........... ”ஆறு ஃபோல்டர்களைத் தர இன்னும் 2,3 நாளாகும்" என்று அச்சகத்து உரிமையாளர் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அடைந்தோம்
புற்று நோய் விளக்கப் பிரசுரங்கள், பொருட்காட்சியில் விநியோகிக்க முடியும் என்று தோன்றவில்லை. மறுதினம்....
தொடர்ந்து படியுங்கள்.....
என்னுடன் பேசியபிறகு அவருக்கு என்ன தோன்றியதோ, ஃபோல்டர் வேலையை உடனே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், மறு தினம் அவரிடமிருந்து போன் வந்தது. பேச்சில் குழைவும் சாந்தமும் வினயமும் இருந்தன், ”சார் உங்கள் ஃபோல்டர்கள் எல்லாம் ரெடியாகிவிட்டது, எடுத்துக் கொண்டு போகலாம்” என்றார்.தொடர்ந்து படியுங்கள்.....
“சார், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு, தகவலைத் தொண்டு நிறுவன நண்பர்கள் சிலருக்குப் போனில் தெரிவித்துவிட்டு, அவருடய அச்சகத்திற்குப் போனேன்..
“வாங்க வாங்க”
என்று சொன்னார். அவரிடம் “என்ன சார் இவ்வளவு எக்ஸ்பிரஸ் வேகத்தில் அச்சடித்துவிட்டீர்கள். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்” என்றேன்.
அச்சடித்த சாம்பிள்ககளைக் கொடுத்து “எப்படி இருக்கு பாருங்க” என்றார்.
”பிரமாதமாக இருக்கு,. சந்தன கலர் பேப்பரில் அச்சடித்திருக்கிறீர்கள். வெரிகுட்” என்றேன். தொடர்ந்து “பில் எவ்வளவு? பணம் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.
“என்ன சார்”..என்று குழறினேன். ஒரே மனிதர் நாளில் இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சரியப்பட்டேன்..
”நிஜமாகத்தான் சொல்கிறேன். இது முழுவதும் என் நன்கொடை. நீங்கள் நேற்று வந்து போன போன பிறகு உங்கள் ஃபோல்டர் ஆர்ட் வொர்க்கை எடுத்து பார்த்தேன் அதில் எழுதியிருந்ததைப் படித்தேன். சிறப்பான தகவல்கள் இருந்தன. கடைசிப் பக்கத்தில் போட்டிருந்த குறிப்பு என் கவனத்தைக் கவர்ந்தது அந்தக் குறிப்பில், “இந்தப் பிரசுரம், உங்களைப் போன்றவர்கள் தந்த நன்கொடையால் பிரசுரிக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவசம்” என்று போட்டிருந்ததைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். இப்போது. ஒரு விஷயத்தை சொல்கிறேன். எளிதாக, யாவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் நிறைய குறிப்புகளையும் யோசனைகளையும் எழுதியிருக்கிறீர்கள். மிக மிக உபயோகமான தகவல்கள். இதைப் படித்த ஒருவராவது புற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் என்னைவிட அதிக சந்தோஷம் அடைபவர் யாரும் இருக்க முடியாது. காரணம், என் அப்பா புற்று நோய்வாய்ப்பட்டு காலமானார்.” என்று அவர் சொன்னபோது அவருடைய கண்ணீரிலிருந்து வருகிற நீர் கன்னத்தில் வழிந்து ஓடியது! என் கண்ணில் நீர் கசிந்தது.
ஓவியங்கள் ஏலம்
ஒரு கணிசமான தொகையைச் சேமித்து,, அதை வங்கியில் நீண்டகால டெபாசிட்டாகப் போட்டு, அதில் வரும் வட்டியை அன்றாட செலவுகளுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவர் யோசனை கூறினார்..
பல பிரபல ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை நன்கொடையாகப் பெற்று அவற்றை, ஏதாவது ஒரு பொது இடத்தில் வைத்து ஏலம் விடலாம் என்று ஒருவர் கூறினார். அவர் இதில் சற்று அனுபவம் உடையவராக இருந்தால்,
இதில் உள்ள நெளிவு சுளிவுகளை யெல்லாம் விளக்கினார்.
பெயிண்டிங்குகள் கேட்டு பல பிரபல ஓவியர்களுக்குக் கடிதம் எழுதினோம்.. பலர் ஓவியங்களைத் தர முன் வந்தார்கள். 50-60 ஓவியங்கள் கிடைத்தன.
சரி ஏலத்தை ஏதாவது ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் வைத்தால், செல்வந்தர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள வருவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் பிரபல ஹோட்டல்களில் ஒன்றான மவுரியா ஷெராட்டனில் வைத்துக் கொள்ளலாம் என்று, திட்டமிட்டோம். ஹோட்டல் நிர்வாகத்தை அணுகினோம். அவர்கள் எல்லா வசதிகளையும் செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால் கட்டணம் ஐம்பதாயிரம் ஆகும் என்றும் சொன்னார்கள்.
”இது தொண்டு நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி மற்றும் தகவல் மையம் அமைக்கமுயன்று கொண்டிருக்கிறோம். ஏதாவது கட்டண சலுகை தர முடியுமா?” என்று கேட்டோம்
மானேஜர் நட்புணர்வுடன் சொன்னார். “உங்களுக்கு உதவ நான் தயார் ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கிறது. எங்கள் ஹோட்டலை நடத்துவது பிரபல புகையிலைக் கம்பெனி. உங்கள் அமைப்பு சிகரெட், புகையிலை, சு ருட்டு ஆகியவைகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்வது. உங்களை ஊக்கப்படுத்துவது, தொழில் முறையில் எங்கள் பிழைப்புக்கு நாங்களே எதிர் நடவடிக்கை எடுப்பது போல் ஆகிவிடும். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ”Cigarette does
not cause Cancer” என்று சொல்லி விடுங்கள். போதும்… ஹோட்டலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம் உங்கள் நிகழ்ச்சிக்கு”
என்று சிரித்தபடியே சொன்னார்.
அவர் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் “சரி சார் உங்களை வற்புறுத்தவில்லை” என்று கூறி விட்டோம்.
ஓவியங்கள் ஏலம் மிக விமரிசையாக நடந்தது. சுமாரான விற்பனையும் நடந்தது நிகழ்ச்சி முடிந்த பிறகு விற்காத ஓவியங்கள் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு, ”நாளை காலை வந்து ஹோட்டல் கட்டணத்தை கொடுத்துவிட்டு, ஓவியங்களை எடுத்துப் போகிறோம்”
என்று சொன்னோம்.
மறு நாள் காலை ஹோட்டல் மானேஜரிடம் சென்றோம், ”கட்டணத்திற் செக் கொடுக்கிறோம்”
என்றோம்.
அவர் ”நேற்று நடந்த ஏல நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் சிறப்பாக நடத்தினீர்கள். உங்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது/ நீங்கள் எல்லாரும்,
எந்த ஊதியத்தையும் எதிர்பாராது உழைப்பது நிதர்சனமாகத் தெரிந்தது இரவு இது பற்றிய எண்ணங்களுடன் தூங்கப்போனேன். காலையில் முடிவெடுத்தேன். “ஹோட்டல் அரங்கத்தை உபயோகித்ததற்குத் தரவேண்டிய கட்டணத்தை முழுவதுமாக WAIVE பண்ணிவிட்டேன்…. எந்த கட்டணமும் நீங்கள் தரவேண்டாம்” என்று சொல்லி, மலர்ந்த முகத்துடன் கை குலுக்கி விடைகொடுத்தார்.
அவர் சொன்னதைக் கேட்ட அனைவரும் அப்படியே நெகிழ்ந்து உறைந்து போனோம்.
இரண்டு காது இருக்கே ?
மற்றொரு சமயம் நிறுவனமத்திற்கு நிதி திரட்ட பிரபல பாடகர் பீம்சென் ஜோஷியின் நிகழ்ச்சியை, டில்லி மாவ்லங்கர் ஹாலில் நடத்த ஏற்பாடு செய்தோம்.
அவர் புனேயிலிருந்து வந்து போகும் செலவு, நல்ல காலம் எஙகள் தலையில் விழவில்லை. அவர் அகில இந்திய ரேடியோவின் நேஷனல் புரோகிராமிற்காக டில்லி வந்து ஒலிப்பதிவு செய்யவிருக்கிறார் என்று தெரிந்தது. அதனால் ரேடியோ நிலைய ரிகார்ட் செய்யும் தேதிக்கு அடுத்த நாள், கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டோம். டிக்கெட்டுகள் விற்பனையும் சுறுசுறுப்பாகத் தொண்டர்கள் செய்தனர்..
கச்சேரியன்று ஹால் வராந்தாவில் இரண்டு, மூன்று மேஜைகளில் டிக்கெட்டுகளை வைத்து தொ ண்டர்கள் விற்பனை செய்துக் கொண்டிருந்ததார்கள்.
ஒரு மேஜையின் அருகில் நான் நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான பெண்மணி வந்தார். பளிச்சென்ற சிரிப்பு.. தும்பைப்பூ போன்ற வெள்ளைப் புடவை, கழுத்தில் மெல்லிய சங்கிலி..(அதில் இரண்டு மூன்று வைரக் கற்கள் பதிந்திருந்தன என்று நினைவு) அவர் தன் கைப்பையை.த் திறந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து முதல் வகுப்பு டிக்கெட் கேட்டார்.
அவரிடம் பணிவுடனும், லேசான புன்னகையுடன் “மேடம்… ஒரு டிக்கெட்தானா.? இரண்டு வேண்டாமா?” என்று கேட்டேன். குறும்புதான்..
அவரோ சாதுவாக” நான் தனியாகத்தான் வந்திருக்கிறேன்..
இரண்டு எதற்கு?” என்று கேட்டார்.
“இருக்கலாம்.. நீங்கள் தனியாக வந்திருந்தாலும், உங்களுக்கு இரண்டு காதுகள் இருக்கிறதே, பாட்டை ரசிக்க” என்றேன்.
அவர் உடனே முகம் மலர சிரித்துக் கொண்டே ”ஆமாம். சரி, இன்னொரு டிக்கெட் கொடுங்கள்” என்று சொல்லியபடியே இன்னொரு 500 ரூபாய் நோட்டை நீட்டினார்.
“மேடம், நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன். சீரியசாக எடுத்துக்கொண்டு விட்டீர்களா! ”என்றேன்.
“இல்லை.. இல்லை உங்கள் தொண்டு நிறுவனம் சிறப்பான பணி செய்கிறது. நான் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறேன்.” என்று சொல்லி, இன்னும் ஒரு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போனார்.
”Where wealth accumulates men tend
to decay” என்று ஆலிவர் கோல்ட்ஸ்மித் சொன்னார். அவருடைய பெயருக்குத் தகுந்த மாதிரி எழுதிய அற்புத வரி இது. ஆனால் இந்த பெண்மணி விஷயத்தில் அது தவறாகப் போய் விட்டன! நான் நெகிழ்ந்து போய் விட்டேன்!