November 24, 2014

பென்குரியனும் பில் கேட்ஸும்

 சில பதிவுகளுக்கு முன்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த பென் குரியனைப் பற்றி எழுதி இருந்தேன். ( இங்கே சொடுக்கவும்: பென் குரியன் பதிவு
அதில் ஒரு சுவையான தகவலை எழுத விட்டு விட்டேன். அதை இங்கு தருகிறேன்.

இன்னிக்கு உங்கள் வேலை
David Ben-Gurion
 பென் குரியன் பிரதமராக இருந்த ஒரு சமயம் (செப்டம்பர் 1953 வாக்கில்) தன் வீட்டில் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையிலிருந்த அவருடைய மனைவி குரல் கொடுத்தாராம் ”பென் குரியன். இன்னிக்கு உங்க டியூட்டி” என்று,

“ எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் மினிட்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சமையலறைக்குப் போய் பாத்திரங்களைத் தேய்த்து வைத்து விட்டு வந்தாராம். அன்று  அவர் பாத்திரம் தேய்க்க வேண்டிய முறை தினமாம்!

இப்போது இதை எழுதியதற்கு ஒரு காரணம் இருக்கிறது:

’மைக்ரோஸாஃப்ட்’ பில் கேட்ஸின் மனைவி   MELINDA GATES, ’டைம்ஸ்’ வார இதழின் பத்துக் கேள்விகள் என்ற பகுதியில் இந்த வாரம்   இடம் பெற்றிருக்கிறார்..
Melinda Gates
அதில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் இதோ.
டைம்ஸ் நிருபர்: உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) எப்போதாவது பாத்திரம் கழுவி எடுத்து வைப்பாரா?

MELINDA GATES:  உண்மையைச் சொல்லப் போனால் ‘இல்லை’  இரவு டின்னருக்குப் பிறகு, எல்லாரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.
பாத்திரங்களைக் கழுவுகிற வேலை அவருக்குப் பிடிக்கும்.
அவருடைய வீட்டில் சகோதரியுடன் வளர்ந்தவர். சகோதரியும் அவரும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவது வழக்கம்.
பாத்திரங்களை டிஷ் வாஷரில்   ’லோட்’ செய்ய  அவருக்குப் பிடிக்கும். கழுவின பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலை பிடிக்காது... அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் வேலையை அவர் செய்வதற்கு நாங்கள் விடுவதில்லை!

9 comments:

  1. வணக்கம்
    அறியமுடியாததகவல் அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பதிவு போட்ட ஒரு நிமிடத்தில் பின்னூட்டம் எழுதி இருக்கிறீகளே. மிக்க நன்றி. அடுத்த பதிவு சற்று பெரிதாகப் போடுகிறேன்!
    -கடுகு

    ReplyDelete
  3. அது சரி, பில் கேட்ஸ் வீட்டில் (வீடு?! அரண்மனையில்!) தட்டு, பாத்திரங்கள் எடுத்து வைக்க வேலை ஆட்கள், ரோபோக்கள் இல்லையாமா! (இப்படி எல்லாம் ட்றிவியா வந்தால் தான் டைம்ஸ் கட்டுரை கொஞ்சம் இண்டெரெஸ்டிங்க் ஆக இருக்கும் என்று போட்டிருப்பார்கள்! (எதிர் பார்த்ததிற்கும் சீக்கிரமாகவே புது பதிவு போட்டதற்கு நன்றி! உங்களால் ஓய்வு எடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்!) - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. சார்... யாராக இருந்தாலும், அவருடைய மனைவிக்கோ கணவருக்கோ ஒரு சாதாரண மனிதன் தான். அவர் குழந்தைகளுக்கு ஒரு தகப்பன் தான். விகடனில் படித்தது என்று ஞாபகம். ஜக்கி வாசுதேவரைப் பற்றி (கோயமுத்தூரில் இருக்கும் குரு.) அவர் பெண், 'நான் அப்பாவிடம் பேசுவதுபோல்தான் பேசுவேன், சண்டை போடுவேன்' என்று எழுதியிருந்த 'நினைவு.

      Delete
  4. ஜெ அவர்களுக்கு,
    இல்லை. மற்ற கேள்விகள் 9-ம் சற்று சீரியஸான கேள்விகள்.

    ReplyDelete
  5. நிறைய எழுதுங்கள் சார். என்னைக் கேட்டால் தட்டச்சு செய்வதற்கு யாராகிலும் வைத்துக்கொண்டாவது எழுதலாம். உங்களைப் போன்றவர்கள் அனுபவச் (படிப்புச்) சுரங்கம். எத்தனை விஷயங்கள் எழுதலாம்.

    ReplyDelete
  6. சுவையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,
    மிக்க நன்றி. நிறைய எழுதுகிறேன்.
    -கடுகு

    ReplyDelete
  8. வழக்கம் போல் இந்த பதிவும் நகைச்சுவை ,மற்றும் கருத்துடன் பதிவு செய்திருப்பது சந்தோசத்தை கொடுக்கிறது மென்மேலும் நீங்கள் பதிவு
    செய்து உங்கள் அனுபவங்களை பகிரவேண்டும் என்பது என் விருப்பம்.
    கே.ராகவன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!