சந்தடி சாக்கில் கந்தகப் பொடி
அமெரிக்க ரேடியோ மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் LARRY KINGன் பேட்டி நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றவை.
ஒரு சமயம் Rod McKuen என்ற கவிஞர் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். அவருடைய கவிதைப் புத்தகம்
அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் பிரசுரமாகியிருந்தது. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் அவர் Larry King இடம், “இந்தப் பேட்டி நிகழ்ச்சியின் போது என் புதிய கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா
ஓஹோ என்று எதுவும் கூறப் போவதில்லை.” என்றார். ஆனால் நிகழ்ச்சியின் போது தன் புத்தகம் பற்றிஒரு சின்ன அறிவிப்பைச் செய்து விட்டார்.
அவர் சொன்னது: என்னுடைய புதிய கவிதைப்
புத்தகம் வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகத்தை வாங்கி
அட்டையின் ஒரு மூலையை வெட்டி எடுத்து எனக்கு அனுப்புபவர்களுக்கு என்னுடைய
சமீபத்திய இசைத்தட்டை இலவசமாக அனுப்பி வைப்பேன்.
நுணலும் தன் வாயால் கெடும். கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துப்
பதினைந்தாயிரம் (2,15,000) ரிக்கார்டுகளை அனுப்ப
வேண்டி வந்ததாம். புத்தக விற்பனையில் கிடைத்த ராயல்டி தொகை வெறும் சோளப் பொறியாகி விட்டதாம். பாவம், கவிஞர்!