தெரிந்த பெயர் ; தெரியாத விவரங்கள்
ஜார்ஜ் பெர்னாட்ஷா (26 July 1856 – 2 November 1950)
3.அவரைப் பற்றிய ஒரு மாதிரியான’ துணுக்கும் சற்று பிரபலமானது.
ஒரு பெண்மணி (Lady Astor ?) அவரிடம் காதல் வயப்பட்டு(!!) சொன்னாராம்: “நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம். நமக்கு பிறக்கும் குழந்தை, உங்களைப் போல் அறிவாளியாகவும் என்னைப் போல் அழகாகவும் இருக்கும்” என்றார்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா (26 July 1856 – 2 November 1950)
ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் பெயர் தெரிந்த அளவு,
அவரைப் பற்றிய பல தகவல்கள் பலருக்குத் தெரியாது.
அவரைப் பற்றிய மூன்று துணுக்குகள் ஓரளவு பிரபலம்.
1. கிரிக்கெட்டைப் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து.
1. கிரிக்கெட்டைப் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து.
- "Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools."
2. My Fair Lady அபாரமான திரைப்படம். அவர் எழுதிய PYGMALION நாடகத்தின் திரை வடிவம்.
3.அவரைப் பற்றிய ஒரு மாதிரியான’ துணுக்கும் சற்று பிரபலமானது.
ஒரு பெண்மணி (Lady Astor ?) அவரிடம் காதல் வயப்பட்டு(!!) சொன்னாராம்: “நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம். நமக்கு பிறக்கும் குழந்தை, உங்களைப் போல் அறிவாளியாகவும் என்னைப் போல் அழகாகவும் இருக்கும்” என்றார்.
“நீ சொல்வது சரிதான். ஒருக்கால், குழந்தை என்னைப்
போல் ‘அழகாகவும்’, உன்னைப் போல் ‘அறிவாளி’யாகவும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்”
என்று சொன்னாராம் ஷா!
( இது ஒரு ரீல் துணுக்கு. இது மாதிரி சர்ச்சில், ஐன்ஸ்டீன்
என்று பல பிரபலங்களின் பெயர்களிலும் பல ஹாலிவுட்
நடிகைகளின் பெயர்களிலும் இதே துணுக்கு வந்திருக்கிறது!)
* ஷா எழுதிய நாடகங்கள் எல்லாம் 36 தொகுதிகளாக வெளியாகி
உள்ளன.
*ஷா முழுக்க முழுக்க சைவமாக இருந்தவர்.
*அவருக்கு ஆங்கில மொழியின் ‘ஸ்பெல்லிங்’-கை சீர்திருத்த வேண்டும் என்ற வெறி இருந்தது. நோபல் பரிசுத்தொகயில் ஒரு பகுதியை இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கொடுத்து விட்டார்.
*அவருக்கு ஆங்கில மொழியின் ‘ஸ்பெல்லிங்’-கை சீர்திருத்த வேண்டும் என்ற வெறி இருந்தது. நோபல் பரிசுத்தொகயில் ஒரு பகுதியை இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கொடுத்து விட்டார்.