"ஆமாம்... கல்யாணம் ஆன அடுத்த வாரமே. ஹனிமூனுக்கு சோளிங்கபுரம் அழைச்சுண்டு போனவராச்சே நீங்க... உங்ககிட்ட போய் கேட்டேனே...'' என்று கமலா மூக்கால் அழுது கொண்டே சொன்னாள்.
"இல்லை... கமலா...'' என்று நான் ஆரம்பித்தேன் சமாதானப்படுத்தும் குரலில்.
"இல்லை கமலாவுமாச்சு... தொல்லை கமலாவுமாச்சு... இல்லை... இல்லை... இந்த பாட்டைத்தான் நான் எது கேட்டாலும் பாடுவீங்க... ஒவ்வொருத்தர் மாதிரி தீபாவளிக்குப் பட்டுப் புடவை கேட்கிறேனா...? புதுசா அவங்க அவங்க... போட்டு மினுக்கறாங்களே காப்பிக் கொட்டை செயின், அது கேட்கிறேனா...? உம்... நானும் கேட்கக் கூடாது... கேட்கக் கூடாது என்று தான் வாயை மூடிண்டு இருக்கேன். புத்தி பிசகிப் போய்க் கேட்டுட்டேன்... ஸ்வாமிக்குக் கோபம் வந்துடுத்து... வேறு எது இல்லாவிட்டாலும் கோபம் சட்னு வந்துடறது. பரம்பரையிலே ஊறியிருக்கிற குணம்...'' என்று கமலா எங்கள் பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்!
"கமலா... ஒரே பயங்கரவாதம் தலைவிரித்தாடறது... இப்பப் போய்...''
"அலை ஓய்ஞ்சு சமுத்திர ஸ்நானம் செய்யற கதை தான்... ஏதோ ஒரு சாக்கு'' என்றாள் கமலா. முகத்தை அஷ்டகோணலாக்கி உதட்டைப் பிதுக்கினாள். லேசாகக் கண்கலங்கினாள்.
விஷயம் இதுதான். காஷ்மீருக்கு ஒரு டூர் போகச் சிலர் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதில் போக வேண்டும் என்பது கமலாவின் ஆசை.
"இல்லை... கமலா...'' என்று நான் ஆரம்பித்தேன் சமாதானப்படுத்தும் குரலில்."இல்லை கமலாவுமாச்சு... தொல்லை கமலாவுமாச்சு... இல்லை... இல்லை... இந்த பாட்டைத்தான் நான் எது கேட்டாலும் பாடுவீங்க... ஒவ்வொருத்தர் மாதிரி தீபாவளிக்குப் பட்டுப் புடவை கேட்கிறேனா...? புதுசா அவங்க அவங்க... போட்டு மினுக்கறாங்களே காப்பிக் கொட்டை செயின், அது கேட்கிறேனா...? உம்... நானும் கேட்கக் கூடாது... கேட்கக் கூடாது என்று தான் வாயை மூடிண்டு இருக்கேன். புத்தி பிசகிப் போய்க் கேட்டுட்டேன்... ஸ்வாமிக்குக் கோபம் வந்துடுத்து... வேறு எது இல்லாவிட்டாலும் கோபம் சட்னு வந்துடறது. பரம்பரையிலே ஊறியிருக்கிற குணம்...'' என்று கமலா எங்கள் பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்!