இது ஒரு பழைய ரேடியோ அறிவிப்பாளரைப் பற்றிய துணுக்குக்
கட்டுரை. பழைய என்றால் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முந்தையது. ஒரு பிரெஞ்சு ரேடியோ அறிவிப்பாளரின் அனுபவம்.
மார்செல் லபோர்ட் என்ற பிரெஞ்சு அறிவிப்பாளர், 1925இல் நேயர்களிடமிருந்து தனக்கு வந்த சில கடிதங்களைப் பிரசுரித்தார். அவருடைய
குரலுக்கு தனி ஈர்ப்பு சக்தி இருந்திருக்க
வேண்டும். அவர்,
"மான்ஸியர் ரேடியோலா' என்ற பெயரில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
"...சற்று வெட்க ஊணர்வுடன்தான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். நான் தினமும்
நீங்கள் ரேடியோவில் பேசுவதைக் கேட்கிறேன். உங்கள் குரலின் ஏற்ற இறக்கமும் குழைவும், என் உணர்வுகளுக்கு ஆழ்ந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாக
உங்களிடம் காந்தம் போல நான் இழுத்துச் செல்லப்படுகின்றேன்.