ரஜினி படியளக்கிறார்!
எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என் நண்பரான நிருபர் நச்சு திடீரென்று வந்து, ‘‘இந்தாப்பா. நான் உன்னிடம் வாங்கின கடன் 500 ரூபாய்’’ என்று சொல்லி ஒரு பளபள நோட்டைக் கொடுத்தான்.
‘‘பணமா? உனக்கு நான் எப்ப கொடுத்தேன்? மறந்தே விட்டது’’ என்றேன்.
‘‘நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மூன்று வருஷத்துக்கு முன்னே வாங்கினது. இடையில் நம்ம நிருபர் வேலையில் ஒண்ணும் ‘ஓஹோ’ என்று பணம் பார்க்க முடியவில்லை. இப்பதான் தொழில் சூடுபிடித்து இருக்கிறது.’’
‘‘எப்படியப்பா?’’
‘‘எல்லாம் ரஜினிதான் படியளக்கிறார். சூப்பர் ஸ்டார்தான்...’’
‘‘புரியலையே...’’
‘‘இப்போ ‘சிவாஜி’ பட வேலையில் இறங்கி இருக்கிறார். இல்லையா? பத்திரிகைகளுக்கு எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள் தந்து நாலு காசு பாக்கறேன்...’’
‘‘அப்பாடி! பெரிய ஆளெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியா? வெரிகுட்!’’
‘‘குட்டும் இல்லை, மட்டும் இல்லை... இதோபார், சில எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள்...’’ என்று சொல்லி சில கட்டுரைகளைக் கொடுத்தான். ‘‘படிச்சுப் பாரு...’’ என்றான். படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் தந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
சிவாஜி படத்தில் சிவாஜியாக ரஜினி
சிவாஜியாக ரஜினி நடிக்கும் ஒரு குட்டி மேடை நாடகத்தை சிவாஜி படத்தில் இணைக்க ரகசியத் திட்டம் உள்ளதாம். இதற்கு சிவாஜியின் வம்சத்தினரிடம் அனுமதி பெற மகாராஷ்டிராவுக்கு ராமு, சோமு, குப்பு என்று மூன்று பேர் கொண்ட ஒரு பெரும்படையையே(!) அனுப்பியிருக்கிறார்கள். சிவாஜியின் வம்சத்தினர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால் அங்கும் ஒருத்தரை அனுப்பக் கூடும்.
ரஜினியின் குழந்தையாக நடிக்க ஒரு அழகான சிறுமியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பில் படிக்கும் மனஸ்வினியை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்த நம் நிருபரிடம் அவள் எதுவும் கூறமாட்டேன் என்று கூறிவிட்டாள். கதையைப் பற்றியோ அவளுடைய கதாபாத்திரத்தைப் பற்றியோ கூற மறுத்துவிட்டாள். கடைசியில் ஒன்று மட்டும் சொன்னாள். ‘‘நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினி படங்களை என் ஸ்கூல் நோட் புத்தகங்களில் ஒட்டி டீச்சரிடம் திட்டுகூட வாங்கி இருக்கிறேன். 20, 25 வருஷமாக ரஜினியின் பயங்கர விசிறி. இப்போது அவருடன் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்த வரம்’’ என்றார். ‘‘அதிருக்கட்டும்... உங்கள் வயது என்ன?’’ என்று நம் நிருபர் கேட்டதற்கு, ‘‘பெண்களின் வயதைக் கேட்பது அநாகரீகம்’’ என்று ஒரு போடு போட்டாள்.
பஞ்ச் டயலாக்கிற்கு பஞ்சமிருக்காது
‘சிவாஜி ’ படத்தில் பஞ்ச் டயலாக்கிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தேர்தல் சமயத்தில் வருவதால் அரசியல் பஞ்ச் இல்லாமல் பொதுவான பஞ்ச் வசனங்களைத் தயார் செய்ய ஒரு கூட்டமே ரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து லேசாகக் கசிந்த தகவலை நம் நிருபர் அவிழ்த்து விடுகிறார் இங்கே.
* எவ்வளவ உயரமான ஆசாமியாக இருந்தாலும் கால் தரையைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்.
* தபால் தலையை ஈரம் பண்ணுவதற்குக் குற்றாலம் போக வேண்டியதில்லை.
* எவ்வளவு பெரிய முக்கோணமாக இருந்தாலும் அதற்கு மூன்று பக்கங்களுகு்கு மேல் இருக்காது.
* உங்கள் பென்சிலில் ஊக்கு இல்லையென்றால் உங்களுக்கு ரப்பரே தேவையில்லை.
* சுனாமியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பூகம்பத்திலிருந்து தப்பிவிட முடியுமா?
டபுள் ரோலில் ரஜினி
‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் தந்தை அவர் கனவில் வந்து அறிவுரைகள் கூறுவதைப் போல் ஒரே ஒரு சீன் வருகிறதாம். அப்பா ரோலிலும் ரஜினியே நடிக்க யோசித்து வருகிறாராம். எந்த மாதிரி கெட்டப்பில் வருவது என்பதற்காக கம்ப்யூட்டர் மூலம் சுமார் 3000 கெட்டப்புகளைப் போட்டுப் பார்த்தும் திருப்தி தரவில்லையாம். எம்.கே.தியாகராஜ பாகவதர் கெட்டப்பில் வரலாம் என்று தற்காலிகமாக மடிவெடுத்திருக்கிறார்கள் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசனம் எழுத ஹாலிவுட் பிரபலம்
‘சிவாஜி’ படத்திற்கு வசனம் எழுத ஹாலிவுட்டிலிருந்து பால் டன்னிங்கை அணுகியிருக்கிறார்களாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றவர் அவர். எழுத ஒப்புக் கொண்டுள்ளார். ‘முப்பது நாட்களில் தமிழ்’ புத்தகத்தை இப்போது கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கிறார். திரையில் அவர் பெயரை புலவர் பால் டன்னிங் என்று போடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
படிக்கப் படிக்க வியப்ப தாளவில்லை. ரீல் என்றால் இதுதான் ரீல்!
‘‘நச்சு! நீ பெரிய ஆள்’’ என்றேன்.
‘‘இவ்வளவு நாள் கழிச்சுத்தான் உனக்குத் தெரிஞ்சிருக்கு!’’ என்று சொல்லி, என் கையிலிருந்து காகிதங்களைப் பறித்துக் கொண்டு பறநதான்.
(இதில் ’சிவாஜி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘கோச்சடையான்’ என்று போட்டாலும் தப்பில்லை!)
ஹா...ஹா... நிருபர் வேலை பாக்கறது ரொம்பக் கஷ்டம்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். எப்படி நிருபர் வேலை பாக்கணும்னு இப்பப் புரிஞ்சு போச்!
ReplyDeleteநல்ல எள்ளல்!
ReplyDeletevery good comedy sir
ReplyDeletenamma aalunga ithaithan veettilirunthapadiye,aalyaththila ippadi pesikittaanga,thottaththila ippadi nadanthathu enru alli viduraanga!appuram eppadi vaaram irumurai ottuvthu!!!thanks to kaduku!!!thothsu-vai kettathaa sollavum.
ReplyDelete3 வருஷம் கழித்து 500 ரூபாயை திருப்பி தருபவர், அடுத்த வாரம் 5000 ரூபாய் கடனுக்கு அடி போடுகிறார் என்பது தெரியவில்லையா!
ReplyDelete20, 25 வருஷ ரஜினி ரசிகையின் வயது 16க்கு மேல் இருக்க வாய்ப்பில்லை!
ரஜினி பன்ச்களில் வேகம் இல்லை! சாரி!
-ஜெ.
இதில் ’சிவாஜி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘கோச்சடையான்’ என்று போட்டாலும் தப்பில்லை!
ReplyDeleteஆ ஹா ஹா .... அது!
The last lines are fantastic sir!
ReplyDeleteதிரு கணேஷ் அவர்களின் பதிவின் மூலம் உங்களுக்கு எண்பதாவது ஆண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது என அறிந்தேன்.என் நமஸ்காரங்களை ஏற்று கொள்ளவும்..
ReplyDeleteஆசிவேண்டும்,
Ganpat
மீண்டும் உங்கள் சுவையான எழுத்தைப் படிப்பதில் சந்தோஷம் சார்; கணேஷ் அவர்களின் வலைப்பதிவு வழியாக இங்கே வந்தேன். தங்களது சதாபிஷேக விழாவில் நானும் நமஸ்கரித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதங்களது எண்பதாவது ஆண்டு நிறைவு விழா பற்றி அறிந்தேன். பணிவான வணக்கங்கள் சார்.
ReplyDeleteசதாபிஷேகம் கண்ட தம்பதிகளின் ஆசீர்வாதம் கோரி நமஸ்கரிக்கிறோம் - நானும் என் மனைவியும். இன்னும் பலப் பல ஆண்டுகள் நீங்கள் இருவரும் சகல சௌக்கியத்தோடும், நல்ல உடல் நிலையோடும், தொடர்ந்த நகைச்சுவை உணர்வோடும் இருக்க அந்த எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறேன். அடியேன் ராமானுஜ தாசன், ஜெகன்னாதன் (& ரஞ்ஜினி), கிழக்குத் தாம்பரம்.
ReplyDeleteசார் வணக்கம். தங்களின் சதாபிஷேகத்துக்கு குவிந்திருக்கும் ஏகப்பட்ட வாழ்த்துக்களில் என்னுடையதையும் சேர்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஅமெரிக்க பயணம், சதாபிஷேக விழா என்கிற பரபரப்புக்கள் எல்லாம் ஓய்ந்து மறுபடியும் சுறுசுறுவென்றும் சுவாரஸ்யமாகவும் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் போலும். ஜிபிஓ அனுபவங்களை மிகவும் ஆர்வத்துடனும் சுவாரஸ்யமாகவும் படித்தேன்.(இதனை அந்தப் பதிவில்தான் சொல்லவேண்டுமோ? இணைய சட்டதிட்டம் எதுவும் தடையில்லைதானே?).......இன்னமும் நிறைய அனுபவங்களை எழுதுங்கள் சார்.
மிக்க நன்றி,,அமுதவன்,
ReplyDelete-கடுகு
<<< அடியேன் ராமானுஜ தாசன், ஜெகன்னாதன் (& ரஞ்ஜினி), கிழக்குத் தாம்பரம்.>>>
ReplyDeleteஎஙகள் ஆசீர்வாதங்கள். உங்கள் த்பால் முகவரியைத் தெரிவியுங்கள்.--கடுகு
kg gouthamanFeb 21, 2012 10:58 PM
ReplyDeleteஇதில் ’சிவாஜி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘கோச்சடையான்’ என்று போட்டாலும் தப்பில்லை!>>
நன்றி.. உங்கள் த்பால் முகவரியைத் தெரிவியுங்கள்.--கடுகு
Sir, Nice Post...
ReplyDeletePlease accept my namaskarams as well on your sadhabhishegam - Sundar
Thank you for your blessings. Our postal address:
ReplyDeleteR. Jagannathan & Ranjini,
Plot 92 / Door no. 18, Thiruppaanar street,
East Tambaram,
Chennai - 600059.
(Incidentally, Smt. Vaidehi Sampath is my mother's cousin, my 'Chithi' and thus Shri P.S.Sampath is my Chithappa.)
-R. J.
ஸ்ரீமான் & ஸ்ரீமதி கடுகு அவர்களுக்கு எங்கள் நன்றி கலந்த நமஸ்காரங்கள். இன்று நீங்கள் அனுப்பிய, உங்கள் ஆசிகளுடன் கூடிய ‘கமலாவும், நானும்’ புஸ்தகம் (சுரேஷ் சம்பத் மூலமாக) கிடைக்கப் பெற்றோம். நேரில் அறிமுகம் இல்லாதவனுக்கும் ஆசி அனுப்பிய உங்கள் அன்புக்கு வணக்கம். - ஜெகன்னாதன் & ரஞ்ஜினி.
ReplyDeleteThanks to Balhanuman, I read the articles by Charukesi in the Hindu and also by Click Ravi in Sri Bhakkiyam Ramaswamy's site. Very happy to note that millions of people will now know about your achieving the mile stone age and they all count on your blessings whether they contact you or not. - R. J.
ReplyDelete