September 20, 2013

MAD Magazine-க்கு சஷ்டியப்த பூர்த்தி



புகழ் பெற்ற நகைச்சுவைப் பத்திரிகையான   MAD இதழுக்கு 60 வயது ஆகிவிட்டது.. ‘ MAD  பத்திரிகையும்  நானும்’ என்ற பதிவை முன்பே (இங்கு சொடுக்கவும்)எழுதி உள்ளேன். இது இரண்டாம் பதிவு.
சமீபத்திய ஆண்டுகளில்  MAD  இதழ்களை   நான் பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வரும் சமயம் புத்தகசாலையில் புரட்டிப் பார்ப்பதுண்டு. பிரசுரகர்த்தர்  வில்லியம் கெய்ன்ஸ்  காலமாகி விட்ட பிறகு பத்திரிகையின் ஜீவன் குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றியதும் ஒரு காரணம். திரைப்படங்கள் பார்ப்பதை நான்  எப்போதோ நிறுத்தி விட்டேன் என்பதால்  அமெரிக்கத்  திரைப்படங்களை நையாண்டி செய்யும் படக்கதைகள் பல  புரிவதில்லை.

சென்ற   வருஷம் ஒரு அகராதி சைஸ் 1000 பக்க   MAD கலெக் ஷன் புத்தகம் கிடைத்தது. அதனால் பழைய பித்து பிடித்துக் கொண்டது!
சமீபத்தில்  60 ஆண்டு நிறைவை ஒட்டி, தீபாவளி மலர்  அளவில் கனமான   ஆர்ட் பேப்பரில் . TOTALLY MAD- 60 years of Humor,Satire, Stupidity and Stupidity என்ற பெயரில்  புத்தகம் வெளியிட்டிருக்கிறர்கள். அபாரமான புத்தகம். பழைய இதழ்களிலிருந்து பல நகைச்சுவை அம்சங்களை தொகுத்துத் தந்திருந்தாலும் புதிதாகச் சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
MAD பத்திரிகையைப் பற்றிய   பல சுவையான  கூடுதல் தகவல்களை இங்கு தருகிறேன்.
MAD பத்திரிகையில் விளம்பரங்களைப் போடுவதில்லை என்பது கெயின்ஸின்  கொள்கை. தொண்ணூறுகளில்  MAD உயர்ந்த பட்சமாக கிட்டத்தட்ட  21 லட்சம் காபிகள் விற்றது. சமீப காலத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
கறுப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறியபோது செலவை ஈடு கட்ட விளம்பரங்களை MAD போட ஆரம்பித்தது. அத்துடன்,வருஷத்தில் 8 இதழ்கள் என்பதை 6-ஆகக் குறைத்து விட்டது.
ஒரு சிலர் MAD பத்திரிகை மீது அவ்வப்போது வழக்கு தொடுத்து இருக்கிறர்கள். அதனால், MAD பத்திரிகையில், ஆசிரியர், உதவி ஆசிரியர்,பிரசுரகர்த்தர்,என்ற பெயர்ப் பட்டியலில் தங்களது வழக்கறிஞரின் பெயரையும் சேர்த்து விட்டார் வில்லியம் கெயின்ஸ்!

MAD பத்திரிகை மீது போடப்பட்ட  வழக்குகளில் இரண்டு  சுவையானவை.


1. பள்ளி மாணவர்கள் உடை பற்றி ஒரு உத்தரவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை நையாண்டி செய்து படக்கட்டுரை MAD வெளியிட்டு இருந்தது.(ஆண்டு 1966)   .
 ”உடை பற்றிய உத்திரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, புரூக்லின் ( மாசசூசெட்ஸ்) பள்ளிக்கூட மாணவி (யெட்டா)  ஃப்லிட்ச் என்ற மாணவி கடந்த 3 மாதங்களாக நிர்வாணமாகப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தார்” என்று கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டம், நிஜமாகவே புரூக்லின் பள்ளிக்கூடத்தில்  இருந்த  ஒரு மாணவியின் பெயர் (சிந்தியா) ஃப்லிட்ச்!   அவள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டாள் - இரண்டரை லட்சம் டாலருக்கு நஷ்ட ஈடு கேட்டு. கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள கெயின்ஸ்  மறுத்து விட்டார். கற்பனையாக எழுதிய பெயர் இது.   அந்த பள்ளியில் ஒரு ஃப்லிட்ச் இருந்தால் அது தற்செயல்தான்: என்பது அவரது வாதம்.

அவருக்கு வேறொரு  (ANNABELLE) ஃப்லிட்ச் என்பவர்  “ என் பெயரை பத்திரிகையில் போட்டதால் நான் பிரபலமடைந்து விட்டேன். மிக்க நன்றி” என்று எழுதியிருந்தார்.  இந்தக் கடிதம் அவர் தரப்புக்கு வலு சேர்த்தது,
இருந்தும் பின்னால் கெயின்ஸ்  அந்த புரூக்லின் பெண்ணுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து  சமரசம் செய்து கொண்டாராம்.

2,  ஆனந்த விகடனுக்கு, ’விகடன் தாத்தா’, ’நிருபர் வானரம்’ அடையாளச் சின்னங்கள் இருப்பது போல, MADக்கு சின்னம் ALFRED E NEUMAN    என்ற பெயரில் ஒரு குறும்புப்பையன் படம் . மிக்கி மௌஸ் போல இது பிரபலமான சின்னமாக ஆகி விட்டது.  எவரெஸ்ட் உச்சிக்கு சென்ற ஒரு குழுவினர் அங்கு   நியூமென் படம் போட்ட கொடியைப் பறக்க விட்டு வந்துள்ளனர்.
அதே சமயம் பலர் அந்த குறிப்பிட்ட படம், தாங்கள் போட்ட படத்தின் காபி என்றும் உரிமை கோர ஆரம்பித்தார்கள். யாராலும் வெற்றி பெற முடியவில்லை.
ஒரு சமயம் கெயின்ஸுக்கு ஒருபெண்மணியிடமிருந்து  நோட்டீஸ்  வந்தது,.  ”என் கணவர் பல வருஷங்களுக்கு முன்பு 1914-ல் ஒரு விளம்பரத்திற்காக முன் பல் ஒன்று இல்லாத சிறுவன் படத்தைப் போட்டார். அதை நீங்கள் காபி அடித்து உபயோகித்து வருகிறீர்கள். படத்தை இங்கு இணைத்துள்ளேன்” என்று எழுதி, பல மில்லியன் டாலர் நஷ் ஈடு :கேட்டும் எழுதி இருந்தார், ஆனால் கெயின்ஸின் வக்கீல்கள் எங்கெங்கோ வேட்டையாடி 1914க்கு முன்பேயே பலர்  நியூமென் மாதிரி படத்தை  உபயோகித்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். கேஸில் வெற்றி பெற்றார்கள்!

நான்கு கொசுறு
1. இந்த மலரை எப்படிச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
-------------------------------------------
         IN MEMORIUM
"THIS BOOK IS DEDICATED TO THE 
MEMORY OF THE THOUSANDS  OF JOKES 
THAT HAVE DIED ON THE PAGES OF  
MAD OVER THE PAST 60 YEARS"
-------------------------
2. MAD பத்திரிகைக்கு நிதி நெருக்கடி எற்பட்ட சமயம், பத்திரிகையில் வந்த பல ஓவியங்களை ஏலம் விட்டுப் பணம் திரட்டினார்கள்.
3. எலிஸபெத் டெய்லர் MAD பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து அவரைப் பற்றிய நையாண்டிப் படங்களை வாங்கிக் கொண்டாராம்.

4.(பின்னால் டயானவை மணந்த)  பிரின்ஸ் சார்லஸ்,”அந்த படம் என்னைப் போல் இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். அது சரியில்லை” என்று கைப்பட  MAD-க்குக் கடிதம் சிறுவனாக இருந்த போது எழுதியுள்ளார். இந்த கடிதம் உண்மையான கடிதம் என்பதை  MAD உறுதிப்படுத்திக் கொண்டதாம்.
4. வில்லியம் கெயின்ஸ் காலமானபோது, MAD ஆசிரியர் குழு நியூ யார்க் டைம்ஸில் வெளியிட்ட ஒரு அஞ்சலி விளம்பரம். (நியூமென்னின் கண்ணில்  உள்ள கண்ணீர்த் துளியைக் கவனித்தீர்களா?)
விளம்பரத்தில் உள்ள வாசகம்:  WE'LL CARRY ON WITH THE LAUGHTER, THE IRREVERENCE, THE MISCHIEF AND, OH YEAH, THE MAGAZINE TOO. WE'LL MISS YOU BILL.
LOVE,
"THE USUAL GANG OF IDIOTS"

7 comments:

  1. நாங்களும் மேட்' பத்திரிக்கையின் வாடிக்கையாளர்கள்.
    க்கிழிந்த போகிற நிலைமையில் பத்திரமாக வைத்திருக்கிறோம். இரண்டு பசங்களும் வெளி நாடுகளில் தங்களுக்குக் கிடைக்கும் போதெல்லாம் பழைய மேட்' டைஜஸ்ட் வாங்கி வைத்திருக்கிறார்கள்.
    இந்த குறிப்பிட்ட இதழ் இந்தியாவில் கிடைக்கிறதா.
    பகிர்வுக்கு மிக நன்றி,.

    ReplyDelete
  2. 40, 50 வருட MAD பழைய இதழ்களுக்கு இப்போதும் டிமாண்ட் இருக்கிறது இப்போது 5 டாலர், 10 டாலர் என்று விற்கிறார்கள்.--விட்டல்

    ReplyDelete
  3. MAD இதழ் இந்தியாவில் பெங்களூரிலிருந்து வந்தது, அது அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இல்லை. -- கடுகு

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    இந்தப் பதிவையும், அத்துடன் முந்தைய பதிவையும் மீண்டும் ஒரு முறை படித்து மகிழ்ந்தேன்.

    அப்போது கேட்ட அதே வேண்டுகோள்தான் இப்பவும். கடுகு காலண்டர் மற்றும் படக்கதைகளை வெளியிடுவீர்களா? படிக்க, ரசிக்க, ஆவலாக இருக்கிறது.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. << கடுகு காலண்டர் மற்றும் படக்கதைகளை வெளியிடுவீர்களா? >> வெளியிடுவதற்கு ஒஇரு தையும் இல்லை. கதரில் DOUBLE SPRED வந்ததை பதிவில் அப்படி அடக்குவது என்று தெரியவில்லை. முயன்று பார்க்கிறேன். -கடுகு

    ReplyDelete
    Replies
    1. அ­டக்­கு­வ­தற்­கு ­நான் ­உ­த­வு­கி­றேன் ­ஸார். இந்தி­யா ­வந்­த­தும் உ­டன் ­அ­ழைக்­க­வும்.

      Delete
    2. ­மேட் ­மே­க­ஸின் ­நான் ­ப­டித்­த­தில்­லை... கேள்­விப்­பட்­ட­து ­மட்­டு­மே. இப்­ப ­நீங்­க ­எ­ழு­தி­ன­தப் ­ப­டிச்­ச­தும் ­அந்­த ­மேட் 60 ஸ்­பெ­ஷல் ­வெ­ளி்­யீட்­டைப் ­பாக்­க­ணு்ம்­க­ற ­ஆ­சை ­உற்­பத்த்­தி­யாய்­டுச்­சு.

      Delete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!