# குடி போதையில் வாகனம் ஓட்டாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சொந்த வாகனம் இல்லாதவர்கள்!
# காதலுக்குக் கண் இல்லை; கலியாணம் ஆன பிறகு தான் கண் தெரிய ஆரம்பிக்கிறது!
# எத்தனையோ வருஷங்களாக விலை ஏறாமல் இருப்பவைகளில் ஒன்று: பத்து பைசா தபால் தலை.
# விறகு அடுப்பைப் பார்த்து, கரி அடுப்பைப் பார்த்து, மரத்தூள் அடுப்பைப் பார்த்து, நூதன் ஸ்டவ் அடுப்பைப் பார்த்து, காஸ் அடுப்பைப் பார்த்து, இண்டக் ஷன் அடுப்பைப் பார்த்த தலைமுறை என்னுடையது!
# அன்னம், புறா, மயில், கிளி ஆகிய பறவைகளைக் காதலர்கள் தூது விட்ட காலம் போய் இப்போது ஈ விடு தூதுதான் கொடிகட்டி பறக்கிறது.-- ஈ (மெயில்)
# இப்போதெல்லாம் சில பொதுக் குழு கூட்டங்கள் மதுக் குழு கூட்டமாகி விடுகின்றன.
#காதலியாக உள்ளவரை தேவதை; கலியாணம் ஆகிவிட்டதும் ‘தே’ மறைந்து விடுகிறது.
# காயமே இது பொய்யடா,...காற்றடைத்த பையடா.. பாடிய சித்தர், ‘சிப்ஸ்’ சித்தரா?
# கிளைகள்தான் வளர்ச்சிக்கு அடையாளம் - மரத்திற்கும் சரி, ஒரு நிறுவனத்திற்கும் சரி.
# கடைசி நிமிஷம் என்பது இல்லை என்றால் பல சமயம் பல வேலைகள் நடந்திருக்காது.
# வயசு ஆனதாலேயே WISE ஆகிவிட்டதாக நினைக்கக்கூடாது.
# சில கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை; பல சமயம் பதில்களுக்குக் கேள்விகள் கிடைப்பதில்லை.
# பத்துக்கு பூஜ்யம் மார்க் வாங்குபவனை விட அதிக மக்கு, நூறுக்கு பூஜ்யம் வாங்குபவன்.
# இருக்கக்கூடிய, செய்யக்கூடிய என்று வார்த்தைக்கு வார்த்தை ’கூடிய’ போட்டால்தான் சில பேச்சாளர்களுக்குப் பேசவே வரும்.
# கணவனும் மனைவியும் கத்திச் சண்டை போட்டுக்கொண்டிருந்தால், பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் யார்? பக்கத்து ஃப்ளாட்காரர்கள்.
# ஆடம்பரம் எனக்குப் பிடிக்காது என்று சொல்வதற்கு, பணம் காசு உள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை; பொய்யர்களாக இருந்தால் போதும்!

மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பாப்கார்ன் நொறுக்ஸ் = ரசனையாக இருக்கு.
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
பாப்கார்ன் மொத்தமும் கல கல. அருமை
ReplyDelete'பாப்கார்ன்' நல்லா சிப்ஸ் மாதிரி இருந்தது.
ReplyDelete//ஃப்ளாட்கார்கள்//
=> ஃப்ளாட்கா 'ர' ர்கள்
6, 7, 9, 16 ஆகிவை வெகு பிரமாதம். மற்றவையெல்லாம் பிரமதம்! பாப்கார்ன் க்ரிஸ்ப் குறையாமல் சுவையாய்...!
ReplyDeleteபாப்கார்ன் - ஒவ்வொன்றும் சுவை.....
ReplyDeleteVery good hot as popcorn eating during the winter in Delhi
ReplyDeleteகாயமே இது பொய்யடா,...காற்றடைத்த பையடா.. பாடிய சித்தர், ‘சிப்ஸ்’ சித்தரா?// Haa Haa.. Super
ReplyDeleteவயசு ஆனதாலேயே WISE ஆகிவிட்டதாக நினைக்கக்கூடாது.// Enjoyed it !
ReplyDelete