அந்த காலத்தில்- அதாவது, அறுபதுகளில் ஒரு
ஸ்கூட்டர் வாங்குவது மிக கஷ்டமான காரியம்.
புக் பண்ணி விட்டு பல
வருடங்கள் தவமிருக்க வேண்டும்.
அதன் பலனாக ஸ்கூட்டர் வாங்கி விட்டால் அடுத்த
பிரச்னை டிரைவிங்
லைசென்ஸ் வாங்குவது.
ஆர்.
டி.
ஓ
அலுவலகத்தில் “
சார்,
மணி என்ன?”
என்று கேட்டால் கூட 'மணி’ கொடுத்தால்
தான் பதில் கிடைக்கும்!
போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தினால் ஒரு
செகண்ட் ஹாண்ட் ஸ்கூட்டர் கிடைத்தது. LEARNERS LICENCE -ம் ஒரு மணி
கியூவில் நின்று வாங்கிவிட்டேன்.
ஒரு மாதம் ஆன பிறகு, பக்கா டிரைவிங்
லைசென்ஸ் வாங்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டு (அதாவது கவலைப் பட்டுக்
கொண்டு) இருந்தேன்.
என் நண்பர் சர்மாஜியிடம்
பேச்சுவாக்கில் என் பிரச்னையைச் சொன்னேன். ”மாமாஜி… எனக்கு ஹிந்தியும் தெரியாது..
லஞ்சம் கொடுக்கவும் தெரியாது” என்றேன்.
”அங்கிள்.. நோ..பிராப்ளம்.
இது பெரிய காரியமா?.. நான் குர்காவ் R T
O ஆபீசில் வாங்கித் தருகிறேன். என் வீடு குர்காவில்தான் இருக்கிறது. பத்து நாளைக்கு
முன்பு போயிருந்தேன். புதுசாக ஒரு ஆபீசர் – இளைஞர். ரொம்ப சூட்டிகையான ஆசாமி - இருக்கிறார்..
லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான்
உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார். (குர்காவ் - டில்லி தூரம் கிட்டதட்ட 25 கிலோமீட்டர்.)
(சர்மா
எல்லாருக்கும் மாமாஜி. அவருடைய கைங்கரியத்தால் எல்லாருக்கும் நான் ‘அங்கிள்” ஆன
கதையை ஒரு பதிவாகப் பின்னால் போடுகிறேன்!)
“ சரி..
சர்மாஜி.. டில்லியில் இருப்பவருக்கு குர்காவில் இருக்கும் ஆபீசில் லைசென்ஸ்
கொடுப்பார்களா?” என்று கேட்டேன்.
“என்
வீட்டின் முதல் மாடியில் குடி இருக்கிறீர்கள் நீங்கள் என்பதை மறந்து விட்டீர்களா?”
என்று கண்ணைச் சிமிட்டினார்! புரிந்து கொண்டேன்.