January 25, 2013

லஞ்சப் பேயே, போ!

இரண்டு ஜார்ஜியாக்கள்!

சில வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகருக்குச் சென்றேன். அங்கு சுமார் 6 மாதம் தங்கி இருந்தேன், அட்லான் நகரை ‘செமினார் சிடி’ என்கிறார்கள். வருஷம் முழுதும் ஏதாவது மகாநாடு அங்கு நடந்து கொண்டிருக்குமாம். வருஷத்தில் 1500 மகாநாடுகளுக்கு மேல் நடக்கும் என்று கேள்விப்பட்டேன்!  (இது 1995 தகவல்,) CNN, COCA COLA  நிறுவனங்களின் தலைமை இடமும் அட்லாண்டா தான்,

நான் சென்ற சமயம் அட்லாண்டா நகரில் பல கட்டங்கள்  அசுர வேகத்தில் கட்டப்பட்டு வருவதை கவனித்தேன். அந்த ஆண்டு அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருந்ததால் பல ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் துவங்குவதற்கு  முன்பே நாங்கள் ஊர் திரும்பி விட்டோம்.
அதன் பிறகு சில ஆண்டுகள்  கழித்து அட்லாண்டாவிற்கு நியூ ஜெர்சியிலிருந்து காரில் போனேன். நகருக்குள் நுழையும்  நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட போர்டு இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்:  WE ARE PROUD OF OUR REST ROOMS!"  போர்டை ஒட்டிப் பூத்துக் குலுங்கும் அழகான நந்தவனமும்   புல்தரைகளும். வசதியான பாத்ரூம் அறைகள் கொண்ட அழகான கட்டடமும் இருந்ததது.. சுத்தம் என்றால் சுத்தம்தான். ரம்மியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அங்கு போனால் தெரிந்து விடும், அத்தனை  சிறப்பாக இருந்தது. நிச்சயமாக ஜார்ஜியா பெருமை அடித்துக் கொள்ளலாம்!
====

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)

ற்றொரு ஜார்ஜியா  நாடு  மார்தட்டிக்கொண்டு 2011-ல் பல  பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தைவெளியிட்டிருந்தது.  துருக்கிக்கு அருகில் உள்ள  குட்டி நாடு ஜார்ஜியா.   அந்த விளம்பரத்தை  இங்கு தந்துள்ளேன்.  GEORGIA  என்ற தலைப்பு டிசைன் செய்யப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது, ‘ I '  எழுத்து 1 மாதிரியும்  சிவப்பு கலரிலும் இருந்தது.'
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் உலக நாடுகளில் லஞ்சம் எந்தெந்த நாட்டில எந்த அளவு ஏறி உள்ளது அல்லது இறங்கி உள்ளது  என்பதை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிட்டிருந்தது. அதில் ஜார்ஜியாவில் அரசு சேவை தொடர்பாக 3சதவிகிதம் பேர் தான் லஞ்சம் கொடுத்தார்கள் என்பதைக்   கண்டறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தது! 
இது முதல் தர சாதனை. (FIRST CLASS FIRST என்பார்கள்.) எண்ணில் 1, எழுத்தில்  A. அதனால்  GEORGIA வை GEORG 1A என்று போட்டிருந்தார்கள். ( விளம்பரத்தைப் பெரிதாக்கிப் படியுங்கள்!) 
 பபின்குறிப்பு 1: இந்தியாவும் இப்படி   ஒரு விளம்பரம் போட முடியும்.   INDIA வையும்  IND 1 A  என்று எழுதலாமே!

 பின்குறிப்பு 2: அப்படிப் பார்த்தால் இந்தியாவை விட சென்னைக்கு அதிக வசதி இருக்கிறது.  CHENNAI  யில்  A1  ( ஏ-ஒன்!)அப்படியே வருகிறதே!

(யாரங்கே பெருமூச்சு விடுவது?)
 *
Georgia is a sovereign state in the Caucasus region of Eurasia. Located at the crossroads of Western Asia and Eastern Europe, it is bounded to the west by the Black Sea, to the north by Russia, to the south by Turkey and Armenia, and to the southeast by Azerbaijan.

11 comments:

 1. அது நான்தானு்ங்கோ...! ஏக்கப் பெருமூச்சு!

  ReplyDelete
 2. ஹூம்.....

  அது நான் தானுங்கோ....'லஞ்சம் வாங்க மாட்டேன்' வூட்ல நான் வீராப்பா சொன்னப்ப பூரி கட்டையால தலையில ஒரு போடு போட்டாங்க ..

  அந்த வீக்க பெருமூச்சு தானுங்கோ இது .....ஹூம்ம்ம்ம்ம்ம் ...!!!!

  ReplyDelete
 3. ஏக்கப் பெருமூச்சு.... தில்லியிலும் :(

  ReplyDelete
 4. We can only sigh! With our population and with our corrupt officials and ministers, no fund will be spent fully on the project for which it was allocated. What we need is a honest person at the top with a single aim of taking India to real high. - R. J.

  ReplyDelete
 5. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  நம் நாட்டிலும் இப்படி பெருமையாக சொல்லிக் கொள்ளும் காலம் வர வேண்டும்.

  மறைமுகமாக லஞ்சம் வாங்குவது போய், இப்ப அதுக்கும் ஃபிக்ஸட் ரேட் வச்சு, வாங்கறாங்க.

  ஒரு சின்ன வேண்டுகோள் - பதிவின் ஆரம்பப் பகுதியைப் படிக்க முடிகிறது. பதிவின் கடைசிப் பகுதியின் எழுத்துரு - சரியாகப் படிக்க முடிய வில்லை.

  என்னோட சிஸ்டத்தில் எதுவும் ப்ரச்னையா, எப்படி சரி செய்து கொள்ள வேண்டும்?

  அன்புடன்

  திருமதி சுப்ரமண்யம்

  ReplyDelete
 6. ஓ அங்கியும் 3 சதவீதம் லஞ்சம் இருக்கா..

  (இப்படித்தான் மனசை தேத்திக்கணும்.. அத்தை வுட்டுபுட்டு.. மூச்சை வலிக்கிறது.. கசுமாலம்..)

  ReplyDelete
 7. Dear Kadugu Sir, I think you have got confused with Georgia (the country near Turkey and Russia) and the state of Gerogia in US. The advt shown is by the country Georgia.

  Venkat

  ReplyDelete
 8. எங்கெங்கும் ஏக்கப்பெருமூச்சு ...

  ReplyDelete
 9. வெங்கட் அவர்களுக்கு,
  நீங்கள் சொல்வதுதான் சரி. மிக்க நன்றி
  பதிவில் திருத்தி விடுகிறேன்.
  --கடுகு

  ReplyDelete
 10. We are 'blind' followers of Srimaan Kadugu. But Sri Venkat has kept his eyes open and read the web ID in the advt and pointed out the error very politely and Srimaan Kadugu graciously accepted the error and rectified it. Kudos to both of them. - R. J.

  ReplyDelete


 11. India also has 1 in its name.Actually it is the first letter,No marks for guessing correctly. Bharath is not subject to any snide interpretations

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!