ஐயோ சிக்கடாஸ்
“கொசுத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” ( என்று எல்லா வலைப்பதிவுகளிலும் ((என் வலைப்பதிவுகளுக்கு நீங்கலாக!?) பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி,
அமெரிக்காவில் கிழக்குக் கரையோரம் உள்ள மாநிலங்களில் ஒரு படையெடுப்பு 17 வருஷங்களுக்கு ஒரு முறை ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் தவறாமல் நடந்து வருகிறது. கிட்டதட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும் சிக்கடாஸ் (CICADAS) மில்லியன் கணக்கில் -- இல்லை, இல்லை பில்லியன் கணக்கில் - வந்து வீதியில் உள்ள மரங்களையெல்லாம் அப்பிக் கொள்கின்றன. அவை போடும் இரைச்சல் (கோஷ்டிகானம்!) கிட்டதட்ட வயல் வெளிகளில் வைக்கப்படும் தண்ணீர் பம்புகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்!
இந்த வருடம் படையெடுப்பு வருஷம். சுமார் 300 வருஷங்களாக இது நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 17 வருஷம் அவை அங்கு இருக்கிறதாம்? மண்ணுக்குள்!
இந்த வருடம் சிக்கடாஸின் எண்ணிக்கை அந்தந்த பகுதி மக்கள் எண்ணிக்கையைப் போல் தோராயமாக 600 மடங்காக இருந்ததாம்!
”ஐயோ, சிக்கடாத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” என்று பின்னூட்டம் போடவிரும்புபவர்கள் 2030 வரை காத்திருக்க வேண்டும்!
2030-ல் அவை விஜயம் செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை!
ரயிலில் கவிதை
அமெரிக்காவில் விமானம், ரயில், பஸ். கார், சொந்த ஹெலிகாப்டர் என்று பல வேறு வாகனங்களில் ஊருக்குள்ளும், ஊர் விட்டு ஊரும் சளைக்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.