப் போய், ஷெல்ஃப்களை எல்லாம் ஆசையுடன் தழுவியபடியே, என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று உத்தேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன். சில புத்தகங்கள் இருக்கும் ஷெல்ஃப் எண், call number போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
சுமார் மூன்று
மணி நேரம் பார்த்துவிட்டு (கால் ஓய்ந்துவிட்டதால்) வீட்டிற்குத் திரும்ப லிஃப்டை
நோக்கி வந்தேன். அப்போது ஒரு ஷெல்ஃபில் ஒரு புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. அதை
எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிய பக்கத்தில் “குருஷ்சேவ் வந்தபோது”
என்கிற மாதிரி தலைப்பில் குட்டிக் கட்டுரை இருந்தது. அதை விரைவாகப் படித்தேன்.
குருஷ்சேவ்
முதன்முதலாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்ச்சி. அவர் முதலில் வந்தது
சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு. அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஹால் கொள்ளாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் திரண்டு விட்டார்கள்.
பலருக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரே சள சள சப்தம். குருஷ்சேவ் வருகைக்குக்
காத்திருந்தனர். ஆனால் அதுவரை பேசாமல், வம்பளக்காமல் இருக்க முடியுமா?