கம்ப்யூட்டரையே கணிதத்தில் வென்றவர் சகுந்தலா தேவி.
சமீபத்தில் காலமானார்.,
தன் ‘அபூர்வ’ சக்தியால் உலகப் புகழ் பெற்ற இவரைiக் கணக்குப் புலி என்றோ, கணித மேதை என்றோ, பிராடிஜி என்றோ கூற முடியாது.அவரிடம் ஒரு அதிசய சக்தி இருந்தது. அது இறைவன் கொடுத்த அபூர்வத் திறமை. பெரியபெரிய எண்களைப் பெருக்குவது, வர்க்க மூலம், (ஸ்கொயர் ரூட். க்யூப்ரூட், கண்டு பிடிப்பது போன்ற திறமை இருந்தது.
சுமார் 40 வருஷத்திற்கு முன்பு அவரைச் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் சகஜமாகப் பேசினார்.
அவரிடம், “ பெரிய பெரிய கணக்குகளை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களால் எப்படி . போட முடிகிறது? அந்த சமயங்களில் ஏதாவது ஆழ்மனதில் யோசிக்கிறீர்களா ? உங்களுக்கே உங்கள் திறமையைக் கண்டு வியப்பு ஏற்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டேன்.
“ எனக்கு விடை தெரிகிறது, சொல்கிறேன். எப்படி தெரிகிறது என்பதை என்னாலேயே விளக்க முடியாது. ... சரி.. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்... 17-ஐயையும் 18-ஐயையும் கூட்டினால் என்ன வரும்?”என்று கேட்டார்.
நான் உடனே “35”என்றேன்..
“ சரி.. எப்படி இவ்வளவு சீக்கிரம் சொன்னீர்கள்? மனதிற்குள் கூட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
” இல்லை..இது என்ன பெரிய கணக்கு.. கூட்டாமலேயே எனக்கு விடைதெரியும்” என்றேன்
“ அதாவது உங்கள் மூளை எப்படிக் கூட்டியது என்று உங்களுக்குத் தெரியாது. அது மாதிரிதான் எனக்கும்.. மனதில் வரிசையாக எண்கள் தெரிகிறது” என்றார்.
“ நீங்கள் தூங்கும்போது கனவு காண்பதுண்டா?” என்று கேட்டேன்.
“ ஏன், காண்பதுண்டு. எல்லா விதத்தில்லும் நான் சாதாரணமானவள்தான்... இந்தத் திறமை எப்படி எனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இப்படி அதிசயத் திறமை உள்ளவர்கள் பலர் பல நாடுகளில் இருந்துள்ளார்கள்” என்றார்.
( அவரது பேட்டியைக் குமுதத்தில் நான் எழுதினேன்)’