January 08, 2013

நான் - நீ- அவன் நமது (!) தாளிப்புவின் கொள்கை வாசகம் ( ???): "கொஞ்சம் கல கல: நிறைய வள வள" எனபதைப் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் பதிவுகளை பார்த்து உணர்ந்திருப்பீர்கள்! ஆனால் ” உங்கள் வாசகம் தவறு, கொஞ்சம் வள வள; நிறைய கல கல'என்பதுதான் சரி“ என்று இதுவரை யாரும்  சொல்லவில்லை,  இது பற்றி எனக்கு வருத்தமில்லை,  
யாரும் “உங்கள் பிளாக் வள வள இல்லை: எல்லாம் கர கர (ரம்பம்)” என்று சொல்லவில்லையே என்று சந்தோஷம்!

ஒரு வீட்டில்  பெண் (மாலா), நாட்டுப் பெண் (லீலா)இரண்டு பேரும் வாயாடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்  அந்தப் பெண்ணின் அம்மா என்ன சொல்வாள் தெரியுமா? ”மாலா  கல கலன்னு பேசுவாள்: லீலா  ஒரே வள வள!”
என்பாள். சில சமயம் நாட்டுப் பெண்ணின் அம்மாவைப் பற்றி குறிப்பிடும்போது, டயலாக் இப்படி இருக்கும்:  ”“மாலா கல கல, லீலா வள வள. அவளுடய அம்மா லொட லொட” என்பாள்.
ஒரே குணாதிசயத்தை இப்படி படிப்படியாக இறக்கி ( அல்லது ஏற்றி) விவரிப்பதற்கு ஆங்கிலத்தில் emotive conjugations என்பார்கள்.  இது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  கண்டு பிடித்த பதப் பிரயோகம் என்று  படித்தேன். அகராதியைப் பார்த்தும் சரியாக விளங்கவிள்லை.

 பி பி சியில் ஒரு பேட்டியின் போது ”Is there any difference between firmness and obstinacy?” என்று கேட்டாராம். ரஸ்ஸல்
I am firm.
You are obstinate. He is pigheaded என்று கூறி விளக்கம் அளித்தாராம்!

........சரி, என் ’வள வள’ இத்துடன் போதும்,. இனி ’கல கல’ emotive conjugations -க்குப்   போகலாம்.


நாமும் இந்தமாதிரி படிப்படியான வர்ணனைகளை எழுதிப் பார்க்கலாமே என்று யோசித்தேன்.. அதன் பலனை அனுபவியுங்கள்! ( சில நியுயார்க் டைம்ஸில் வந்தவை!)

* நான் ஆலோசனை சொல்வேன் ; நீ  உத்தரவு போடுவே; அவன் அதிகாரம் தூள் பறக்கும்!”

* நான் மனக் கோட்டை கட்டறவன்;  நீ அதிலேயே வாழறவன்; அவன் அதை வாடகைக்கு விடறவன்!”
* நான் விளக்கமாக சொல்வேன்; நீ  போரடிப்பே; அவன் ரம்பம்!”

* நான் சிக்கனமானவன்; நீ  கஞ்சன்: அவன் பிசுநாரி!”

 * என் கதையை எடிட் பண்ணிட்டாஙக; உன் கதையை வெட்டிட்டாங்க; அவன் கதையைக் கொத்து பரோட்டா பண்ணிட்டாங்க!

*நான் டம்பளரில் பாதி தண்ணீர் இருக்கிறது என்கிறேன்; நீ டம்பளரில் பாதி காலியாக  இருக்கிறது என்கிறாய்; அவன், டம்பளரின் அளவு இரண்டு மடங்குஅதிகம் என்கிறான்!”

*”நான் மான் வேகம்; நீ நொண்டி குதிரை; அவன் சோம்பேறிக் கழுதை!

* நான் செய்யறது தர்க்கம்; நீ செய்யறது குதர்க்கம்; அவன் செய்யறது விதண்டா வாதம்.

* நான் சேமிக்கிறேன்; நீ குவிக்கிறே; அவன் பதுக்கறான்!

* நான் சபாவில் பாடறேன்; நீ கோவிலில் கச்சேரி பண்றே; அவன் பாத்ரூமில் ஊளையிடறான்.

* என் பொண்ணு பூசின மாதிரி இருக்கா; மாட்டுப்பெண் குண்டு; அவள் அம்மா சரியான பப்ளிமாஸ்!

9 comments:

 1. You published it; I read it which I will use in my family/friends' circle to make the situation lighter and happier without quoting your name and blog. IDU YEPPADI IRUKKU!!!!!!

  ReplyDelete
 2. 'காஞ்சு'ன்னா தெரியும் ....பக்கத்து வீட்டு பொண்ணு ..கால்கேட் தெரியும் டூத் பேஸ்ட் . (ஒரு தடவை டூர் போன போது டூத் பேஸ்ட்டை மறந்து போய் வீட்ல வைச்சுட்டு திருப்புகழ் பாடி சமாளிச்சேன்

  திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும் இல்லையா ?அது வேற கதை)

  அதென்னடா காஞ்சுகேட் ன்னு இருக்கிற ஒன்றிரண்டு முடிகளைப் பிய்த்துக்

  கொண்ட போது தான் உங்க பதிவைப் பார்த்தேன் ....சூப்பர். பெரிய சந்தேகம் தீர்ந்தது ...

  உங்க பாணியில வரேன் ....

  அப்ப ப்ளான் போட்டவன் நான் ...EXECUTE பண்ணினது நீங்க ....

  மாட்டிண்டது அவன் .....

  நாம மூணு பேரும் ஏற்பாடு பண்ணின BANK ROBBERY ஐ சொன்னேன்

  தலைவரே !

  ReplyDelete
 3. பிரமாதம், சார். நான் ஒண்ணு எடுத்து விடறேன்:
  நான் தோற்றுவிட்டேன்; நீ மண்ணைக் கவ்வினே; அவன் வாங்கினான் மரண அடி!-மணா

  ReplyDelete
 4. //* என் பொண்ணு பூசின மாதிரி இருக்கா; மாட்டுப்பெண் குண்டு; அவள் அம்மா சரியான பப்ளிமாஸ்!//The best one! This is normal view point! My contribution:

  Boss ஏதாவது சொன்னால், அவர் சொல்றது சரின்னு தெரிஞ்சு நான் சரி சொல்லுவேன்; நீ பயந்துண்டு சரின்னு சொல்லுவே; அவன் எப்பவும் அவருக்கு ஆமாம் சாமி போடுவான்!

  (நான் சொன்னது சரின்னு நீங்க மனசுக்குள்ள சபாஷ் போடறது என் காதில் விழுகிறது!)

  -R. J.

  ReplyDelete
 5. என் பொண்ணு மாநிறம்; மாட்டுப்பெண் கருப்புல சேர்த்தி; அவள் அம்மா சரியா அட்டைகரி”-- மணா

  ReplyDelete
 6. Mine was a mistake,hers was a blunder,But his was a disaster

  ReplyDelete
 7. Mine was just a mistake,hers was a blunder But his was a diaster!

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!