June 10, 2019

கிரேசி மறைந்தார்



அருமை நண்பர்   கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான வைரஸு’ம் இல்லாத 
நகைச்சுவை அவர் ரத்தத்தில் 
அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல்.  இவர் தமிழ்நாட்டின்  மற்றொரு கலைவாணர்! - கடுகு

##################################



7 comments:

  1. இறை நிழலில் அமைதி எய்துவாராக...

    ReplyDelete
  2. மனதை பாதித்த, மிக மிக வருத்தமான செய்தி. தமிழ் தெரிந்த அத்தனை பேர்களின் இதயங்களையும் வென்றவர். கலங்க வைத்துவிட்டார்.

    ReplyDelete
  3. செய்தி கேட்டதிலிருந்து எனக்கும் மிகவும் வருத்தம். படத்தில் பார்க்கும்போது இளைஞராகத் தெரிவார்.

    இதற்கு முன் 'சீனு' மறைந்ததும் எனக்கு வருத்தம்தான்.

    கிரேசியின் நாடகங்களை நான் வாரம் மூன்று முறையாவது படுப்பதற்குமுன் கேட்பேன். பசங்க சின்ன வயசா இருக்கும்போது இரவு நாங்கள் படுத்தபிறகு நாடகங்களின் எம்.பி.3யை ஓடவிடுவேன். கிரேசி, எஸ்விசேகர் நாடகங்களின் பல வசனங்கள் பசங்களுக்கு மனப்பாடம்....

    சமீபத்தில்கூட அவரது புத்தகம் ஒன்றைப் படித்தேன்.

    அவரின் ஆன்மா சாந்தி அடைவதாக. முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் அஞ்சலி.

    ReplyDelete
  4. உண்மை. மனம் மிக வேதனைப் படுகிறது. களங்கம் இல்லாத சிரிப்பை வழங்கியவர் இன்னும் கொஞ்சம் வருடங்கள் இருந்திருக்கலாம்.
    இனி எங்கே காண்போம் இந்த கபடில்லாத சிரிப்பை.

    ReplyDelete
  5. அனைவர் மனதையும் கவர்ந்தவர். தமிழே எழுதப்படிக்கத் தெரியாத என் குழந்தைகள் இருவருக்கும் பேச்சுத்தமிழில் வந்த இவருடைய நாடகங்கள் மிகவும் பிடிக்கும். திரும்பத் திரும்ப ஆடியோ காசெட்டுகளையும், வீடியோ காசெட்டுக்களையும் ஓடவிட்டு ரசிப்பார்கள். தேவன் அவர்களின் நகைச்சுவைக்குப் பின்னர் அவர்கள் ரசித்த நகைச்சுவை கிரேஸியோட நகைச்சுவை தான்! அதிலும் இயல்பாக வீட்டில் பேசும் பேச்சு வார்த்தையாக அமைந்திருப்பதினால் அவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. இனி? என்றென்றும் நீங்காத ஒரு இடம் கிரேஸிக்கு உண்டு! அந்த இடம் இனி வெற்றிடம் தான்.

    ReplyDelete
  6. மனதில் நீங்கா இடம் பெற்ற நல்ல மனிதர்....

    ReplyDelete
  7. அடுத்த இடுகை ஏன் இவ்வளவு நாளாகிறது? பிஸியா இருக்கீங்களா?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!