அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
-கடுகு
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.
-கடுகு
பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் செய்த ஒப்பற்ற பணி: பிரம்மாண்டமான ஆங்கில அகராதியை கிட்டத்தட்ட தனி நபராகத் தயாரித்தது தான். அதுவும் சுமார் எட்டு வருஷ கடின உழைப்பு. 1755'ம் ஆண்டு பிரசுரமானது. அதற்கு முன்பு ஒரு சில அகராதிகள் வந்திருந்தாலும் இத்தனை சிறப்பாக அவை இல்லை. அதனாலோ என்னவோ அடுத்த 150 வருஷத்திற்கு (ஆம், அடுத்த 150 வருஷத்திற்கு) வேறு ஆங்கில அகராதிகள் எதுவும் பிரசுரமாகவில்லை.)
எனக்குப் பிடித்த பத்திரிகைகளில் ஒன்று ‘ நியூ ஸ்டேட்ஸ்மென்’ வார இதழ். அதில் வாரா வாரம் ஒரு போட்டி வரும். பரிசுகள் உண்டு. போட்டி முடிவுகளும் தொடர்ச்சியாக வரும். சுவையான போட்டிகள். பல போட்டிகளை அப்படியே என் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வேன்.
யார் யாரோ போட்டி இட்டார்கள். கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடந்தன. ‘இதை எப்படி செலவு செய்தீர்கள்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செய்யப்பட்டு இருக்கிறதா? MANDATE இருக்கிறதா? EX-POST FACTO சாங்கஷன் கொடுத்தீர்களா, ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு 15 நாள் நோட்டிஸ் கொடுத்திருக்கவேண்டுமே, 13 நாள் தானே கொடுத்திருக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள். ( அன்று வீட்டுக்குப் போனதும் அகராதியை எடுத்து, பல ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்!) ஒரு விஷயம்: ஊழல் என்ற வார்த்தை வரவில்லை அதிருப்தியை தெரிவித்தார்களே தவிர ’கசப்பு அர்ச்சனை’ எதுவுமில்லை. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் ’அரசியல் வைரஸ்’ அவ்வளவாக பரவாத காலகட்டம் அது! மீட்டிங்கில் யார் உரக்கப் பேசினார்களோ அவர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ( அடுத்த ஜெனரல் பாடி மீட்டிங்கில் அவர்களை நாம் காய்ச்சலாம் என்ற ஆர்வத்தால் பலர் ஓட்டு போட்டிருப்பார்களோ என்னவோ!)