April 30, 2014

அமெரிக்கா :ஒரு லாபம் - ஒரு நஷ்டம் -ஒரு வியப்பு -ஒரு சிரிப்பு


1.ஒரு லாபம்
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். அங்கு சில நாள் தங்கி  பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் என்பதால் ஒரு வாடகை காரை எடுத்துக் கொள்ள விரும்பினோம். விமான நிலையத்திலேயே வாடகைக்கார் கம்பெனி இருந்தது. அங்கு போவதற்கு விமான நிலையத்திற்குள்ளேயே ஓடும் ரயிலில் ஐந்து, ஆறு நிமிஷம் பயணம்  செய்து போகவேண்டும். 
 அங்கு போனோம். ஏராளமான கார்கள் நின்று கொண்டிருந்தன. நிறைய பேர் கார் ’புக்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஒரு கார் புக் செய்தோம்.  “ இதோ ஐந்து நிமிஷத்தில் கார் வந்துவிடும். காரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெயிட்” என்றார் ஒரு பணியாள்.காத்திருந்தோம்.  5. 10, 15 என்று நிமிஷம் ஆயிற்று. காரைக் காணோம். ஆனால் அந்த அந்தப் பணியாள் அவ்வப்போது வந்து பணிவுடன், “ சாரி.. டூ மினிட்ஸ்? என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
சுமார் 20 நிமிஷம் கழித்து, கார் வந்தது. கார் சாவியை எங்களிடம் கொடுத்து விட்டு அந்த அலுவலர். “  சாரி. டிலே ஆகிவிட்டது. காரில் முழு டாங்க் பெட்ரோல் நிரப்பி இருக்கிறது. சாதாரணமாக, காரைத் திருப்பிக் கொடுக்கும்போது முழு டாங்க் பெட்ரோலுடன்தான் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.. ஆனால் உங்களை காக்க வைத்ததற்காக உங்களுக்குச் சின்ன சலுகை தருகிறோம். காலி டாங்குடன்கூட காரைத் திருப்பிக் கொடுக்கலாம். இந்த சீட்டைக் காட்டினால் போதும்: என்றார். ‘கிட்டத்தட்ட 100 டாலர் பெட்ரோல் இலவசமாகத் தருகிறார்’ என்ற மகிழ்ச்சியோடு காரை எடுத்துக் கொண்டு போனோம்.

2.ஒரு நஷ்டம்!
சான் ஃப்ரான்சிஸ்கோவில் பல இடங்களைச் சுற்றி பார்த்தோம். 

பலரைச் சந்தித்தோம்.  பிரபல வலைப்பதிவர் திரு உப்பிலி ஸ்ரீனிவாசன் ( பால் ஹனுமான்) அவர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன்.

ஒரு நாள் இரவு, ஒரு இந்திய ரெஸ்டாரண்டுக்குப் போனோம். சற்று லேட்டாகப் போனதால் கார் பார்க்கிங் கிட்டதட்டக் காலியாக இருந்தது. ரெஸ்டாரண்ட் வாசலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிடப் போனோம்.
சாப்பிட்டு விட்டு வந்தோம். காருக்கு  அருகில் வந்த போது முன்பக்கக் கண்ணாடியில் ஏதோ ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம் அதை எடுத்துப் பார்த்தோம். அது.  போலீஸ் சலான்! “காரைத் தப்பாக பார்க் செய்திருக்கிறீர்கள். அபராதம் 75 டாலர். அதைக் கீழுள்ள முகவரிக்கு 10 நாட்களுக்குள்  அனுப்பிவிடவும். அல்லது இன்ன தேதியில் இந்த கோர்ட்டில் ஆஜராகி வாதிடலாம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.  என்ன விதியை மீறினோம் என்று தெரியவில்லை. 

எங்களுடன் இருந்த உள்ளூர்க்காரர், காரை ஒரு தரம் சுற்றி வந்து விட்டு, ” “இதோ பாருங்கள். இது தான் நீங்கள் செய்த குற்றம். பார்க் பண்ணும்போது முன் பக்க டயர் மஞ்சள் கோட்டின் மேல் ஒரு அங்குலம் ஏறிவிட்டிருக்கிறது. கோடுகளுக்கு இடையேதான் காரை நிறுத்த வேண்டும். கோடைத் தொடக்கூடாது என்பது விதி” என்றார்.
ராத்திரி ஒன்பது மணி. கிட்டதட்ட ஆள் அரவமே இல்லாத இடத்தில் கார்கள் சரியாக நிறுத்தி இருக்கிறர்களா என்று பார்த்து, சரியாக நிறுத்தாதவர்களுக்குச் ‘சலான்’ கொடுத்துவிட்டுப் போன போலீஸின்  கடமை உணர்வைப் பாராட்டுவதா அல்லது வாடகைக்கார் கம்பெனி கொடுத்த சலுகை இப்படி அநியாயமாக, அபராதமாகப் போய்விட்டதே என்று புலம்புவதா என்று தெரிவில்லை. ஒரு கணம்தான். 
 ‘சரி,போதும்.. நம் பாராட்டுக்காகத்தான்  அவர் ரொம்ப காத்திருக்கிறாரா?’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு, புலம்பித் தீர்த்தோம்!
”எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு?” என்று சொல்லி, நாங்களும் கீதாசார்யனாக மாறினோம்!

 3. ஒரு வியப்பு!
அமெரிக்காவில் வீடு வாங்குபவர்களோ வாடகைக்கு வீடு  தேடுபவர்களோ முதலில்  பார்ப்பது:   வீடு இருக்கும் பகுதியில் நல்ல பள்ளிக் கூடம் இருக்கிறதா என்று விசாரிப்பது. ’நல்ல ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட்’ என்று பேர் வாங்கிய பகுதியில் வீடுகள் விலை சற்று அதிகமாக இருக்குமாம். 
நல்ல தராமான கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில் முனிசிபல் பள்ளி
களிலும்  சேர்க்கத் தயங்கமாட்டார்கள்
என் பேத்தி ஷார்ட் ஹில்ஸ் ( நியூஜெர்ஸி)  என்று பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சில வருஷங்களுக்கு முன்பு சேர்ந்தாள். அந்தப் பள்ளியில் மொத்தம் ஐந்து வகுப்பு வரைதான்.  ஆனால் ஒவ்வொரு வகுப்புக்கும் நிறைய செக்‌ஷன்கள் ஏ,பி,சி.டி என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரு சமயம் உள்ளூர் பேப்பரில் முதல் பக்கத்தில்  வந்த தலைப்புச் செய்தியைப் பார்த்து வியந்து போனேன்.   இதுதான் ஹெட்லைன்: ஹார்ட்ஷான் பிரைமரி பள்ளியில் 5.ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு இன்னொரு செக் ஷன் சேர்க்கப்படுகிறது!   ஆம். அந்த முனிசிபல் பள்ளிக்கு அவ்வளவு பெயர்!

நான் பல சமயம் என் பேத்தியைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன். பள்ளிக்குச் சற்று அருகிலேயே வீடு இருந்ததால் நடந்தே போய் விடுவோம்.

 பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலை 8.30. காலை 8.15 லிருந்து  சாரை சாரையாகக் கார்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து, விட்டு விட்டுப் போவார்கள். கார்களில் இருந்து குழந்தைகளைக் கீழே இறக்கிவிட 5’ம்  வகுப்பு மாணவர்கள் தயாராக நின்று கொண்டிருப்பார்கள். கார்கள் அரை நிமிஷம் கூட நிற்க வேண்டி இருக்காது.

அந்த பள்ளியின் பிரின்ஸிபால் ( அறுபதைத் தொடும் வயதுக்காரர் ),  கார்கள் வந்து நிற்கும் நடைபாதையை ஒட்டி நிற்பார்.  குழந்தைகளை அவரும் இறக்கி விடுவார்.  ஒரு நாள் கூட தவற மாட்டார். இருக்கிற இடம் தெரியாமல் வேலை செய்வார். அவ்வளவு அர்ப்பணிப்பு! பனியோ, குளிரோ, வெய்யிலோ, மழையோ எதையும் பொருட்படுத்த மாட்டார். எந்த வித அதிகாரமும் பண்ண மாட்டார். வியப்புக்குரிய மனிதர்.
சென்ற வருஷம் ரிடையராகி விட்டாராம். செய்யும் தொழிலே தெய்வம் என்பது அவரது கொள்கையாக இருக்கும்.

(ஒரு கொசுறுத் தகவல்: ஒரு நாள்  ஒரு புதிதாக அறிமுகமான நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். ஐந்தாவது வகுப்பில் படிக்கும், அவருடைய  படு சுட்டிப் பெண் சொன்ன தகவல் இது.  அவள் பள்ளியில் இரண்டு வகுப்புகள் தான். ஆனால் எத்தனை மாணவர்கள்? இரண்டாயிரம்  பேருக்கு மேல்!)

4.ஒரு சிரிப்பு


பழைய LIFE  பத்திரிகையில் வந்த படம்!

11 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. பல்சுவைப் பதிவுகள். நன்றி!

    ReplyDelete
  3. தலைப்பில் நீங்கள் கொடுத்திருக்கும் உணர்வுகள் படிக்கையில் எனக்கும் ஏற்பட்டன. கூடவே இரவிலும் பார்க் பண்ணிய இடத்தை செக் பண்ணி. சலான் ஒட்டிய அந்த போலீஸ்காரர்களை நினைத்து வியப்பும்... நம்ம ஊரு போலீசை நினைச்சு பெருமூச்சும்...!

    ReplyDelete
  4. Jayanthi SridharanMay 10, 2014 at 2:15 AM

    Sir, With loads of such anecdotes to share, I can only feel that it would be enjoyable to read your posts more frequently.

    ReplyDelete
  5. Dear Madam,
    Thank you for you comments. I do want to increase the frequency of my posts, but keying takes more time than I can afford!
    -kadugu

    ReplyDelete
    Replies
    1. I wish I am nearby to help you in typing. உங்கள் எழுத்துக்கள் பலருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நீங்கள் உங்கள் அனுபவம் எல்லாவற்றையும் பதிவு செய்யவில்லை. டெல்லி கணேஷ் அவர்களை சமீபமாக ஹிந்தி விளம்பரத்தில் பார்க்கும்போது உங்கள் ஞாபகம்தான் வந்தது.

      Delete
  6. வாடிக்கையாளர்களின் சேவை, Education System இவை இரண்டும் அமெரிக்காவை நினைத்துப் பெருமூச்சு விடச் செய்தன. India seems to be sellers market, including Education.

    ReplyDelete
  7. You can send me your handwritten document to me in my email..i'll type and send to you

    ReplyDelete
  8. You can send your handwritten document to me..i'll type and send the same to me...

    ReplyDelete
  9. Your stories and other Comedy experiences are Wonderful.Writing is an art and your delivery is Wonderful.I am happy with your association through this blog.Adiyean at present in Denver.

    ReplyDelete
  10. Dear Mr Raghavan,
    Please let me know your email ID.

    -Kadugu

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!