தெற்குக் கோடி!அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம்
உள்ள இடம் கேப் கெனவரல். புளோரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்டர். ஒரு சமயம்அங்கு சென்று பார்த்தேன். அடுத்த வாரம் விண்ணில் ஏற்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில் இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. மனிதனின் அபார சாதன களின் உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில். உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும்
வசதிகளுக்கும்ம் வழிவகுத்து உள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும்
கூட !
விண்வெளி பயண முயற்சிகளில் உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அங்கு அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த, பிரம்மாண்டமான சுமார் 20 அடிக்கு 30 அடி அளவு, கருப்பு கிரானைட் பலகை பதிக்கப்பட்டு, வீரர்களின் பெயர்களை பாறையில் முழுவதுமாக செதுக்கி எடுத்து விட்டு, பாறையின் பின்னால் இருந்து இயற்கையான சூரிய வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள். பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில்
மின்னுகின்றன. எப்போதும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின்
பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அவை சூரியனை நோக்கி மெல்லத் திரும்பும் வகையில் மோட்டாரைப்
பொருத்தி இருக்கிறார்கள்.
இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை கிரானைட்டில் பொளிந்து வைத்து இருக்கிறார்கள். அதைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.”
”புதிய எல்லைகளை வெற்றிகொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் இம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு .விண்வெளியை வெற்றிகரமாக வெற்றி கொள்வதற்காக உயிருக்கு
ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று நம்பி, தங்கள் உயிரையே தியாகம் செய்த அமெரிக்க
வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்த நினைவுச்சின்னம் மே 9, 1991 அன்று
அர்ப்பணிக்கப்படுகிறது.”
இந்த வாசகத்தை படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய
இன்டர்நெட், பிராட்பேண்ட், ஸ்மார்ட்போன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை
அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்களின் உயிர்த் தியாகம் நமக்கு நினைத்துக்கூடப் பார்க்காத பல வசதிகளுக்குப் பாதை அமைத்துள்ளது! அவர்களின் தியாகத்தை என்றும் மனதிலிருத்தி வைப்போம்! அவர்களுக்குக் கோடி நன்றிகள் உரித்தாகும். வடக்கு கோடி ஃபோர்டு கார் என்றதும் நினைவுக்கு வரும் நகரம் டெட்ராய்ட். அங்கு ஃபோர்ட் மியூசியம்
உள்ளது. அபாரமான மியூசியம். அதை முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும் என்றால் நம்ப மாட்டீர்கள். அங்குள்ள கார்கள், ரெயில் என்ஜின்கள் ,குட்டி விமானங்கள் போன்ற பல முக்கிய பொருட்களை விவரிக்க தனிக்
கட்டுரையே தேவைப்படும். மியூசியத்திற்குள் நுழையும்போது,கூடத்தில் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பெரிய மண்வெட்டி, சிமென்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது. மியூசியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண் வெட்டி அது! ஈர சிமென்ட்டில், தனது
ஆள்காட்டி விரலால் அவர்பெரிதாகk கையெழுத் திட்டிருக்கிறார். அப்படி கையெழுத்திட்டவர்: தாமஸ் ஆல்வா எடிசன்!
அvar ஹென்றி ஃபோர்டின் மிக நெருங்கிய
நண்பர். எலக்ட்ரிக் பல்பு உள்பட ஆயிரத்து நூறு கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன் அந்த
மேடை இருந்த இடத்தில் அvar நின்று, கையெழுத்திட்டிருக்கிறார். அந்த இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதை நினைத்தபோது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது. எடிசன் தன்னுடைய ஆராய்ச்சிகளைச் செய்த இடம் நியூ ஜெர்ஸியில் உள்ள ’தெற்கு ஆரஞ்சு’ என்ற பகுதி. அது நியூஜெர்சியில் உள்ள ஊர். அங்கு உள்ள புத்தக சந்தைக்கு
நான் அடிக்கடி போவேன். அப்போதெல்லாம் , அவரது கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும் நினைவு கொள்வேன். பின் குறிப்பு
தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றிய ஒருநெகிழ்ச்சியூட்டும் தகவல்:
எடிசன் சிறுவனாக இருந்தபோது, ஏழ்மை காரணமாக் ரயில்களில் பேப்பர் விற்பது உண்டு. அப்படி ஒரு சமயம் ரயிலில் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் எடிசனிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை. ஈவு இரக்கம் இல்லாத aந்த அந்த பரிசோதகர் ‘சின்னப்பையன் பிழைப்புக்காக ஏதோ செய்கிறான்’ என்று ஒரு கணம் கூட நினைக்காமல், கோபத்தை எல்லாம் திரட்டி எடிசனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார். அந்த அறை பாதி கன்னத்திலும், பாதி எடிசனின் காதிலும் பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? எடிசன் முழுச் செவிடாகி விட்டார். இவர்தான் தொலபேசியையும் கிராமபோனை யும் கண்டுபிடித்துப் புகழ் பெற்றார். காது கேட்காதவர் செய்த சாதனை இது! இதை நாம் மறக்கக் கூடாது.