என்ன, திடீரென்று அணுகுண்டைக் கையில் எடுத்துக்
கொண்டீர்கள் என்று யாராவது கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன்.
அணுகுண்டு
பற்றிய சில தகவல்கள் என் நினைவுக்கு வந்ததன் காரணம் சமீபத்திய மூன்று விஷயங்கள் .
1. ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் முதலில் 1945-ல்
ஹிரோஷிமாவில் போடப்பட்டது.
2.
ஆகஸ்ட் 9-ம் தேதி (1945) இரண்டாவது அணுகுண்டு நாகசாகியில் போடப்பட்டது
3.
நாகசாகியில்
அணுகுண்டைப் போட்ட விமானப்படை வீரர்களில் ஒருவரான. THEODORE "DUTCH" VAN KIRK -NAVIGATOR கடந்த மாதம் ஜுலை
28’ம் தேதி, தனது 93-வது வயதில் அமெரிக்காவில் காலமானார். (மற்றவர்கள் யாவரும் இவருக்கு முன்பே காலமாகி
விட்டார்கள்.)
இனி
அணுகுண்டு பற்றி சில தகவல்கள்.
1996’
ஆண்டு அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, வாஷிங்டன் நகருக்குப்
போய், சுற்றிப் பார்த்தேன். பிரபல
ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் ஒரு அரை நாள் செலவழித்தேன். அங்கு ஒரு கூடத்தில்
ஒரு விமானத்தின் மூக்குப்பகுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதுதான் அணுகுண்டைப்
போட்ட, விமானத்தின் மூக்குப்பகுதி என்று ’போர்ட்’ வைத்திருந்தார்கள். அதன்
பின்னால், சுவரில் 10, 12 அடி அளவு பெரிய புகைப்படம்
இருந்தது. அதில் 12 விமானப்படை வீரர்கள், ஒரு ராணுவ விமானத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
அணுகுண்டு LITTLE BOY |
*அணுகுண்டு
போட்ட விமானத்தின் பெயர்: ENOLA GAY ( இந்த வித்தியாசமான பெயரின்
பின்னே சுவையான விவரம் இருக்கிறது. அது பின்னால்!)
*1970
வருஷ வாக்கில் ஒரு TIME இதழில் ‘25 வருஷத்திற்குப் பிறகு’ என்கிற மாதிரி
தலைப்பில் ஒரு குட்டிக் கட்டுரை வெளிவந்தது. அணுகுண்டு போட்ட விமானிகளைத் தேடிக்
கண்டுபிடித்து, பேட்டி கண்டு எழுதி
இருந்தார்கள். அப்போது ஒரு சில வீரர்கள், தாங்கள் போட்ட அணுகுண்டு
செய்த பயங்கர அழிவைப் பார்த்த நினைவால் மனப்பிரமை பிடித்தவர்கள் போல்
ஆகிவிட்டார்கள் என்கிற மாதிரி எழுதி
இருந்தது. இந்தத் தகவலை தினமணி கதிரில் துணுக்காக எழுதி இருந்தேன். ( ஆனால் அப்படி
எதுவும் இல்லை என்கின்றன இப்போது சில
வலைப் பதிவுகள்.)
*.முதன்
முதலில் போடப்பட்ட அணுகுண்டுவிற்கு வைக்கப்பட்ட சங்கேதப் பெயர்: LITTLE BOY. இரண்டாவது
அணுகுண்டுவிற்கு வைக்கப்பட்ட சங்கேதப் பெயர்: FAT MAN
* பேர் தான் அணு. ஒரு குண்டின் எடைகொஞ்ச நஞ்சமல்ல, ஐந்து
டன்!
*
அது என்ன ENOLA GAY என்று பெயர் ?
அணுகுண்டு போடுவதற்காக ஒரு விமானத்தை வாங்க எண்ணிய அமெரிக்கா, போயிங் விமான
கம்பெனிக்குச் சென்று தகுந்த விமானத்தை
தேர்ந்தெடுக்க PAUL TIBBETS என்ற பைலட்டை அனுப்பியது. அவர் தேர்ந்தெடுத்த
விமானம் வாங்கப்பட்டது. “ விமானத்திற்கு ஒரு பெயரை நீங்களே வைத்து விடுங்கள்”
என்று சொல்லைவிட்டார்கள். அவர் மிகுந்த யோசித்து, தன் அம்மாவின் பெயரை - ENOLA GAY என்று அதற்கு வைத்து விட்டார்.
(பின்னால்,
ஒரு பேட்டியில் தனக்கு பல விஷயங்களில் ஊக்கம் அளித்தவர் தன் அம்மா தான் என்று
தெரிவித்திருக்கிறார்!) ENOLA GAY என்பதே விசித்திரமான பெயராக இருக்கிறதே
என்பதற்கு அவர் தந்த விளக்கம்: “ 1886’ம் ஆண்டு என் அம்மா பிறந்த சமயம், என்
தாத்தா ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். MARY YOUNG RIDENBAUGH என்பவர்
எழுதிய அந்த நாவலின் கதாநாயகியின் பெயர்:ENOLA
GAY. என் தாத்தாவிற்கு அந்தப் பெயர் பிடித்து இருந்ததால், என் அம்மாவிற்கு அந்தப்
பெயரை வைத்து விட்டார்!.
ஹிரோஷிமா
நகரின் மூன்றில் இரண்டு பாகத்தையும் சுமார் எண்பதாயிரம் பேரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் பலி வாங்கிய அணுகுண்டைப் போட்டது ENOLA GAY.
எந்த நாவலின்
கதாநாயகியின் பெயர் அது? ENOLA GAY or HER
FATAL MISTAKE!. ( பொறுத்தத்தைக் கவனியுங்கள்!)
இரண்டாவது
அணுகுண்டை KOKURA என்ற நகரின் மேல் போடுவதாகத் திட்டம். ஆனால்
9’ம் தேதி அந்த பகுதியில் ஒரே பனிமூட்டமாகவும் புகையாகவும் இருந்ததால் கடைசி நிமிஷத்தில் நாகசாகியின் மீது போட முடிவெடுக்கப்பட்டதாம்.(புகை,
வாயில் இருந்தால் பகை; வானில் இருந்தால் உயிர் காக்கும் நண்பனோ!)
இந்த
விமானத்தில் சென்ற வீரர்களில் ஒருவர் சமீபத்தில்
காலமான VAN KIRK
ஒரு
பின்குறிப்பு: அணுகுண்டை ஏற்றி வந்த கப்பல், திரும்பிப் போன போது தலை கவிழ்ந்தது.
1000 பேருக்கு மேல் அதில் இருந்தார்களாம். சுமார் 300 பேர்தான் பிழைத்தார்களாம். அந்தக்
கப்பல் பற்றி எல்லா விவரங்களையும் படு
ரகசியமாக வைத்திருந்ததனால் அது மூழ்கியது கூட யாருக்கும் தெரியாமல் போவிட்டதாம். சில
உடல்கள் மிதக்க ஆரம்பித்த பிறகுதான் விஷயம் தெரியவந்ததாம்! ( இது பற்றி முழு விவரங்களை தேடிப்
பிடிக்கப் பார்க்கிறேன்.)
Excellent information Kadugu sir.
ReplyDeleteDefinitely you give new info which are not seen in any other publications! Thank you! - R. J.
ReplyDeleteAwesome... you are like a mini encyclopedia.. Learning about interesting facts is something exciting, but most people cannot recollect such facts. I am amazed that you can learn so much and recollect them easily as well...
ReplyDelete'நிறைய எழுதுங்கள் சார். ரொம்ப informative ஆ இருக்கு. நீங்கள் உங்கள் தில்லி அனுபவம், மற்றும் பல அனுபவங்களையும் எழுதிவைக்கலாமில்லயா?
ReplyDeleteடில்லி அனுபவங்கள் ஒரு தொடராக எழுதி உள்ளேன். இன்னும் இருக்கிறது. சுயபெருமை அடித்துக் கொள்வதை விட, பிரமுகர்கள், அறிஞர்கள், மேதைகள் ஆகியவர் பற்றி எழுதவே மனம் விழைகிறது.
ReplyDeleteபார்க்கலாம், கலந்து கட்டி எழுதப் பார்க்கிறேன்.-- கடுகு
ReplyDelete
please see quote of Robert Oppenheimer from the Bhagvad gita on the bomb in you tube. Oppenheimer was involved in developing the bomb
ReplyDelete